ஐப்பசி மாத பலன்கள்
முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை
கிரக பாதசாரங்கள்
சூரியன் - சித்திரை - துலாம், சுவாதி, விசாகம் - துலாம்,
செவ்வாய் - உத்ரம், சித்திரை - கன்னி,
புதன் - சுவாதி, விசாகம் - துலாம், அனுஷம், கேட்டை - விருச்சிகம்.
குரு - சுவாதி - துலாம். சுக் - அஸ்தம், சித்திரை, சுவாதி - கன்னி, துலாம்.
சனி - கேட்டை, விருச்சிகம், மூலம் - தனுசு,
ராகு - ஆயில்யம் - கடகம்,
கேது - அவிட்டம் - மகரம்.
சந்திரன் - உத்ரம் முதல் சித்திரை வரையில் இம்மாதப்பயணம்.
மேஷம் லக்னம்
(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
விரயாதிபன் பார்வையினால் இலாபத்தானம், தனத்தானம், குடும்பம் ஆகிய இவற்றின் மீது உள்ளதால் விரயத்துடன் கூடிய செலவினங்கள் ஏற்படும். கடக ராகு, மகர கேது குடும்பம், தொழில் தொடர்ந்த நிலையில் இடையூறுகளை ஏற்படுத்துவார். கரும காரியம் நிகழும். திடீரென்று மேலும் கடன் வாங்குதல், உடல் சுகமற்ற தன்மை, தன்னுடைய தற்புகழிற்காக வீண் செலவினங்கள், கேளிக்கைச் செலவினங்கள், குழந்தைகள், பெண்கள், மனைவி வழியில் அதிக விரயங்கள், தந்தை வகையினரால் மற்றும் இளைய சகோதரத்தின் வழித் தொல்லைகள், வளர்ச்சி, பதவியில் பெருத்த இடையூறுகள், அவமானம், காது தொடர்ந்த நோய்கள், மிகக் குறைந்த கடினப்பட்டதற்கான இலாபம், தந்தை வகைச் சொத்தில் தகராறுகள் ஆகியன ஏற்படும். உயர் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் உடையவர்கள் குடும்பப் பிரச்சினைகளினால் ஆளாகுவர். நரம்பு தொடர்ந்த தொல்லைகளில் அதிகக் கவனம் தேவை.
ரிஷபம் லக்னம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தரும கருமாதியின் பார்வை மிகுந்த நன்மையை அளிக்கும். அலைச்சல், பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து, வளர்ச்சி முன்னேற்றங்கள், திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம், வீட்டில் சுப நிகழ்வுகள் முதலியன ஏற்படும். பூர்வ புண்ணியத்தானம் வலிமை பெறுவதால் தந்தை, குழந்தைகள், கல்வி, தொழில் தொடர்ந்த சுப செலவினங்கள் வழி ஆதாயங்கள், பெரியோர்கள் - மகான்களின் ஆசிகள், நல்ல வருமானங்கள், இலாபங்கள், வெப்பம் தொடர்ந்த வயிற்றுவலி, முதலியன ஏற்படல், பிறகு குணமடைதல், ஆக மொத்தத்தில் இந்த லக்னத்தாருக்கு மிகுந்த நன்மை ஏற்படும். நிலைத்த நல்ல தொழில் அமைதல், வேலை இல்லாதவர்களுக்குச் சிறப்பான இடத்தில் அரசாங்கப்பணி, பணியில் இருப்பவர்களுக்கு உயர்ந்த நிலை ஆகியன சிறப்பாய் அமையும். சாதகர், தாய், சகோதரம் ஆகியோர் வகையில் சில உடல் நலமற்ற தன்மை, பிறகு குணம் அடைதல் ஆகியன அமையும்.
மிதுனம் லக்னம்
(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தந்தை, தொழில் வழி மிகுந்த நற்பெயர், பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து, வளர்ச்சி, பதவியில் நியாயமான முன்னேற்றங்கள், தரும, கருமாதி, பஞ்சமாதி ஆகியோரின் யோகப்பலன்கள் மிக அற்புதமாய் இலாபத்துடன் கிடைக்கும். தந்தை, தொழில், சாதகர், குடும்பம் ஆகியன தொடர்ந்த சுப விசேட செலவினங்கள் ஏற்படும். பற்களில் சொத்தை விழுதல், பல் கோளாறு, பொய் கூறுதல், பின்னர் யாவும் சரியாகுதல், உயர் கல்வி நிலை - கல்லூரி - இரட்டை பட்டம், டாக்டர் பட்டம் எதிர்பார்த்தபடி வெகு சிறப்பாய் அமைதல், மூதாதையர், மகான்களின் ஆசிகள், சிறப்பு தரிசனங்கள், எளிய வகை, பத்திய வகை உணவு மேற்கொள்ளுதல், விரதம் இருத்தல், அரசாங்க ஆதாய அனுகூலங்கள், எண்ணியது ஈடேறுதல், வாகன வசதிகள், புத்திர வகையில் மேன்மை, விசேடங்கள், இளைய சகோதர வகையில் செலவினங்கள், ஆதாயங்கள், அரசு, மத்திய அரசு தொடர்ந்த வகையில் சிறப்பாய் வேலை அமைதல், தந்தை வழி நன்மைகள், வயிறு, வெப்பம், நரம்பு தொடர்ந்த நிலையில் பாதிப்பு ஏற்பட்டுப் பின்னர் சரியாகுதல், திடீரென்று மருத்துவச் செலவினங்கள், பூர்வ சொத்து வகையில் எதிர்பாராத கடன், இழப்புகள், செலவினங்கள், குறைந்த இலாபம், முகத்தில் கரும்புள்ளிகள், செவ்விலங்குகளினால் கண்டங்கள், விடம் சார்ந்த பாதிப்புகள், விடம் தொடர்ந்த கண்டங்கள், நீர் விலங்குகளினால் ஆபத்து, தலைசுற்றல், மயக்கம் ஆகியன அமையும்.
கடகம் லக்னம்
(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தலை சுற்றல், மயக்கம், மனசஞ்சலங்கள், வாக்கு வன்மை, முகப்பொலிவு, உயர்கல்வி, நண்பர்கள் ஆகிய இவற்றினால் சுப, அசுப விரயங்கள், நல்ல தைரியம், தந்தை வகைச் சொத்துக்களினால் ஆதாய அனுகூலம், எதிர்பாராத கண்டங்கள், அரசதண்டனை, சிறைத்தண்டனை, உடல் நலமுடன் திகழ்தல், வழக்கில் இழுபறி, தொழிலில் மாற்றங்கள், மேன்மையான நிலை உருவாகுதல், அரசு, மத்திய அரசு தொடர்ந்த வகையில் சிறப்பாய் வேலை அமைதல், உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைத்தல், நீண்ட நாளாய் உள்ள பூர்வீகச் சொத்து விற்றல், வளர்ச்சியின் பெயரில் செலவினம் ஏற்படல், ஆயுள் நலம், இளைய சகோதர வகையில் மனஸ்தாபம், விரயங்கள், பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து, வளர்ச்சி ஏற்படல் முதலியன ஏற்படும்.
சிம்மம் லக்னம்
(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
திருமணம் ஆகாதவர்கட்கு திருமணம், வீட்டில் சுப நிகழ்வுகள், தொழிலில் கூடுதல் சம்பளம், இலாபம், கடல் கடந்த தொலை தூரப் பயணங்கள், அலைச்சல்கள், தூக்கமின்மை, போதைப் பழி சொற்கள் முதலியன ஏற்படல், நெருப்பு கண்டம், ஆயுள் பீடை கண்டங்கள் அமைதல், மூச்சடைப்புகள், சுவாசக் கோளாறுகள், போதைப் பொருட்களுக்குச் சிலர் அடிமையாதல், பிறந்த இட சொத்துக்களை சிலர் இழப்பர். செவ்விலங்குகளினால் கண்டங்கள், விடம் சார்ந்த பாதிப்புகள், விடம் தொடர்ந்த கண்டங்கள், மிருகங்களினால், விலங்குகளினால் ஆபத்துகள், நீர் விலங்குகளினால் ஆபத்து, சிறந்த தைரியம், நல்ல கருத்தமைந்த இனிய பேச்சாற்றல், புத்திர வகையில் மேன்மை, பதவியில் தலைமைப்பதவி, சில பொறுப்புகள் கூடுதல், பூர்வ புண்ணியத்தானம் வலிமை பெறுவதால் மிகுந்த நன்மைகள் அதிகம் விளையும். பெண்கள் ஆனால் குழந்தைப் பாக்கியம், நீண்ட நாட்களாய் இல்லாதவர்க்கும் குழந்தைப்பேறு, உயர்கல்வி நிலை - கல்லூரி - இரட்டை பட்டம், டாக்டர் பட்டம் எதிர்பார்த்தபடி வெகு சிறப்பாய் அமைதல், உயர்ந்த சன்மானம், சிறப்பு விருதுகள், மகான்கள், பெரியோர்களின் ஆசிகள், சிறப்புத் தெய்வ வழிபாடுகள், கடினப்பட்டதற்கான சிறந்த இலாபங்கள், இளைய தாரம் அல்லது இரண்டாம் தாரம் சிறப்பாய் அமைதல், மூத்த சகோதர, சகோதரிகளால் ஆதாயங்கள், பங்குச்சந்தையில் இருப்பவர்கள் மிகச் சிறந்த இலாபத்தைப் பெறுவர். மகான்கள், பெரியோர்களின் ஆசிகள், சிறைத்தண்டனை, சிறைவாசம் ஆகிய இவை தொடர்ந்தவற்றில் அதிகக் கவனம் தேவை.
கன்னி லக்னம்
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
அதிகக் கோபம், அதிக மன உளைச்சல், கணவருக்கு ஆயுள் கண்டம், விபத்து ஏற்படல், கரும காரியம் நிகழ்தல், கணவர் வழி வேலை அமைதல், சாதகருக்கு ஆயுள் கண்டப் பீடை, தீராத கடன்கள் அடைதல், வம்பு வழக்குகள் வெற்றி பெறுதல், நோய் தீருதல், புத்திர வகைக் கண்டம், பீடைகள், சர்ப்ப சாந்தி செய்தல், புத்தி தடுமாற்றம், குழப்பச் சிந்தனைகள், பெயர், புகழுடன் கூடிய குறைந்த இலாபங்கள், தாயாருக்கு உடல் நலமின்மை, அறுவை சிகிச்சை முதலியன அமைதல், சற்று சிரமப்பட்டதற்கான அலைச்சலுடன் கூடிய கடினத்தொழில். நல்ல பூர்வ புண்ணியப் பலன், குடும்பம், மனைவி. தந்தை, வண்டி தொடர்ந்த வகையில் சுப செலவுகள், நல்ல வருமானம் அமைதல், ஆயுள் பலப்படல், கடல் கடந்த வியாபாரத்தில் அதிக இலாபம் ஆகியன அடைவர்.
துலாம் லக்னம்
(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
நற்பெயர், பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து, வளர்ச்சி, சிறந்த புத்திக்கூர்மை, கணவர் அல்லது மனைவிக்கு வீட்டில் அசம்பாவிதம், கண்டம் எதிர்பாராதபடி நிகழ்தல், குழந்தைப் பாக்கியம், குழந்தைகளால் மேன்மை, வளர்ச்சி முன்னேற்றங்கள், விருதுகள், சன்மானங்கள், தந்தைக்கு உடல் நலமின்மை, புத்திர வகையில் மேன்மை, பாடுபட்டதிற்கான பூர்வ பண்ணிய பலன்கள், தூக்கமின்மை, கடன், வம்பு வழக்குகள், நோய் வலிமை பெற்று தொல்லை தருதல், உயர்கல்வி, திருமணம், குடும்பம், மனைவி, வளர்ச்சி, அசராங்கச் சன்மானம், விருது, வீட்டில் சுப நிகழ்வு, தந்தையின் பூர்வ புண்ணிய வகையில் செல்வம் அமைதல், திடீரென தனலாபங்கள் அமைதல், குடும்பத்திற்கான செலவினங்கள் ஆகியன யாவும் கிடைக்கும். .
விருச்சிகம் லக்னம்
(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
அவமானத்துடன் கூடிய லாபங்கள், குடும்பம், மனைவி, குழந்தைகள், வெளியூர் அல்லது வெளிநாடு குடும்பத்துடன் கூடிய பிரயாணங்கள், வளர்ச்சி முன்னேற்றம் தொடர்ந்த நிலையில் பல்வேறு செலவினங்கள் அமைதல், குழந்தைகளினால் மேன்மை, வண்டி வாகனம் சிறப்பாய் அமைதல், எதிரி, கடன் அடைதல், வம்பு வழக்குகளில் வெற்றி ஆதாயத்துடன் பெறுதல், தந்தைக்குக் கண்டம் அமைதல், காது கோளாறு அமைதல்
தனுசு லக்னம்
(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
இளைய சகோதர வகையினில் மந்தத்தனம், சோம்பல், ஆதாயங்கள், குழந்தைப் பாக்கியம், புத்திரர் வகை நன்மைகள், சுபச் சடங்குகள், வெளிநாடு அல்லது வேலை மனைவி, தொழில் தொடர்ந்த நிலையில் மேலும் கடன் வாங்குதல், சில உடல் குறைபாடுகள், வளர்ச்சி, விருதுகள், சுப நிகழ்வுகள், விட கண்டங்கள், ஆயுள் கண்டப்பீடை, அரசாங்கம், தந்தையினால் இலாபம், நன்மை. தொழில், குழந்தைகள் வரை விசேடங்கள், உடல் நலம், இலாபம், விரதம், தவம், யோகம், உயர்கல்வி நிலை - கல்லூரிப் படிப்பு எதிர்பார்த்தபடி வெகு சிறப்பாய் அமைதல், எளிய வகை, பத்திய வகை உணவு மேற்கொள்ளுதல், விரதம் இருத்தல், ஆகியவற்றிற்கான பலன்கள் ஏற்படும்.
மகரம் லக்னம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
கடன், நோய், வழக்கு, எதிரி ஆகிய தொல்லைகளினின்று நிரந்தரமாய் விடுபடுதல், அதற்கான தீர்வினைக் காணுதல், அதன் வழி இலாபங்கள் அமைதல், சிரமங்கள், சில அலைச்சல் கூடிய பயணங்கள், வீடு, வண்டி வாகன வசதிகள், கால்நடைகள் சிறப்பாய் அமைதல், பொன், பட்டு, வெள்ளி முதலிய இரத்தினங்கள், காதணிகலன்கள் சிறப்பாய் அமைதல், வீட்டு உபயோகப் பொருட்கள் சிறப்பாய் அமைதல், பதவியில் சில கூடுதல் பொறுப்புகள் அமைதல், உயரிய சம்பளம், பெயர், புகழ், கௌரவம் ஆகியவற்றினில் இன்னும் மேன்மையான நிலை ஆக சிறப்பான பலன்கள் அமையும்.
கும்பம் லக்னம்
(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பெயர், புகழ், அந்தஸ்து, தைரியம், தன்னம்பிக்கை, ஆடை ஆபரணச் சேர்க்கைகள், குழந்தைகளினால் நன்மை, குழந்தைப்பேறு, வனவாசம், வாழ்க்கையில் பற்றற்ற நிலை, தெய்வீக சிந்தனைகள், இலாபம் அலைச்சல்கள் கூடிய ஆன்மீக பயணங்கள், புத்திர வகைச் செலவினங்கள், கடன் வாங்கி வண்டி வாங்குதல், பதவியில் நற்பெயர், முன்னேற்றம், பூர்வ புண்ணிய நற்பலன்கள், தந்தை, தாய் உடல் ஆராக்கியம், குழந்தைகள் ஆகியவர்களினால் மிகுந்த நன்மை, நெருப்பு கண்டம், அம்மை, வெப்பு தொடர்ந்த நோயின் கடுமையினால் சுமங்கலியாய்ச் சில பெண்கள அல்லது ஆண்கள் இறக்கும் நிலை ஆகியன ஏற்படும்.
மீனம் லக்னம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
கடன், நோய், வழக்கு, எதிரி, தொழில் ஆகிய தொல்லைகளினால் உடல் பாதித்தல், வயிற்று வலி, வெப்பு தொடர்ந்த நோய்கள், நெருப்பு கண்டம், மர்ம உறுப்புகளில் தொல்லை, தந்தை வகை ஆதாய அனுகூலங்கள், புத்திரர் வகை இடையூறுகள், பெயர், புகழுடன் கூடிய இலாபம் அற்ற நிலை, ஆயுள், மரண கண்டப்பீடை, மாங்கல்யத் தோடம், கணவருக்குப் பீடை காட்டுதல், தொழிலில் இடையூறுகள், தொடர்ந்த அசிங்கம், அவமானம், அவப்பெயர்கள் ஏற்பட்டுப் பின்னர் விலகுதல், வீடு, குடும்பம், வண்டிகளில் தகராறு, இரட்டைச் செலவுகள் ஏற்படுதல் ஆகியன ஏற்படும்.
* * * * *
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.