சிவாலயங்களில் இறைவன் சிவபெருமானைத் தரிசனம் செய்யும் முன்பு நந்திதேவரை வணங்கி, அவர் அனுமதியுடன் சிவபெருமானை தரிசனம் செய்வது வழக்கமாக இருக்கிறது. பிரதோஷக் காலத்தில், நந்தி மற்றும் சிவபெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. நந்திதேவரை வணங்குவதும், அவரைச் சுற்றி வலம் வந்து வேண்டுவதும் எண்ணிலா நற்பலன்களைக் கொடுக்கும். நந்தியை எத்தனை முறை பிரதட்சணம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும்? என்பது குறித்துத் தெரிந்து கொள்ளலாம். வாங்க...
* 3 முறை வலம் வந்தால், விரும்பும் இஷ்ட சித்தி கிடைக்கும்.
* 5 முறை வலம் வந்தால், எடுத்த செயலில் வெற்றி கிடைக்கும்.
* 7 முறை வலம் வந்தால், அனைவரும் போற்றக் கூடிய சற்குணங்கள் கிடைக்கும்.
* 9 முறை வலம் வந்தால், உலகம் போற்றும் புத்திரப் பலன் கிடைக்கும்.
* 11 முறை வலம் வந்தால், நோய் நொடி இல்லாத ஆயுள் அதிகம் கிடைக்கும்.
* 13 முறை வலம் வந்தால், வேண்டிய சித்தி கிடைக்கும்.
* 15 முறை வலம் வந்தால், அதிக அளவு செல்வம் கிடைக்கும்.
* 17 முறை வலம் வந்தால், கிடைத்த செல்வம் அதிகரிக்கும்.
* 108 முறை வலம் வந்தால், அஸ்வமேதயாகம் செய்த பலன் கிடைக்கும்.
* 1008 முறை வலம் வந்தால், ஒரு வருட தீட்சையாகப் பலன் கிடைக்கும்.