வேள்விகளில் சொல்லப்படும் மந்திரங்களும் அதனால் கிடைக்கும் பலன்களும் பற்றிய குறிப்பு இது.
1. ஸ்ரீ சக்தி பஞ்சாக்ஷரீ – அனைத்து வளங்களும், உடல் நலமும் கிடைக்கும்.
2. சுத்த பஞ்சாக்ஷரீ – விரும்பிய எண்ணங்கள் நிறைவேறும்.
3. சிவ அஷ்டாக்ஷரீ - அனைத்து எதிரிகள், மிருகங்கள், உடல் வலிகள் நீங்கும்.
4. சிவ பஞ்ச தசாக்ஷரீ – எட்டு வகையான செல்வங்களும் கிடைக்கும்.
5. சிதம்பர பஞ்சாக்ஷரீ – அறிவு அதிகரிக்கும். சிவனின் அருட்பார்வை கிடைக்கும்.
6. குரு தாரக பஞ்சாக்ஷரீ – அனைத்து மக்கள் அன்பைப் பெறுதல், அரசியல் வெற்றி, தேவ பலன்கள் கிடைக்கும்.
7. ம்ருத்யுஞ்ஜய த்ரயக்ஷரீ – மரண பயம் நீங்கும், ஆயுட்காலம் அதிகரிக்கும்.
8. சிதம்பர சபாநடன மந்த்ரம் – அனைத்துப் பாவங்களுக்குமான தோசங்கள் நீங்கும்.
9. நீலகண்ட மந்த்ரம் – எதிர்பாராத கொடிய ஆபத்தினின்று மீளல், ஆபத்து வராமல் தவிர்த்துக் கொள்ளவும் உதவும்.
10. மஹா நீலகண்ட மந்த்ரம் – பேய், பூதம், பிசாசு தொல்லைகளிலிருந்து விடுபட உதவுகிறது.
11. த்வனி மந்த்ரம் – மன அமைதி, சிவானந்த நினைவுகள் பெற உதவுகிறது.
12. சிவ காயத்ரீ – நினைவுத்திறன், சமயோசித புத்தி, புதிய யுக்தி, வாக்குத் திறன் அதிகரிக்கும்.
13. மார்கதர்சீ சிவ மந்த்ரம் – பயணம் இனிமையாக, எவ்வித ஆபத்துகளும் விபத்துகளும் நேராதிருக்க உதவுகிறது.
14. ருணமோசன சிவ மந்த்ரம் – கடன் நீங்க, தேவ, பித்ரு, ரிஷி கடன் அடைதல், பணவரவு, சேகரிப்பு அதிகரிக்கும்.
15. பசுபதி காயத்ரீ – அனைத்து விதமான கெடு பார்வைகளும் நீங்க, வழக்கில் வெற்றி பெற, குடும்பத்தி மகிழ்ச்சி ஏற்பட உதவுகிறது.
16. சிவ நவாக்ஷரீ - செயல் தடைகள், தேக்கநிலை ஆகியவற்றுக்குத் தீர்வு, நிர்வாகத் திறன் அதிகரித்தல், புது முயற்சிகள் வெற்றி பெறுதல்.
17. பாசுபதாஸ்த்ரம் – பேய், பூதத் தொல்லைகள் நீங்கவும், செய்வினைகள் அகலவும் உதவுகிறது.
18. ருத்ர காயத்ரீ – பாப தோசங்களிலிருந்து விடுபடுதல், நிரந்தர வெற்றி.
19. வித்யாப்ரத சிவமந்த்ரம் – புத்திக்கூர்மை, அறிவுடையவராதல், சொல் கவர்ச்சி, சரஸ்வதி அருளைப் பெற உதவுகிறது.
20. உமாமஹேஸ்வர மந்த்ரம் – குடும்ப ஒற்றுமை நெருக்கமாகுதல், மட்டற்ற மகிழ்ச்சி பெற உதவுகிறது.
21. ஆபத்துத்தாரக கௌரீவல்லப மந்த்ரம் – அனைத்து ஆபத்துக்களும் தடைகளும் நீங்கி, நிரந்தர வெற்றி உண்டாக உதவுகிறது.
22. ஸர்வபாபஹர பவ மந்த்ரம் – அனைத்துப் பாப தோசங்களும், தெரியாத பாதிப்புகளும் விலகுதல்.
23. ரக்ஷாப்ரத கௌரீ சிவ மந்த்ரம் – சீரான உடல் நலம், முகப்பொலிவு, மறுமலர்ச்சி, உடல் நலம் அதிகரித்தல்.
24. ம்ருத் ஸஞ்சீவினி – மரண பயம் நீங்கல், ஆயுட் காலம் அதிகரித்தல்.
25. பஞ்சதசீ சிவ மந்த்ரம் – அனைத்து செயல்களிலும் வெற்றி, செயற்கரிய செயல் செய்தல், வாழ்வில் ஏற்றமடைதல் போன்றவைகளுக்கு உதவுகிறது.
26. சுதர்ஸன மந்த்ரம் – செய்வினை, எதிரிகளின் தொல்லை, வியாபாரத் தடை நீங்குதல், மன அமைதி அடைய உதவுகிறது.
27. லக்ஷ்மி ந்ருஸிம்ஹ மந்த்ரம் – பணவரவு, கடன் அடைதல், பணப்புழக்கம், குடும்ப மகிழ்ச்சி கிடைக்கும்.
28. சுதர்ஸன நரஸிம்ஹ மந்த்ரம் – எதிரிகள் தொல்லை, வழக்கு வெற்றி, குடும்பத் தொழில் குழப்பங்கள் நீங்க உதவுகிறது.
29. வாஸுதேவ மந்த்ரம் – வறுமை, சந்தேகம், தீவினைகள் அகன்று இம்மை மறுமை நலன்கள் செழிக்க உதவுகிறது.
30. விஸ்வரூப மந்த்ரம் – மனபலம், வெற்றி கிடைக்கும்.
31. கந்தர்வராஜ மந்த்ரம் – தடை நீங்கித் திருமணம், குடும்பச் சூழ்நிலைச் சிக்கல்கள் சரியாகும், சுபநிகழ்வுகள் நடைபெறும்.
32. ஹயக்ரீவ மந்த்ரம் – புத்தியும் சக்தியும் தூண்டப்படுதல், கல்வியில் ஏற்றம், பெரும் புலமை பெறுதல், இனிய சொல் மெய்யுணர்வு உண்டாகும்.
33. நாமத்ரயம் – அனைத்துப் பாவங்களிலிருந்து விடுபடுதல், நல்ல சூழ்நிலை ஏற்படும்.
34. சுதர்ஸன அபரோ மந்த்ரம் – உள்மன பயம் நீங்குதல், மனநிறைவு, நிம்மதி கிடைக்கும்.
35. நரஸிம்ஹ மந்த்ரம் – பணவரவு, கடன் அடைதல், பணப்புழக்கம், குடும்ப மகிழ்ச்சி, நோய் வறுமை நீங்கி அனைத்து வளங்களும் கிடைக்கும்.
36. கருட மந்த்ரம் – விசம், நாக தோசம், கொடிய மிருக பயம் விலக உதவுகிறது.
37. மஹா கருட மந்த்ரம் - துணிவின்மை, பாவம், கெடு கிரக தோஷங்கள், கொடியவர் பயம் ஆகியன விலக உதவுகிறது.
38. தன்வந்த்ரீ மந்த்ரம் – முதுமை, நோய், பய உணர்ச்சி அகன்று துணிவு பெறுதல், நல்ல உடல் நிலை பெறுதல், ஆயுள் அதிகரிப்பு, நோய் வராமை போன்றவை அமையும்.
39. கருட காயத்ரீ மந்த்ரம் – தாமதம் நீங்கி எண்ணிய செயலை முடித்தல், விரைவில் வெற்றி பெற உதவுகிறது.
40. சுதர்ஸன காயத்ரீ மந்த்ரம் – ஞானம், சக்தி, பலம், செல்வம், நம்பிக்கை, அழகு பெற்று உடல் நலம் ஏற்பட உதவுகிறது.
41. தன்வந்த்ரீ காயத்ரீ மந்த்ரம் – முதுமை, நோய், பய உணர்ச்சி அகலுதல், தைர்யம், நல்ல உடல்நிலை, முழு ஆயுள், நோயின்மை, மன்மதத் தோற்றம் ஏற்பட உதவுகிறது.
42. வித்யா கோபால மந்த்ரம் – வித்யா அருள், நினைவாற்றல், வாக்குவன்மை, அறிவுடைமை கூடுதல்.
43. அன்ன கோபால மந்த்ரம் – உணவுப் பற்றாக்குறையில்லாமல் மகிழ்ச்சியுடனிருக்க, தன்னிறைவு பெற உதவுகிறது.
44. சௌபாக்யலக்ஷ்மீ மந்த்ரம் – லக்ஷ்மி அருள், அறியாமை நீங்குதல் போன்றவை கிடைக்கும்.
45. க்ஷேத்ர ப்ராப்திகர மந்த்ரம் – பூமி லாபம், அனைத்து வகையான சொத்துகளிலும் லாபம் பெற உதவுகிறது.
46. க்ஷேத்ர ப்ராப்திகர அபேரா மந்த்ரம் – இந்திர பதவி, பொன் விளையும் பூமிக்குத் தலைமைப் பதவி , அரசியல் தலைமை, திடமான மனநிலை அடைய உதவுகிறது.
47. த்ருஷ்டி துர்கா மந்த்ரம் – அனைத்து வகையான கெடுதலான பார்வைகளால் ஏற்படும் தோசங்கள் நீங்கி முன்னேற்றம் கிடைக்கும்.