அன்புடையீர்! வணக்கம்.
* உலகின் எப்பகுதியில் இருப்பவரும் முத்துக்கமலம் இணைய இதழுக்குத் தமிழில் படைப்புகளை அனுப்பலாம்.
* முத்துக்கமலத்திற்கு அனுப்பும் படைப்புகள் பிற அச்சிதழ் / இணைய இதழ் / இணைய ஊடகங்கள் எதிலும் வெளியிடப்படாததாக இருக்க வேண்டும்.
* முத்துக்கமலம் இணைய இதழில் வெளியாகும் அனைத்துப் படைப்புகளுக்கும் அதன் படைப்பாளர்களே முழுப் பொறுப்பு என்பதுடன் படைப்புகள் யாருடைய மனதும் புண்படாதவாறு இருக்க வேண்டும் என்பதையும் உணர்ந்து படைப்புகளை அனுப்ப வேண்டும்.
* படைப்புகளின் கீழ்ப்பகுதியில் படைப்பாளரின் முழு முகவரி இடம் பெற்றிருக்க வேண்டும். அலைபேசி எண்ணும் சேர்த்து வழங்குவது விருப்பப்படுகிறது.
* படைப்புகளை வேர்டு கோப்பு (MS Word File) அல்லது குறிப்பேடு குறிப்புப் பலகையில் (Note Pad) தமிழ் ஒருங்குறி எழுத்துரு (Tamil Unicode Font) கொண்டு தட்டச்சு செய்து அனுப்பிட வேண்டும். பிற எழுத்துருக்கள் கொண்டு தட்டச்சு செய்யப்பட்ட கோப்புகள், பட வடிவக் கோப்புகள் (Picture Image), பிடிஎப் கோப்புகள் (PDF File) போன்ற வடிவங்களில் இருப்பின், அந்தப் படைப்பு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளாமலேயே நிராகரிக்கப்படும்.
* முத்துக்கமலம் இணைய இதழ் மாதமிருமுறையாக, ஆங்கிலத்தேதி 1 மற்றும் 15 ஆம் தேதிகளில் புதுப்பிக்கப்படுவதால் புத்துப்பித்தலுக்கு ஐந்து நாட்களுக்கு முன்பாகக் கிடைக்கும் படைப்புகள் மட்டுமே பரிசீலிக்கப்படும். தாமதமாகக் கிடைக்கும் படைப்புகள் அனைத்தும் அடுத்து வரும் புதுப்பித்தலுக்கே பரிசீலிக்கப்படும்.
* தேர்வு செய்யப்பட்ட படைப்புகள் அனைத்தும் முத்துக்கமலம் இணைய இதழில் அடுத்து வரும் புதுப்பித்தலில் இடம் பெறும். மூன்று மாத காலத்திற்குள் இடம் பெறாவிடில், அந்தப் படைப்பு நிராகரிக்கப்பட்டதாகக் கொள்ள வேண்டும்.
கவனிக்க:
* முத்துக்கமலம் இணைய இதழின் கட்டுரைப் பகுதிக்கு வரும் கட்டுரைகள் அனைத்தும் கட்டுரைக்காக அமைக்கப்பட்டிருக்கும் ஆசிரியர் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்படும். ஆசிரியர் குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்கள் பரிந்துரைக்கும் கட்டுரைகள் மட்டுமே முத்துக்கமலம் இணைய இதழில் இடம் பெறும்.
* முத்துக்கமலம் இணைய இதழுக்கு அனுப்பப்படும் படைப்புகளைப் பிற இணைய இதழுக்கு அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும். ஒரே படைப்பு பல இணைய இதழ்களில் இடம் பெறுவதை முத்துக்கமலம் விரும்புவதில்லை. அப்படி ஒரே படைப்பு பிற இணைய இதழ்களிலும் வெளியிடப்படும் நிலையில் அப்படைப்பாளரின் படைப்புகள் எதுவும் அடுத்து வெளியிடப்படாமல் நிறுத்தப்படும்.
* இது போல் முத்துக்கமலம் இணைய இதழின் மின்னஞ்சல் முகவரி தவிர, பிற மின்னஞ்சல் முகவரிகள் மின்னஞ்சலில் காணப்பட்டாலும், அடையாளம் காட்டப்படாத மின்னஞ்சல்கள் எனக் குறிப்பிடப்பட்டாலும் அந்தப் படைப்பு பரிசீலிக்கப்படாமலேயே நிராகரிக்கப்படும்.
* இணைய உலாவல் மையங்கள் வழியாக அனுப்பப்படும் படைப்புகளில் படைப்பாளரின் முழு முகவரி இடம் பெற்றிருக்க வேண்டு. அப்படி இடம் பெறாத நிலையில் அப்படைப்பு நிராகரிக்கப்படும்.
* முத்துக்கமலத்தில் வெளியிடப்படும் படைப்புகள் அனைத்தும் அதன் படைப்பாளர்களுக்கு முழு உரிமையானது. முத்துக்கமலம் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளுக்கு தற்சமயம் பரிசாக எதுவும் வழங்க முடியவில்லை.
* முத்துக்கமலம் இணைய இதழுக்கு அனுப்பப்படும் படைப்புகளை வெளியிடவோ அல்லது நிராகரிக்கவோ ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு. மேலும் படைப்புகளைப் படைப்பாளரின் கருத்துக்கள் மாறாதபடி முத்துக்கமலம் இணைய இதழுக்கு ஏற்றவாறு சுருக்கவோ, திருத்தம் செய்யவோ ஆசிரியருக்கு முழு உரிமையுண்டு.
கட்டுரை அனுப்புபவர்கள் கவனத்திற்கு:
முத்துக் கமலம் இணைய இதழுக்கு ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவோர் சில விதிமுறைகளைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். அவை;
* கட்டுரைத் தலைப்பின் கீழ், கட்டுரையாளர் முழுப் பெயர், கடவுச்சீட்டு அளவிலான ஒளிப்படம், படிப்பு/பணி, படிக்கும்/பணியாற்றும் கல்லூரி அல்லது நிறுவன முகவரி, அலைபேசி எண் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களும் இடம் பெற்றிருக்க வேண்டும்.
* கட்டுரையின் முடிவில், இக்கட்டுரை சொந்தமாக எழுதப்பட்டது என்பதுடன், அச்சு ஊடகம் அல்லது இணைய ஊடகம் அல்லது எந்தவொரு ஆய்வு மலரிலும் இடம் பெறவில்லை என்று உறுதி மொழி அளிக்கப்பட வேண்டும்.
* கட்டுரைகள் அனைத்தும் மொழி, கலை, இலக்கியம், வரலாறு, பண்பாடு, மானுடவியல், சமூகவியல் போன்ற களங்களில் ஆராய்ந்து எழுதப்பட்ட நல்ல கட்டுரைகளாக இருக்க வேண்டும்.
* ஆய்வுக் கட்டுரைகள் எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள், தொடரமைப்புப் பிழைகள், தட்டச்சுப் பிழைகள், தகவல் பிழைகள் இன்றி அமைய வேண்டும்.
ஆய்வு முறையியலைச் சரியாகப் பின்பற்றி எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆய்வுச் சிக்கல், கருதுகோள், ஆய்வு அணுகுமுறை, ஆய்வு நடை போன்ற கூறுகள் கண்டிப்பாக இருக்க வேண்டும். ஆதாரங்கள் நம்பகத்தன்மையுடன் இருக்க வேண்டும்.
* அடிக்குறிப்புகள், துணை நூற்பட்டியல் போன்றவை கண்டிப்பாக இடம் பெற வேண்டும்.
* வேறு அச்சு இதழ்களிலோ, ஆய்வுக் கோவைகளிலோ, தொகுப்பு நூல்களிலோ, இணைய இதழ்களிலோ வெளியிடப்பட்டிருக்கக் கூடாது.
* கருத்தரங்குகளில் வாசிக்கப்பட்டிருக்கக் கூடாது. அவ்வாறு வாசிக்கப்பட்டிருந்தால் அதற்கான குறிப்பு தரப்பட்டிருக்க வேண்டும்.
* வேறு நூல்களிலிருந்து நகலெடுத்து அனுப்பக் கூடாது.
* ஆய்வு நோக்கின்றி, வெறும் பாடல்களுக்கான விளக்கங்களாக அமையக் கூடாது. ஆய்வுக்குத் தேவையான சரியான தரவுகளுடன் ஆராய்ந்து தக்க முடிவுகளுடனான கட்டுரைகள் வரவேற்கத்தக்கன.
* ஏற்கனவே நிகழ்த்தப்பட்டுச் சொல்லப்பட்ட கருத்துக்களாக இல்லாமல், புதிய ஆய்வுப் பொருண்மைகள், முடிவுகளுடன் கூடிய ஆய்வுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மேற்கண்ட விதிமுறைகளைப் பின்பற்றி எழுதப்படாத கட்டுரைகள் ஆசிரியர் குழுவால் நிராகரிக்கப்படும்.
எச்சரிக்கை:
* முத்துக்கமலம் இணைய இதழில் இடம் பெறும் படைப்புகளுக்கும் எந்தப் பணமும் வழங்கப்படுவதில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.
* முத்துக்கமலத்தில் வெளியாகும் படைப்புகளைப் படைப்பாளரின் பெயருடன், “நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
* முத்துக்கமலம் ஆசிரியர் அனுமதியின்றி வெளியிடுபவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சட்ட நடவடிக்கைகள் அனைத்தும் தேனி மாவட்ட அளவிலான நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை ஆகியவற்றின் எல்லைகளுக்குட்பட்டது.
படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
msmuthukamalam@gmail.com
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.