சார்வரி வருடம் - கார்த்திகை மாதப் பலன்கள்
முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை
கிரக பாதசாரங்கள்
சூரியன் 1 – 3 விசாகம், 4 – 16 அனுடம், 17 – 29 கேட்டை, வரை விருச்சிகம். 30 மூலம் தனுசு.
சந்திரன் - அனுடம் – மூலம்.
செவ்- 1 இம்மாதம் முடிய ரேவதி மீனம்.
புதன் - 1 – 5 சுவாதி, 6 – 14 விசாகம் 13 வரை துலாம், 14 முதல் விருச்சிகம், 15 – 22 அனுடம், 23 - மார்கழி 1 வரை கேட்டை. விருச்சிகம்.
குரு - 4 உத்திராடம் 1 தனுசு. கார்த்திகை 5 – மார்கழி 21 வரை உத்திராடம் மகரம்.
சுக்கிரன் - 1 – 6 சித்திரை துலாம். 7 – 16 சுவாதி, 17 – 24 விசாகம், 25 – 27 விசாகம், விருச்சிகம், 28 அனுடம் விருச்சிகம்.
சனி - 5 உத்திராடம் 3, மகரம்.
ராகு - 1 -17 மிருகசீரிடம் 2, 18 – மிருகசீிடம் 1 ரிடபம்.
கேது - 1 – 17 கேட்டை 4, 18 – கேட்டை 3 விருச்சிகம்.
மேஷம் லக்னம்
(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
இம்மாதம் தனவரவில் சற்று மந்தமான நிலை, தந்தை, தந்தை வகையினர் வகையில் இன்னல்கள், செலவினங்கள், நிலைத்த உழைத்த நியாயமான வருமானங்கள், இலாபங்கள், கரும காரிய நிகழ்வுகள் ஆகியன ஏற்படும். 10-ல் குரு பதவி நிலை, பணிகளில் மாற்றம், பல சோதனைகளை ஏற்படுத்துவார். சனியுடன் தொடர்பில் உள்ளதால் ஜனனத்திலும் அப்படி இருப்பின் குடும்பம், தொழில் தொடர்ந்த நிலையில் சிறைவாசம், தண்டனை ஏற்படும். நேர்மையாய் இருப்பின் யாவும் நன்மையாய் முடியும். ஒருவித இன்னலும் ஏற்படாது. தாயார், குடும்பத்தினர் உடல் நலம், மருத்துவத்தால் நன்மை தரும். குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டு பின்னர் விலகும். சாதகர் தனது உடல் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.
ரிஷபம் லக்னம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சாதகருக்கு பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து, வளர்ச்சி, முன்னேற்றம், மேற்படிப்பு, புதிய தொழில் ஆகியவற்றில் மேன்மை ஏற்படும். கல்வி, சிலருக்கு இரண்டாம் திருமணம், வளர்ச்சி நிலைகளினால் புதிய இலாபங்கள், செலவினங்கள், மகிழ்வுகள் ஆகியன அமையும். உடல் நலனில் அக்கரையாகக் கவனத்துடன் மருந்துடன் கூடிய உணவு வகைகளைச் சேர்த்து வரவும். எளிய வகையிலான ஆடை ஆபரணங்கள் அழகானதாய் அமையும்.
மிதுனம் லக்னம்
(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
திருமணம், மனைவி வகையில் தொழில், தனவரவு, தொழிலினது தவணையில் நின்ற இலாபம், இரண்டாம் தர வண்டி, வாகனம், வீடு வாங்குதல், வீட்டில் மூதாதையர் கரும காரிய நிகழ்வு ஆகியன அமையும். புத்திரர்களினால் செலவினங்கள், வளர்ச்சி, கடன்கள், தலைச்சுற்றல், நரம்பு பலகீனம், உறக்கமின்மை, இரத்த அழுத்தம் தொடர்ந்த உடல் உபாதைகள் ஆகியன ஏற்படும். ஆலய வழிபாடு, ஆன்மீகத் தொடர்பு நன்மை தரும். சிலருக்கு மனைவி, தொழில் வகையில் இழப்புகள், நட்டம், பெருத்த அவமானங்கள், வழக்கு வில்லங்கங்கள், சிலருக்கு கல்வியில் எதிர்பார்த்த மதிப்பெண், நன்மை இல்லாமை ஆகியன ஏற்படும்.
கடகம் லக்னம்
(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தாயார், குடும்பத்தார், இளைய மனைவி, மூத்த சகோதரி அடிப்படையில் ஆதாயம், ஆடை ஆபரணச்சேர்க்கை, சில மன வருத்தங்கள் ஆகின அமையும். கடின வளர்ச்சி, உழைப்பிற்கான ஆதாயங்கள், இலாபங்கள், மேன்மைகள் முறையாய் கிடைக்கும். தந்தை, கடன், வழக்கு, தாய்மாமன், தந்தை வழியினர் வகையில் பிணக்குகள், அவமானங்கள், வில்லங்கங்கள் ஆகியன அமையும். சிலருக்கு வயிறு தொடர்ந்த வலி, அறுவை சிகிச்சை பெற்று மருத்துவத்தினால் நலமடைவர். இருப்பினும் பதவி, பெயர், புகழ் அடிப்படையில் யாவும் நன்மை ஏற்படும்.
சிம்மம் லக்னம்
(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சிலருக்கு அரசாங்கப்பணி, பணியில் கடின நிலை ஆகியன சிறப்பாய் அமையும். தொழிலில் சிறிய இலாபங்கள், கடின உழைப்பிற்கான மேன்மை, கடினமான நிலை, அவமானங்கள், சிரமத்தின் பெயரில் இளைய சகோதரம், தொழில் வகையில் ஆதாயம், இலாபம், நன்மை, ஆடை ஆபரணச்சேர்க்கை ஆகியன அமையும். பல வித முறையற்ற தொழில் இலாபங்கள், வருமானங்கள் தரும். எனவே எச்சரிக்கை, கவனம் தேவை. இல்லையெனில் சிறைக்கான ஒறுத்தல் அபராதம் கட்ட வேண்டி வரும். புத்திரர், களத்திரம், வளர்ச்சி வகையில் அதிகச் செலவினங்கள், வெளியூர் பயணங்கள் ஆகியன ஏற்படும்.
கன்னி லக்னம்
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சாதகருக்கு சிறிது வளர்ச்சி, முன்னேற்றங்கள், வீட்டில் கருமம் காரியம் தொடர்பான சிரமங்கள், செலவினங்கள், உடல், நரம்பு உபாதைகள், கடின உழைப்பிற்கான முறையான இலாபங்கள் ஆகியன அமையும். குடும்பத்தினர், பெற்றோர் வகையில் திடீரென இழப்புகள், செலவினங்கள், தந்தையுடன் கருத்துப்பிணக்குகள், வழக்க வில்லங்கம் ஆகியன அமையும்.
துலாம் லக்னம்
(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
குடும்பத்தினரால், வழக்கினால் சுப, அசுப செலவினங்கள், வெளியூர்ப்பயணங்கள், சில அவமானங்கள், இரத்த அழுத்தம் மாறுபாடு, இரத்த அணுக்கள் குறைதல், எனவே உடல்நலனில் அதிக கவனம் கொள்ளுதல் வேண்டும். வாக்குவாதத்தினால் கருத்துப்பிணக்குகள், இளைய சகோதரம், ஆடை ஆபரணங்கள் விற்றல், இழத்தல், கடன் வழக்கிலிருந்து விடுபடுதல், சிலருக்கு தாயார், குடும்பத்தார் சிபாரிசு பெயரில் சிறப்பான தொழில் ஆகியன அமையும்.
விருச்சிகம் லக்னம்
(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சிலருக்கு எளிய வகையில் திருமணம், வளர்ச்சி, முன்னேற்றங்கள், இளைய சகோதிரம், ஆடைஆபரணங்கள் நன்மை ஆகியன கிடைக்கப் பெறுவீர்கள். வண்டி வாகனங்கள், வீடு முதலியன பழைய காலத்ததாய் பூர்வீகமானதாய் சிறப்பாய் அமையும். வளர்ச்சி, முன்னேற்றத்தில் தடைகள் ஏற்படினும் அவை யாவும் விலகும். இளைய சகோதிரம் வகையில் தந்தைக்கு நற்பெயர் ஏற்படும். பரிசு, பாராட்டு, புகழ், அரசு கௌரவித்த இராபங்கள், ஆதாயங்கள் ஆகியன எளிமையாய் அமையும்.
தனுசு லக்னம்
(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து மேன்மையில் குறைபாடுகள், குடும்பத்தாருடன், இளைய சகோதிரத்துடன் சில சங்கடங்கள், இழப்புகள், கடின உழைப்பினால் மேன்மை, இலாபங்கள் ஆகியன அமையும். எதிரிகளினால் ஏற்பட்ட இன்னல்கள், கடன், நோய், வழக்கு, வில்லங்கங்கள் ஆகியன விலகும். எதிரிகள் தொலைவர். குடும்பத்தார். புத்திரர் வகை, தொழில், தந்தையார் வகையில் இலாபங்கள், அதிகச் செலவினங்கள், வெளியூர்ப் பயணங்கள், ஆன்மீகப் பயணங்கள், சிலருக்கு அரசாங்கப்பணி ஆகியன அமையும்.
மகரம் லக்னம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
இளைய சகோதிரர் வகை, ஆடை ஆபரணச்சேர்க்கை வகையில் கவனம் தேவை. சில இழப்புகள், அவமானங்கள், சங்கடங்கள் நேரும். வீண் விரயங்கள் குறையும். குடும்பம், பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து, நிலைத்த செல்வ வளம் ஏற்படும். அனைத்தும் மேம்படும். முன்னேற்றங்கள் காணப்படும். எப்போதும் நேர்மையே இவர்களுக்கு நன்மை தரும். தாயார், குடும்பத்தார், வளர்ச்சி, முன்னேற்றங்கள், மேற்படிப்பு, திருமணம், புத்திரபாக்கியம் ஆகியன சிறப்பாய் அமையும். சகோதிரர் வகையில் தந்தையார் உதவியுடன் ஆதாய அனுகூலங்கள், சிறந்த தைரியம், ஆடை, ஆபரணச்சேர்க்கை, தந்தை தம் தொழிலினால் மேன்மை, தனவரவு, கற்ற கல்விக்கு ஏற்ற தொழிலினால் சிறந்த இலாபம், மேன்மை, சிலருக்கு அரசாங்கப்பணி ஆகியன அமையும்.
கும்பம் லக்னம்
(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சாதகருக்கு எப்போதும் கோபமில்லாமல் அமைதியாய் இருத்தல், உடல் அசதி, தொழிலினால் நல்ல பெயர், சிறந்த தனவரவு, தனவரவு, இலாபத்தில் சில தடைகள், அதிக வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள், தாயார், குடும்பத்தாருடன் கருத்துப்பிணக்குகள், சிலருக்கு தாயாருக்கு அறுவை சிகிச்சை, உடல் நலக்குறைவு ஏற்பட்டுப் பின்னர் விலகும். கரும காரியங்கள், அதன் தொடர்பான நிகழ்வுகள், களத்திரம், வளர்ச்சி, முன்னேற்றங்கள், புத்திரர் வகையில் சில அவமானங்கள், சங்கடங்கள் ஏற்படும்.
மீனம் லக்னம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
மூத்த சகோதிரத்தால் நன்மை அமையும். பெயர், புகழ், கௌரவம் இவற்றில் அவமானங்கள், தடைகள், இழப்புகள், இலாபங்கள், தந்தையார், தாயார், குடும்பத்தார், மனைவி, வளர்ச்சி முன்னேற்றங்கள், புத்திரர், இளைய சகோதிரம் ஆகிய யாவற்றிலும் கருத்துப்பிணக்குகள், சங்கடங்கள் ஏற்படும். இருப்பினும் இவை யாவும் விலகி நன்மை தரும்.
* * * * *
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.