காதலின் சின்னம் என்ன என்று கேட்டேன், கல்லறை என்றாள்.
கல்லறை போகப் பாதை கேட்டேன், என்னைக் காதலி என்றாள்.
*****
காதல் என்பது பஸ்ல போற மாதிரி. ஆனா கல்யாணம் என்பது விமானத்தில போற மாதிரி. பிடிக்கலேன்னா பஸ்ல இருந்து இறங்கிக்கலாம். ஆனால், விமானத்தில இருந்து...?
*****
அவள் என்னைப் பார்த்துச் சிரித்தாள், கன்னத்தில் குழி விழுந்தது. நான் அவளைப் பார்த்துச் சிரித்தேன். வாழ்க்கையேக் குழியில் விழுந்தது.
*****
பிடிக்காததெல்லாம் பிடித்திருந்தது…காதல் என்றிருந்தேன்… பிறகுதான் தெரிந்தது பிடித்தது காதல் இல்லை பைத்தியம் என்று…
*****
நான் உன்னைக் காதலிக்கிறேன் என்று சொன்னால், அந்தப் பெண் செருப்பு வரும் என்றாள். பாவம், அந்தப் பெண்ணுக்குக் காது கேட்காது போல.... நான் ஒன்று சொன்னால், அது ஒன்று சொல்லுது…
*****
லவ் லட்டருக்கும், எக்ஸாம்’க்கும் என்ன வித்தியாசம்?
லவ் லெட்டர் - மனசுக்குள்ள நிறைய இருக்கும்... ஆனா எழுத வராது…
எக்ஸாம் - மனசுக்குள்ள ஒண்ணுமே இருக்காது… ஆனா நிறைய எழுதுவோம்
*****
அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை… அந்தப் பெண்ணையேக் கல்யாணம் பண்ணிட்டீங்கன்னா நீங்கக் கொத்தடிமை…
*****
விக்கல் வரும்போது சொல்வார்கள் “யாரோ உன்னை நினைகிறார்கள் என்று”. அது மட்டும் உண்மையாக இருந்தால், என் காதலி விக்கியேச் செத்துபோய் இருப்பாள்.
*****
பசங்க உள்ளம் ஒரு கோவில். அதனால்தானோ என்னவோஅவன் “ஐ லவ் யூ…” சொல்லும்போதெல்லாம் அவள் செருப்பைக் கழற்றி விடுகிறாள்.
*****
சாப்பாட்டுக்கும் காதலுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு. இரண்டுக்கும் எல்லை தாண்டினா வாந்தி வந்திடும்.
*****
காதல் பண்றவனுக்கு முகம் பிரகாசமா இருக்கும்… காதல் பண்ணாதவனுக்கு வாழ்க்கையேப் பிரகாசமா இருக்கும்.
*****
காதலுக்கும் 7.29 மணிக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு அது என்ன தெரியுமா?
இரண்டுக்குமே அடுத்து ஏழரைதான்…
*****
ஆண்கள் காதலிப்பது, நண்பர்கள் சேர்த்து வைப்பார்கள் என்ற நம்பிக்கையில்…
பெண்கள் காதலிப்பது, பெற்றோர்கள் பிரித்து வைப்பார்கள் என்ற நம்பிக்கையில்…
*****
உனக்கு ஒரு பொண்ணு “ஹாய்” சொல்கிறாளென்றால், கண்டிப்பா உனக்கு முன்னாடி வேற யாருக்கோ “Bye” சொல்லி இருப்பா..!
*****
காதலில் எத்தனை முறை தோற்றாலும் பெரிய விசயமல்ல. ஒரு முறை வெற்றியடந்து பார்த்தால்தான் தெரியும். தோல்வி எவ்வளவோ பரவாயில்லை என்று!
*****
காதல் ஒரு மழை மாதிரி. நனையும் போது சந்தோஷம், நனைந்த பின்பு ஜலதோஷம்.
*****
என் காதலை அவளிடம் சொன்னேன். அவள் சிரித்துக்கொண்டே ஒரே வார்த்தை சொன்னாள்… “நீ ஆயிரத்தில் ஒருவன்!”
*****
ஒரு பையன் “சிம்” மாத்தினா யாரோ ஒரு பொண்ணை லவ் பண்ண ஆரம்பிச்சிட்டான்னு அர்த்தம்..!
ஒரு பொண்ணு “சிம்” மாத்தினா யாரோ ஒரு பையனை கழட்டி விடப்போறான்னு அர்த்தம்..!
*****
என் மரணம் கூட அவளுக்கு தெரியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். என் நெற்றியில் இருக்கும் ஒரு ரூபாய் காசுக்கும் ரீசார்ஜ் செய்யச் சொல்லுவாள்!
*****
பையன்: நான் சாப்பிடும் போது எல்லாம் உன்னைத் தான் நினைப்பேன்.
பொண்ணு: நான் கை கழுவும் போது எல்லாம் உன்னை தான் நினைப்பேன்
*****
நமக்கு வர மனைவி வெள்ளையா இருக்கனும்கிறது முக்கியமில்லை. கடைசி வரைக்கும் தொல்லையா இருக்க கூடாது அது தான் முக்கியம்
*****
காதலியை காலேஜில் சந்தித்துப் பேசுபவன், வீரன்!
காதலியை அவள் வீட்டுக்கே சென்று சந்திப்பவன், மாவீரன்!!
*****
நம்மை அறியாமல் தவறிக் கிணத்துக்குள்ள விழுகிறதுதான் – காதல்
விழுந்த பின்பு அது பாழுங்கிணறு என்று தெரிய வர்றதுதான் – கல்யாணம்
*****
காதலை விலை கொடுத்து வாங்க முடியாது. ஆனா, அதைத் தொடர்ந்து செய்ய நிறையச் செலவு செய்ய வேண்டியிருக்கும்.
*****
காதலித்து பார்! : கடலில் நடப்பாய்! விண்ணில் மிதப்பாய்! காற்றில் பறப்பாய்!
இன்னுமா புரியல்ல… செத்துப் போய்விடுவாய்!
*****
ஒரு பெண்ணுக்கு ஆள் இருக்கா, இல்லையான்னு கண்டு பிடிக்கிறது ரொம்ப ஈசி. செல்போன் இல்லாம அரை மணி நேரம் இருந்தாலே போதும்.
*****
காதலிக்க ஆரம்பித்த பின்னர் ஆண்கள் பெண்களுடைய மின்னஞ்சல், முகநூல் ஐடியைக் கேட்கின்றனர்.
ஆனால், பெண்கள் ஆண்களுடைய பாஸ்வேர்டைக் கேட்கின்றனர்.