விளம்பி வருடம் - தை மாதப் பலன்கள்
முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை
கிரக பாதசாரங்கள்
சூரியன் - 1 - 9 உத்திராடம், 10 - 22 திருவோணம், 23 அவிட்டம் மகரம்.
சந்திரன் - அசுவிணி - பரணி..
செவ்- 21 வரை ரேவதி மீனம், 22 அசுவிணி - மேடம்.
புதன் - 3 பூராடம், 4 - 5 உத்திராடம் - தனுசு, 6 - 11 உத்திராடம் - மகரம், 12 - 19 திருவோணம், 20 - 26 அவிட்டம், 24 வரை கும்பம், 27 சதயம்.
குரு - 15 கேட்டை 2, 16 முதல் கேட்டை 3 விருச்சிகம்.
சுக்கிரன் - 2 வரை அனுடம், 3 - 14 கேட்டை, விருச்சிகம், 15 - 26 மூலம் தனுசு, 27 - பூராடம் தனுசு.
சனி - 9 வரை பூராடம் 2, 10 முதல் பூராடம் 3 தனுசு.
ராகு - புனர் 4 கடகம்.
கேது - உத்திராடம் 2 மகரம்.
மேஷம் லக்னம்
(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பணி தொடர்ந்த நிலைகளில் மாறுபாடு, நேர்மை மிக அவசியம், கர்ம காரியங்கள் இளைய சகோதிரம், புத்திரர், எதிரி வகையில் நிகழும். களத்திரத்தினால் அவமானம், சங்கடங்கள், செலவினங்கள், சிலருக்கு அரசதண்டனை, சிறைவாசம், உரிய ஒறுத்தம் கட்டுதல், அறுவை சிகிச்சை, இரத்த அழுத்தமாறுபாடு, நரம்புகள் பாதித்தல் எனவே கவனம் தேவை. இலாபங்கள், உரிய முறையான வருமானங்கள், மன உளைச்சல்கள், பகட்டு செலவினங்கள், மனஅமைதியின்மை, உறக்கமற்ற நிலை, அலைச்சல்கள், தன் வாக்கினாலே தானே அவமானப்படுதல், பெண்களால் அவமானப்படுதல், நெருப்பு, மின்சாரம் இவற்றினால் கண்டங்கள் ஆகியவை நிகழும்.
ரிஷபம் லக்னம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
இளைய சகோதிரத்தினால் மேன்மை, பணிகளில் கடினநிலை, பெயர், புகழ், கௌரவம் குறித்த நிலைகளில் முன்னேற்றம், புத்திரர், பெற்றோருக்கு உடல் நலிவு, முறையான தொழில் தொடர்ந்த வருமானம், தந்தை வழி வருமானம், நன்மைகள், ஆதாயங்கள், கடன், வம்பு வழக்கு தொடர்ந்த நிலைகளில் வர வேண்டிய வருமானம், மனைவி, குழந்தைகள் வழி சுபச்செலவினங்கள், அவர்களுடன் வெளியூர் பயணங்கள், பணி தொடர்ந்த பயணங்கள், செலவினங்கள் சிறந்த கேள்வி ஞானம், மகான்களின் ஆசி, தாயாருடன் ஆன்மீகப்பயணம் ஆகியவை நிகழும்.
மிதுனம் லக்னம்
(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து மேம்படுதல், முன்னேற்ற நிலைகள் காணப்படும். விடம், வெப்பம், மன உளைச்சல்கள் ஆகியனவற்றினால் தொல்லைகள் காணப்பெறும். பயணத்தடைகள், வண்டி வாகனத்தடைகள், உடல் கண்டங்கள், ஊராருடன் பகை, அது குறித்த செலவினங்கள், குடும்பத்தில் இடையூறுகள், வழக்குகளில் வெற்றி பெறுதல், வயிற்று வலி, மர்ம உறுப்புகளில் வலி ஆகியன காணப்படும். அரசாங்கத்தினால் ஆதாயங்கள், சிறந்த பணி அமைதல், அதன் வழி இலாபங்கள் ஆகியன அமையும்.
கடகம் லக்னம்
(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
இளைய சகோதிரத்துடன் கருத்து மாறுபாடுகள், செலவினங்கள், கடன்கள், அதனை வசூல் செய்தல், களத்திரத்தின் வழி செலவினங்கள், வெளியூர் பயணங்கள், தலைசுற்றல், மயக்கம், உடல் அசதிகள், விட கண்டங்கள், தொழில், புத்திரர் வழி பொன், பொருள், ஆடை, ஆபரணச்சேர்க்கைகள் கிடைக்கப்பெறுவீர்கள். பணியில் உயரிய நிலை அடைவீர்கள். எதிர்பார்த்த பதவி நிலைகளை அமைத்துத் தரும்.
சிம்மம் லக்னம்
(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
கடன், வம்பு வழக்குகளில் தொல்லைகள், உடல் இரத்த அழுத்த பாதிப்புகள், மகான்களின் ஆசி, செவ்விலங்குகளினால் கண்டங்கள், உறக்கமின்மை, உடல் அலைச்சல்கள், மன நிம்மதியின்மை, தொழிலில் கடினநிலை, இளைய சகோதிரம், தொழில், புத்திரர்கள் தொடர்ந்த நிலையில் சொகுசு வாகனங்களில் செல்லுதல், பெற்றோர்களினால் இடையூறுகள், பிறகு அவர்கள் வழி ஆதாய நன்மைகள், தனவரவு, வெளியூர் அலைச்சலுடன் கூடிய பயணங்கள் ஆகியவை நிகழும்.
கன்னி லக்னம்
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சிறந்த இலாபங்கள், அவற்றிற்கு ஏற்ற செலவினங்கள், சிறந்த ஞானம், உடல் அசதிகள், தாயாருக்கு சுகக்குறைவு, தொழிலில் கடினநிலை, கஷ்டப்பட்டதற்கான உயர் பதவி நிலையினை அடைதல், அதன் வழி இலாபங்கள், சிறந்த உணவுவகைகள், அழகிய ஆடை ஆபரணங்களை அணிந்து கொள்ளுதல், இளைய சகோதிரத்துடன் ஒற்றுமை, தன் புகழ் கௌரவத்தில் அதிகாரத் தோரணைகள் காணப்பெறுதல், சிறந்த தனவரவு, நெருப்பு கண்டங்கள் ஆகியன நிகழும்.
துலாம் லக்னம்
(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தாயார், கடன்களினால் ஆதாய அனுகூலங்கள், எதிரி வகையில் தொல்லைகள், சிறந்த தனவரவு, இழப்பீடு, காப்பீடு முதலான வருமானங்கள், பெற்றோர்,இளைய சகோதிரர், களத்திரம் வகையில் செலவினங்கள், கரும காரியம் நிகழ்தல், தாயாருக்கு உடல் சுகக்குறைவு, பணியில் பல மாறுதலான நிலைகள், குடும்பம், களத்திரத்தினால் சுபச்செலவினங்கள், வெளியூர் பயணங்கள், முன்னேற்ற வளர்ச்சி நிலைகள் ஆகியவை காணப்பெறும்.
விருச்சிகம் லக்னம்
(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
புத்திரப்பேறு அமைதல், ஆண் குழந்தை பெறுதல், சிறந்த தனவரவுகள், இலாபங்கள், களத்திரத்தினால் முன்னேற்றம், வளர்ச்சி நிலைகள், பதவி குறித்த நிலைகளில் செலவினங்கள், வெளியூர் சுபப்பயணங்கள், இளைய, மூத்த சகோதிரத்துடன் கருத்து மாறுபாடுகள், எதிரிகள் சரணடைதல், அதன் வழி செலவினங்கள் ஆகியவை அமையும்.
தனுசு லக்னம்
(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பற்களில் உபாதைகள், பத்திய உணவுகளை மேற்கொள்ளுதல், வளர்ச்சித்தடைகள், இளைய சகோதிரத்துடன், களத்திரத்துடன் கருத்துப் பிணக்குகள், தந்தைக்கு உடல் உபாதைகள், சோம்பல்தனம், விட கண்டங்கள், குடும்பத்தில் குழப்பங்கள், சிறந்த தனவரவு, தொழிலில் நல்ல பெயர், வளர்ச்சி நிலைகள், முன்னேற்ற நிலைகள், கௌரவப் பதவிகளை அடைதல், குடும்பத்தாருடன் வெளியூர் பயணங்கள், சுபச்செலவினங்கள், வழக்குகள் அனைத்திலும் வெற்றி ஆகியவை நிகழும்.
மகரம் லக்னம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
வீட்டில் சுப நிகழ்வுகள், நிகழும். திருமணம் முதலான நிகழ்வுகள் கூடி வரும். மயக்கம், தலைசுற்றல், அசதிகள், நரம்பு தொடர்ந்த தளர்ச்சிகள், சிறப்பான வளர்ச்சி, முன்னேற்ற நிலை கூடிய அதிகாரப்பதவி, பணி அமைதல், ஆன்மீகம், சோதிடம், மருத்துவம் தொடர்ந்த சிறப்புப்பணியும் சிலருக்கு அமையும். சோம்பல், அயர்ச்சி காணப்பெறும். சிறந்த தெரியம், இளைய சகோதிரம், தாயாரால் நன்மை ஏற்படும். பொன், பொருள் முதலிய விசேடச் சேர்க்கைகள் ஏற்படும். அரசாங்கத்தினால் ஆதாய அனுகூலங்கள், நன்மைகள், பதவி முதலியவை ஏற்படும். சிறந்த இலாபங்கள் அமையும். மகான்களின் தரிசனம் அமையும். புதிய இலாப முயற்சிகள் வெற்றி அளிக்கும். குடும்பம், குழந்தைகள், பணி, தந்தையார் தொடர்ந்த வெளியூர் பயணங்கள், சிறந்த கேள்வி ஞானம் அமையும்.
கும்பம் லக்னம்
(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
இளைய சகோதிரம், தொழிலினால் வரக்கூடிய தனவரவுகள் வரும். ஆன்மீகக் கனவுகள் வரும். சிறந்த இலாபங்கள் வரும். புத்திரர்கள் வகை ஆதாய இலாபங்கள் கிடைக்கும். பெற்றோர் வகையில் நற்பெயர், நன்மைகள், சிலருக்குப் பணியும் அமையும். எதிரிகள் வலுக்குறைந்து காணப்பெறுவர். அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். புத்திரர், களத்திரத்தினால் செலவினங்கள், அவர்களுடன் வெளியூர் சுப பயணங்கள், சிறந்த தைரியம், பதவியில் உன்னத நிலை ஆகியவை அமையும்.
மீனம் லக்னம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பதவி, பெயர், புகழ், கௌரவம் குறித்த நிலைகளில் மிகுந்த நன்மைகள் வளர்ச்சி, முன்னேற்றங்கள் காணப்பெறும். அழகிய ஆடை ஆபரணச்சேர்க்கைகள் முதலானவை அமையும். இளைய சகோதிரத்திற்கு விசேடங்கள் நிகழும். மிகுந்த முன்கோபம் காணப்பெறும். வளர்ச்சி, முன்னேற்றங்கள் காணப்பெறும். குடும்பம், தந்தையார், மூத்த சகோதிரம் வகையில் பணி, இலாபம், செலவினங்கள் அமையும். தாயார், களத்திரம் வழி, எதிரிகள் வழி இலாபம் கிடைக்கப் பெறுவீர்கள். உடல் அயர்ச்சிகள் காணப்பெறும்.
* * * * *

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.