விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
கணேஷ் அரவிந்த்
விநாயக சதுர்த்தியன்று 21 வகையான இலைகளைக் கொண்டு விநாயகரை வழிபடுவது சிறந்தது என்கின்றனர். ஒவ்வொரு இலைக்கும் தனிதனிப் பலன்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அந்த பலன்கள் குறித்த தகவல்கள் கீழே:
1. முல்லை இலை - அறம் வளரும்.
2. கரிசலாங்கண்ணி இலை - இல்வாழ்க்கைக்குத் தேவையான பொருள் சேரும்.
3. வில்வம் இலை - இன்பம், விரும்பியவை அனைத்தும் கிடைக்கும்.
4. அருகம்புல் - அனைத்து நலன்களும் கிடைக்கும்.
5. இலந்தை இலை - கல்வியில் மேன்மையை அடையலாம்.
6. ஊமத்தை இலை - பெருந்தன்மை கைவரப்பெறும்.
7. வன்னி இலை - பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கப்பெறும்.
8. நாயுருவி இலை - முகப் பொலிவும், அழகும் கூடும்.
9. கண்டங்கத்தரி இலை - வீரமும், தைரியமும் கிடைக்கப்பெறும்.
10. அரளி இலை - எந்த முயற்சியிலும் வெற்றி கிடைக்கும்.
11. எருக்கம் இலை - கருவிலுள்ள குழந்தைக்குப் பாதுகாப்பு கிடைக்கும்.
12. மருதம் இலை - குழந்தைப்பேறு கிடைக்கும்.
13. விஷ்ணுகிராந்தி இலை - நுண்ணிவு கைவரப்பெறும்.
14. மாதுளை இலை - பெரும் புகழும், நற்பெயரும் கிடைக்கும்.
15. தேவதாரு இலை - எதையும் தாங்கும் மனதிடம் கிடைக்கும்.
16. மருக்கொழுந்து இலை - இல்லற சுகம் கிடைக்கப்பெறும்.
17. அரசம் இலை - உயர்பதவியும், பதவியால் பெருமையும் கிடைக்கும்.
18. ஜாதிமல்லி இலை - சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம் கிடைக்கப்பெறும்.
19. தாழம் இலை - செல்வச் செழிப்புக் கிடைக்கும்.
20. அகத்தி இலை - கடன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும்.
21. தவனம் கர்ப்பூர இலை - நல்ல கணவன்/மனைவி அமையப்பெறும்.
இந்த 21 இலைகளில் அருகம்புல் கொண்டு வழிபடுவதால் அனைத்து நலன்களும் கிடைக்கும் என்பதால் அருகம்புல் மிகச்சிறந்ததாக இருக்கிறது.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.