Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினேழாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...

Content
உள்ளடக்கம்

சமையல்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஜோதிடம்
பொதுத் தகவல்கள்

நட்சத்திரங்கள் ஓர் பார்வை

முனைவர் ஸ்ரீவாலாம்பிகை


இக்கட்டுரையின் வழியாக அருந்ததி நட்சத்திரம், நட்சத்திரங்கள் - நட்சத்திர அதிதேவதை, நட்சத்திர ஆதாய விரையம், நட்சத்திரம் இருப்பிடம், நட்சத்திர கந்தாயம், வேறொரு வழியாகப் பார்க்கும் விவரம், நட்சத்திர கணம் - மூவகைக்கணங்கள், நட்சத்திரங்களின் பெயர் 27 நட்சத்திரங்கள் - நாள் - நட்சத்திரம், பெருநாள், இலகுநாள், பய நாள், துருவ நட்சத்திரம், பாடாவாரி நட்சத்திரம், பாப நட்சத்திரம், ஆண் நட்சத்திரம் புருட நட்சத்திரம், ஆண், பெண், அலி நாட்கள், பெண் நட்சத்திரம், பெண் நாள், வலநாளிடநாள், வலவோட்டு நட்சத்திரம், வலவோட்டு நாள் ஆகியன பற்றிக் காண்போம்.

அருந்ததி நட்சத்திரம்

உத்திரவகுலி - அருந்ததி. ஊர்ச்சை - வசிட்டன் பத்தினி. அருந்ததி. சாலி வடமீன், ஊர்ச்சை, வசிட்ட பத்தினி என்பன இவளின் பல்வேறு பெயர்கள்.

வசிட்டன் மனைவி கற்பிற் சிறந்தவள். கருத்தம முனிவர் குமரி. வசிட்டர் தேவி. மகாபதிவிரதை. இவள் தன் நாயகனிடம் சந்தேகித்ததால் கருநிறம் இயைந்த செந்நிறம் உள்ளவளாய் யாவரும் காண நட்சத்திரப் பதம் பெறச் சாபம் அடைந்தனள். இவள் குமரர் சத்தி முனிவர் முதலிய நுாற்றுவர். பஞ்ச கன்னியரில் ஒருத்தி. உலகத்தவர் மணம் செய்து கொள்கையில் கற்பிற்கு இலட்சியமாகத் தங்கள் மனைவியர்க்கு இவளைக் காட்டுதல் மரபு. துருவ மண்டலத்தருகு சப்தருஷி மண்டலம். இந்த ஏழு நட்சத்திரங்களுக்கு இடையில் வசிட்டர் இருப்பர். அவர்க்கு அருகில் அருந்ததி இருப்பள். சிவமூர்த்தி பூர்வம் பாலவேடம் தரித்து எழுந்தருளிய காலத்து நிலை கலங்காத பதிவிரதை. திகம்பரராகத் தாருகவனம் அடைந்த காலத்தும் நிலை கலங்காதவள். இவளை மணவினைக் காலத்துக் கணவன் தன்னிடம் அன்புடன் இருக்கவும், தனவான் ஆகவும், அன்ய ஸ்திரீ சங்கமம் வேண்டாதிருக்கவும், விரும்பித் தம்பதிகள் தரிசித்துப் பிரார்த்திப்பது வழக்கம். இவளிடம் சூரியன், இந்திரன், அக்னி மூவரும் ஸ்திரீகளின் மனோபாவம் அறிய வேதியர் உருக் கொண்டு சென்றனர். இவர்களைத் தேவர் என்று அறிந்து கொண்ட அருந்ததி, அரக்கிய பாத்தியத்திற்கு நீர் கொண்டு வரச் செல்ல இம்மூவரும் அவளைத் தடுத்து நாங்களே இக்கும்பத்தை நீரால் நிறைக்கிறோம் என்று முதலில் இந்திரன் ஜன்மத்தால் பிராமணன் இடத்தில் பயம் இலாதும் தவம், பிரமசரியம், அக்நிஹோத்திராதிகளால் என் பதவியை ஒருவன் அடைவது சத்தியமாயின் இக்குடம் காற்பங்கு நீரால் நிறைக எனவும், அக்நி, யாகத்தைக் காட்டிலும், அதிதியைப் பூசித் தன்னமளிப்பதில் யான் திருப்தி அடைவது சத்தியமாயின் மற்றக் காற்பங்கும் நீர் நிறைக எனவும், சூரியன் நாடோறும் மந்தேஹர்கள் செய்யுந் தீமையை வேதியர் செய்யும் அர்க்கிய பிரதானமாகிய பிரம்மாஸ்திரம் நீக்குவது உண்மையாயின் மிகுதி காற்பங்கு நிறைக எனவும், அருந்ததி இரகசிய ஸ்தானமும் இதர புருஷ சம்பாஷணையும் கிடைக்காவெல்லை ஸ்திரீகள் பதிவிரதைகள் ஆதலின் ஸ்திரீகளைச் ஜாக்கிரதையாகக் காக்க என முழுதும் நிரம்பியது. இவள் சுவாகாவால் அநுக்கிரகம் பெற்றவள். (சிவமகாபுராணம்.)

அருந்ததி காட்டல்

கற்பில் அருந்ததி போலிருக்கக் கலியாணத்தில் மணப்பெண்ணுக்கு அருந்ததி நட்சத்திரம் காட்டுதல்.

அருந்ததி நட்சத்திரம் இருப்பிடம்

துருவ நட்சத்திரத்திற்கு அருகிலுள்ள ஏழு நட்சத்திரத்தில் நடுவிலுள்ள வசிட்ட நட்சத்திரத்திற்கு அருகில் சிறிதாயுள்ளது. சப்தருஷி மண்டலம் இரண்டாயிரத்தெழுநூறு வருடங்களில் ஒரு முறை வட்டஞ் செய்யும் என்பர்.


நட்சத்திரங்கள் - நட்சத்திர அதிதேவதை

இன்ன நட்சத்திரத்துக்கு இன்னது அதிதேவதை எனல். விவரம்:

1. அசுபதி - சரசுவதி

2. பரணி - துர்க்கை

3. கார்த்திகை - அக்கினி

4. உரோகணி - பிரமன்

5. மிருகசீரிடம் - சந்திரன்

6. திருவாதிரை - ஈசுவரன்

7. புனர்பூசம் - அதிதி

8. பூசம் - வியாழன்

9. ஆயில்யம் - ஆதிசேடன்

10. மகம் - சுக்கிரன்

11. பூரம் - பார்வதி

12. உத்திரம் - சூரியன்

13. அஸ்தம் - சாத்தான்

14. சித்திரை - விசுவகன்மா

15. சுவாதி - வாயு

16. விசாகம் - குமரன்

17. அனுசம் - இலக்குமி

18. கேட்டை - இந்திரன்

19. மூலம் - அசுரர்

20. பூராடம் - வருணன்

21. உத்திராடம் - கணபதி

22. திருவோணம் - விஷ்ணு

23. அவிட்டம் - வசுக்கள்

24. சதயம் - எமன்

25. பூரட்டாதி - குபேரன்

26. உத்திரட்டாதி - காமதேனு

27. ரேவதி - சனி

என்பனவாகும்.

நட்சத்திர ஆதாய விரையம்

நட்சத்திரத்தால் சொல்லும் வருட மொத்தப் பலன். விவரம்:

1.சித்திரை மாதம் முதல் தேதியன்று, சூரிய உதய காலத்தில் உள்ள திதி, வாரம், நட்சத்திரம் ஆகிய இம் மூன்றையும் கூட்டினது துருவமாகும். இத்துருவத் தொகையுடன் ஒன்று கூட்டி ஆறு, இரண்டு, ஐந்து, மூன்று, நான்கு, ஒன்று, ஆறு, ஒன்று இந்தத் தொகைகளால் முறையே பெருக்கி, எட்டால் வகுத்து வந்த வீதங்கள் ஒவ்வொன்றும் அசுபதி, ஆயிலியம், அனுசம், பூரட்டாதி இந்த நான்கு நட்சத்திரங்களுக்கும் உள்ள ஆதாய விரையம், ஆரோக்கியம், அனாரோக்கியம், சுகம், துக்கம், அலைச்சல், ஒரே இடத்தில் இருத்தல் என்று சொல்லப்பபடுகிற சங்கியைகள் ஆகும்.

2. மறுபடியும் மேற்படி துருவத்தில் இரண்டு கூட்டி முன் போல் கணக்குக் கிரியைகள் செய்ய, பரணி, மகம், கேட்டை, உத்திரட்டாதி இந்த நான்கு நட்சத்திரங்களுக்கும்,

3. மறுபடியும், மேற்படி துருவத்தில் மூன்று கூட்டி, முன் போல் கிரியைகள் செய்ய, கார்த்திகை, பூரம், மூலம், ரேவதி இந்த நான்கு நட்சத்திரங்களுக்கும்,

4. மறுபடியும் மேற்படி துருவத்தில் நான்கு கூட்டி, முன் போல் கிரியைகள் செய்ய, உரோகணி, உத்திரம், பூராடம் இம் மூன்று நட்சத்திரங்களுக்கும்,

5. மறுபடியும், மேற்படி துருவத்தில் ஐந்து கூட்டி, முன் போல் கிரியைகள் செய்ய, மிருகசீரிடம், அஸ்தம், உத்திராடம் இம் மூன்று நட்சத்திரங்களுக்கும்,

6. மறுபடியும், மேற்படி துருவத்தில் ஆறு கூட்டி முன் போல் கிரியைகள் செய்ய, திருவாதிரை, சித்திரை, திருவோணம் இம் மூன்று நட்சத்திரங்களுக்கும்,

7. மறுபடியும், மேற்படி துருவத்தில் ஏழு கூட்டி, முன் போல் கிரியைகள் செய்ய, புனர்பூசம், சுவாதி, அவிட்டம் இம் மூன்று நட்சத்திரங்களுக்கும்,

8. மறுபடியும், மேற்படி துருவத்துடன் எட்டுக்கூட்டி, முன் போல் கிரியைகள் செய்ய, பூசம், விசாகம், சதயம் இம் மூன்று நட்சத்திரங்களுக்கும் முதல் பாராவில் சொல்லிய படி, ஆதாய விரையம் முதலியவைகளாகும்.

குறிப்பு: முன் கூறியபடி, கணக்கிட்டு எட்டால் வகுப்பதில், மிச்சமில்லாமல் 0 பூச்சியமாய் வந்தால், எட்டு என்றும், இதற்கே பூரணமான பலன் என்றும் வைத்துக் கொள்வதாகும்.


நட்சத்திரம் இருப்பிடம்

இன்ன நட்சத்திரத்திற்கு இன்னது இருப்பிடம் என்பது. விவரம்:

அசுபதிக்கு ஊர், பரணிக்கு மரம், கார்த்திகைக்கு வனம், ரோகணிக்கு காட்டிச்சால், மிருக சீரிடத்திற்குக் கட்டிலின் கீழ், திருவாதிரைக்குத் தேரடி, புனர்பூசத்துக்கு நெற்குதிர், பூசத்திற்கு மனை, ஆயிலியத்திற்கு கும்பை அதாவது குடம், மகத்திற்கு நெற்கதிர், பூரத்திற்கு வெறும் வீடு, உத்திரத்திற்கு நீர், அஸ்தத்துக்கு நீர்க்கரை, சித்திரைக்கு வயல், சுவாதிக்குப் பருத்தி, விசாகத்திற்கு முற்றம், அனுசத்துக்கு பாழ்வனம், கேட்டைக்கு கடை, மூலத்துக்கு குதிரைக் கொட்டாரம், பூராடத்திற்குக் கூரை, உத்திராடத்துக்கு வண்ணான் துறை, திருவோணத்துக்குக் கோயில், அவிட்டத்துக்கு ஆலை, சதயத்திற்கு செக்கு, பூராட்டாதிக்குத் தெரு, உத்திரட்டாதிக்கு அக்கினி, ரேவதிக்குப் பூஞ்சோலை என்பனவாகும்.

நட்சத்திர கந்தாயம்

வருடப் பலன் விவரம்:

1.முதல் கந்தாயமாவது அவ்வருடத்தின் சித்திரை மாதம், முதல் தேதியன்று வரும் கிழமை, திதி, நட்சத்திரம், யோகம் கரணம் இந்த ஐந்து தொகைகளையும் ஒன்றாய்க் கூட்டி வருவது, கந்தாயத் துருவமாகும். இத்துருவத்துடன் அசுபதி முதல் உள்ள நட்சத்திரங்களுக்கு, அந்தந்த நட்சத்திர சங்கியையைக் கூட்டி மூன்றால் பெருக்கி, எட்டால் வகுக்க, வருகிற மீதம் முதல் கந்தாயமாகும்.

2. நடுக் கந்தாயமாவது முன் துருவத்துடன் அந்தந்த நட்சத்திர சங்கியைக் கூட்டி ஏழால் பெருக்கி, மூன்றால் வகுக்க வருகிற மீதமே நடுக்கந்தாயம் என்பதாகும்.

3. கடைக் கந்தாயமாவது முன் துருவத்துடன் அந்தந்த நட்சத்திரத்தின் சங்கியையைக் கூட்டி, மூன்றால் பெருக்கி, ஐந்தால் வகுக்க, வருகிற மீதமே கடைக்கந்தாயம் என்பதாகும். இந்த மூன்று கந்தாயங்களிலும் மீதம் இல்லாவிட்டால் பூச்சியமாக 0 வைத்துக் கொள்ள வேண்டும்.

வேறொரு வழியாகப் பார்க்கும் விவரம்:

அசுபதிக்கும், ரேவதிக்கும் கந்தாயங்களைக் கணிதம் செய்து கொண்டு, அசுபதி முதலாக ஆரம்பித்து, முதல் கந்தாயத்துக்கு ஒன்று, நான்கு, இரண்டு, ஐந்து, 0 பூச்சியம், மூன்று, ஆறு என்றும், இரண்டாம் கந்தாயத்துக்கு 0 பூச்சியம், மூன்று, இரண்டு என்றும், மூன்றாம் கந்தாயத்துக்கு 0 பூச்சியம், மூன்று, ஒன்று, நான்கு, இரண்டு என்றும் அந்தந்தக் கந்தாயங்களை முறையே எழுத வேண்டும்.

கந்தாய பலன் விவரம்

முதலாவது, 0 பூச்சியம் வியாதி, இரண்டாவது 0 பூச்சியம் கடன், மூன்றாவது 0 பூச்சியம் தன விரையம், அதாவது பலன் சொற்பம், மூன்றும் 0 பூச்சியமானால் ஒரு பலனும் இல்லை, மூன்றும் 0 பூச்சியம் இல்லாமல் இருந்தால் நல்ல பலன். இத்தொகை ஒற்றையாய் வரின் தனலாபம், இரட்டையாய் வரின் சமபலன், வகுப்பதில் மிச்சம் இல்லாது சூனியமானால் பயன் ஒன்றும் இல்லை.


நட்சத்திர கணம் - மூவகைக்கணங்கள்

மனித கணம் - இருபத்தேழு நட்சத்திரத்தையும் மனிதர், தேவர், இராட்சதர் என்ற மூவகைக் கணங்களாகப் பகுக்கப்படுவது.

மனித கனம் - பரணி, ரோகணி, திருவாதிரை, பூரம், உத்திரம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி

இராட்சத கணம் - கார்த்திகை, ஆயிலியம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம்

தேவ கணம் - அசுபதி, மிருசசீரிடம், புனர்பூசம், பூசம், அஸ்தம், சுவாதி, அனுசம், திருவோணம், ரேவதி

நட்சத்திரங்களின் பெயர் 27 நட்சத்திரங்கள் - நாள் - நட்சத்திரம்

அசுவினி இரலை, ஏறு, இவுளி, ஐப்பசி, சென்னி, பரி, புரவி, மருத்துவ நாள், முதனாள், யாழ், வாசி, அசுபதி நட்சத்திரம், அச்சுவினி நாள், நிமித்தம் ஆகியன இதன் பெயர்கள் ஆகும்.

பரணி

பரணி நாள், பரணி நட்சத்திரம், பரணி, அடுப்பு, காடு, கிழவன், சோறு, தருமநாள், தாசி, தாழி, பகலவன், பாகு, பூதம், போதம், முக்கூட்டு, சாடு, பிரமனாள், உரோகணி, ரோகிணி, கற்பகாலம், எரி, ஓர் நாள் ஆகியன இதன் பெயர்கள் ஆகும்.

கார்த்திகை

அங்கி, அளகு, அளக்கர், ஆறுமீன், அறுவாய், ஆரல், இரால், எரிநாள், தழல், நாடன், நாவிதன், வாணன் ஆகியன இதன் பெயர்கள் ஆகும்.

ரோகிணி

அயநாள், உருளி, உருள், உரோகிணி, ஊற்றல், சகடம், சகடு, சதி, தேர், பண்டி, பார், விமானம், வையம். உரோகணி நாள் - உரோகணி நட்சத்திரம், அயநாள், உருளி, உருள், உரோணி, ஊற்றால், சகடம், சகடு, சதி, தேர், பண்டி, பார், மோனம், வையம் ஆகியன இதன் பெயர்கள் ஆகும்.

மிருகசீரிடம்

மிருகசீரிடநாள், இந்திரன், ஐந்தானம், நரிப்புறம், பாலை, பேராளன், மதிநாள், மார்கழி, மாழ்கு, பாழ்கு, மான்றலை, மான் தலை, மும்மீன், வெய்யோன் மிருகசீரிடம் - ஒரு நட்சத்திரம். ஓர் நாள். மிருகசீரிடம் ஆகியன இதன் பெயர்கள் ஆகும்.

ஹில்வலை - மிருகசீரிட நட்சத்திரத்தினது தலையிலுள்ள உப நட்சத்திரங்களைந்தும் இப்பெயர் பெறும். மிருகசீரிட நட்சத்திரத்தினது தலையிலுள்ள உப நட்சத்திரத்தினது தலையிலுள்ள உப நட்சத்திரங்கள் ஐந்தும் இப்பெயர் பெறும்.

இவை மான் கணங்கள். வேடன், ஒருவன் உணவின் பொருட்டு ஆண் மானை எய்ய அம்பு தொடுக்கையில் கண்ட ஆண், வேடனை நோக்கி நான் என் கர்ப்பிணியாகிய மனைவியைக் கண்டு வார்த்தை கூறி மீளுகின்றேன் என்று உறுதி கூற வேடன் அவ்வகை விடையளிக்கச் சென்றது. இதன் பெண் மான் ஆணினைக் காணாது வேடனிடம் வந்து அவ்வாறு ஆணைக் கண்டு வருவதாய் உறுதி வாக்களித்தது. அவ்வகை ஒன்றுக்கொன்று தமக்கு நேர்ந்ததைப் பற்றிக் கூறிப் பிள்ளைகளுடன் வேடனிடம் வர முன் வேட்டைக்குச் சென்று மகா சிவராத்திரியில் சிவபூஜை வனத்தில் செய்தவர்களையும் சிவதரிசனத்தையுங் கண்டதனாலும் வேடனுக்கு ஞானோதயமாய் மான்களே எனக்கு ஞானத்தைத் தந்தைமையால் நீங்கள் குருவிற் கொப்பாகின்றீர். ஆதலால் இனி எவ்வுயிர்களையும் கொல்லேன் என்று சிவமூர்த்தி தர்சனந் தர முத்தி பெற்றவன். மான்கள் சிவமூர்த்தியால் நட்சத்திரபதம் பெற்றன. இவையே மிருகசீருச நட்சத்திரம் ஆண், பெண், குருளை இவை மூன்று நட்சத்திரங்கள்.


திருவாதிரை

திருவாதிரை - ஒரு நாள். திருவாதிரை, ஆதிரை, ஈச நாள், செங்கை, மூதிரை, யாழ், ஈசனாள், நட்சத்திரசாகிநி, திருவாதிரை நாள், மூதிரை, திருவாதிரை நட்சத்திரம் ஆகியன இதன் பெயர்கள் ஆகும்.

புனர்பூசம்

அதிதிநாள், ஆவணம், எரி, கரும்பு, கழை, பாலை, பிண்டி, புணர்தம், புனர்பூச நட்சத்திரம், புநர்பூசம். ஆகியன இதன் பெயர்கள் ஆகும்.

பூசம்

நாற்குளம், குரு, நாள், தை, கொடிறு, வண்டு ஆகியன இதன் பெயர்கள் ஆகும்.

ஆயிலியம்

அரவுநாள், ஆயில், கௌவை, பாம்பு ஆகியன இதன் பெயர்கள் ஆகும்.

மகம்

ஆதிச்சனி, எழுவாய் எழுஞ்சனி, கொடுநுகம், பிதிர் நாள், மாசி, வாய்க்கால், வேட்டுடன், வேள்வி ஆகியன இதன் பெயர்கள் ஆகும்.

பூரம்

இடையெழுஞ்சனி, எலி, கணை, நாவிதன், பகவதி நாள் ஆகியன இதன் பெயர்கள் ஆகும்.

உத்தரம்

கடையெழுஞ்சனி, கதிர், நாள், செங்கதிர்நாள், செங்கதிர், பிறந்த நாள், பங்குனி, பாற்குனி, மானேறு ஆகியன இதன் பெயர்கள் ஆகும்.

அஸ்தம்

அங்கிநாள், ஐம்மீன், ஐவிரல், களிறு, கன்னி, காமரம், கைம்மீன், கைனி, கௌத்துவம், நவ்வி ஆகியன இதன் பெயர்கள் ஆகும்.

சித்திரை

அறுவை, ஆடை, சுவை, செவ்வி, தச்சன், துவட்டாநாள், தூசு, நடுநாள், நெய், பயறு, மீன். நெய் - சித்திரை நட்சத்திரம். பயறு - சித்திரை நட்சத்திரம், சித்திரை நாள் ஆகியன இதன் பெயர்கள் ஆகும்.

சுவாதி

அனிலநாள், காற்று, முந்து நாள், சுளகு, சேட்டை, முறம், முற்றிதல், வைகாசி ஆகியன இதன் பெயர்கள் ஆகும்.

விசாகம், விசாக நாள், சூர்ப்பம். சுளகு ஆகியன இதன் பெயர்கள் ஆகும்.

அனுஷம்

தாளி, தேள், பனை, புல், பெண்ணை, போந்தை, மித்திரநாள் ஆகியன இதன் பெயர்கள் ஆகும்.

கேட்டை

இந்திரநாள், எரி, செந்தழல், சேட்டை, வல்லாரை, வேதி, மூதேவி, கேட்டை ஆகியன இதன் பெயர்கள் ஆகும்.


மூலம்

எந்தத் தொகையால் பெருக்கப்படுகிறதோ, அந்தத் தொகைக்கும் பெயர், ஓர் நாள். தேட்கடை, வில். மூலம், மூல நட்சத்திரம், மூல நாள் - அசுர நாள், அன்றில், ஆனி, குருகு, கொக்கு, சிலை, சீலை, தேக்கடை, வில், தேர் கடை ஆகியன இதன் பெயர்கள் ஆகும்.

பூராடம்

உடைகுளம், நீர்நாள், முற்குளம். முக்குளம், பூராட நட்சத்திரம், முக்குணம், பூராடம் ஆகியன இதன் பெயர்கள் ஆகும்.

உத்திராடம்

ஆடி, ஆனி, கடைகுளம், விசுவநாள் ஆகியன இதன் பெயர்கள் ஆகும்.

திருவோணம்

உலக்கை, ஓணம், சிரவணம், சோணை, நள்ளு, மாயோநாள், முக்கோல், வயிரம். திருவோண நாள், சோனை, நள்ளு, மாயோனாள், திருவோணம் - ஒரு நாள், மாயோனாள், திருவோண நட்சத்திரம். நடு நாள், திருவோணம் ஆகியன இதன் பெயர்கள் ஆகும்.

அவிட்டம்

ஆவணி, நாகப்புள், கொடி, பறவை, புள், விசுவநாள் ஆகியன இதன் பெயர்கள் ஆகும்.

சதயம்

குன்று, சுண்டன், செக்கு, போர், வருணநாள்.

பூரட்டாதி

நாழி, பூரட்டாதி, முற்கொழுங்கொல் ஆகியன இதன் பெயர்கள் ஆகும்.

உத்திரட்டாதி

அரியநாள், நீபம் பிற்கொழுங்கோல், மன்னன், முரசு ஆகியன இதன் பெயர்கள் ஆகும்.

ரேவதி

இரவிநாள், கடைநாள், கலம், குலம், சூலம், தொழு, தோணி, நாவாய், பஃறி, புருடநாள், பெருநாள். ரேவதி நட்சத்திரம், இரேபதி, ஓடம், மரக்கலம், தோணி - அம்பு, ரேவதி நட்சத்திரம், இரேவதி நாள். நாவாய், அம்பி, கப்பல், சிலுப்பு, கடற்தேர், புணை ஆகியன இதன் பெயர்கள் ஆகும்.

நட்சத்திர நாட்கள்

பெருநாள், இலகுநாள், பய நாள், துருவ நட்சத்திரம், பாடாவாரி நட்சத்திரம், பாப நட்சத்திரம், பெண் நட்சத்திரம், பெண் நாள், வலநாளிடநாள், வலவோட்டு நட்சத்திரம், வலவோட்டு நாள் பெருநாள் - அச்சுவினி முதலிய நாள், இரேவதி, கொண்டாட்டமான நாள்.

இலகுநாள் - அசுவிணி, அத்தம், பூசம்.

பய நாள் - திருவாதிரை, ஆயிலியம், கேட்டை, மூலம்.


துருவ நட்சத்திரம்

துருவங்கட்டுதல் - சூத்திரம் உண்டாக்குதல், வகை பண்ணுதல். துருவச்சக்கரம் - துருவத்திற்கு இருபத்து மூன்றரைப் பாகை அளவில் நிற்பது. வான சோதி மண்டலம். துருவசக்கிரம், துருவச்சக்கிரம் - துருவத்திற்கு இருபத்து மூன்றரைப் பாகையளவின் நிற்பது. வான் சோதி மண்டலம்.

துருவ நட்சத்திரம் வட திசையின் அடி வானத்தில் தனித்து இருக்கும் பிரகாசம் உள்ள ஒற்றை நட்சத்திரம். இது வடக்கே உள்ள நட்சத்திரங்களில் ஒன்று. தன்னைச் சுற்றியுள்ள நட்சத்திரங்களுக்கு நடுவில் பெரிதாகக் காணப்படுவது. இது பூமியின் வட பாகத்தை நிர்ணயிக்க அறிகுறியாக உள்ளது. திசை தெரியாது கப்பலைச் செலுத்தும் மாலுமிகளுக்கு வடக்குக் திசையை அறிவிப்பது.

பாடாவாரி நட்சத்திரம்

கெட்ட நட்சத்திரம். அது திருவோணம், பரணி, சதயம், கேட்டை, சோதி, விசாகம், அனுஷம், அன்றியும் அசுபதி, மூலம் ஆகும்.

பாப நட்சத்திரம்

திருவாதிரை, கேட்டை, ஆயிலியம், பரணி கார்த்திகை, முப்பூரம், இந்நாட்களில் சுபகாரியம் செய்யலாகாது. இந்நட்சத்திரங்களுடன் பாவ வாரங்களுற்று இருத்தைகள் கூடில் அவமிருத்து யோகம் எனப்படும். இதில் செய்யும் காரியங்கள் நாசமாம். இந்த யோகங்களின் வியாதி கண்டால் மரணம் நேரும். (விதானமாலை.)

ஆண் நட்சத்திரம் புருட நட்சத்திரம்

அத்தம், புனர்பூசம், பூசம், திருவோணம், அபசித்து, அனுடம், பூரட்டாதி, உத்திரட்டாதி, அசுவதி, பரணி, கார்த்திகை, ரோகிணி ஆகிய நட்சத்திரங்கள். ஆணாள் - ஆண் தன்மையுடைய பெருநாள்.

ஆண், பெண், அலி நாட்கள்

பரணி, கார்த்திகை, உரோகிணி, புநர்பூசம், அத்தம், அனுடம், திருவோணம், பூரட்டாதி, உத்திரட்டாதி இவை புருட நட்சத்திரங்கள். மிருகசீரிடம், சதயம், மூலம் இவை அலி நட்சத்திரங்கள். ஒழிந்த அசுபதி, திருவாதிரை, ஆயிலியம், மகம், பூரம், உத்திரம், சித்திரை, சோதி, விசாகம், கேட்டை, பூராடம், உத்திராடம், ரேவதி, இவை பெண் நாட்களாம். கிரகங்களிற் செவ்வாய், வியாழன், ஆதித்தியன் இவை ஆண், சனி, புதன் இவை அலி வௌ்ளி, சந்திரன், இராகு, கேது இவை பெண்ணாம். (விதானமலை.)

பெண் நட்சத்திரம், பெண் நாள்

கார்த்திகை, திருவாதிரை, புனர்பூசம், பூசம், பூரம், அஸ்தம், விசாகம், அனுஷம், திருவோணம், அவிட்டம், உத்திரட்டாதி, ரேவதி என்பனவாகும்.

வலநாளிடநாள்

அச்சுவனி, புனர்பூசம், மூலம், பூட்டாதி முதலாக மும் மூன்று நாள் வலநாள். இவை மேடாதி மீனாந்தமாக எண்ணப்படும். ரோகணி, மகம், விசாகம், திருவோணம் முதலாக மும்மூன்று நாள் இட நாள். இவை விருச்சிக முதல் தனுவந்தமாக எண்ணப்படும் வலநாளுக்கு முந்தின பாதம் உடல், முடிந்த பாதம் உயிர் முடிந்த பாதம் உடல் என்றறியப்படும். (விதானமாலை.)

வலவோட்டு நட்சத்திரம், வலவோட்டு நாள் - அசுபதி, பரணி, கார்த்திகை, புனர்பூசம், பூசம், ஆயிலியம், அஸ்தம், சித்திரை, சுவாதி, மூலம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி என்பனவாகும்.

இவ்விதம் அகராதிகள், மற்றும் பழம் சோதிட நுால்கள் நட்சத்திரங்கள் பற்றித் தெரிவிக்கின்றன.

*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/astrology/general/p69.html


  2022
  2021
  2020
  2019
  2018
  2017

வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்

முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License