மகப்பேறு குறித்த பழமொழிகள்
மகப்பயிர் எனும் துாய தமிழ்ச்சொல் மகவினைக் குறிக்கும். மழலைச் செல்வம் எத்துணை செல்வம் பெற்றிருப்பினும் மிகவும் இன்றியமையாதது.
"படைப்புப் பல படைத்து
உடைப்பெருஞ் செல்வர் ஆயினும்
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்ப்பட விதிர்த்து
மயக்குறு மக்களை இல்லா மாந்தருக்கு
பயக்குறை இல்லை தாம் வாழு நாளே!"
என்று சங்க இலக்கியப் பழம் பாடல் இதன் சிறப்பினை உணர்த்தும்.
பிறப்பு
* குளவி கூடு கட்டினால் பிறப்பு.
* குளவி மண் கூடு கட்டினால் பெண் குழந்தை பிறக்கும்.
ஜன்மம் - பிறவி
* ஜன்மக் குருடனுக்குக் கண் கிடைத்து போல
* ஜன்மத்தால் ஜாதியோ? கர்மத்தால் ஜாதியோ?
* ஜன்மத்தில் பிறந்தது செருப்பாலடித்தாலும் போகாது.
* ஜன்மக் குறைத்தைச் செருப்பால் அடித்தாலும் போகாது.
* ஜன்மத்தால் ஜாதியோ கன்மத்தால் ஜாதியோ?
* ஜன்மத்தில பிறந்தது செருப்பால் அடித்தாலும் போகாது.
ஆண் - பெண் பிறவி
* ஆணாய்ப் பிறந்தால் அருமை, பெண்ணாய்ப் பிறந்தால் எருமை.
* ஆணிக்கு இணங்கிய பொன்னும், மாமிக்கு இணங்கிய பெண்ணும் அருமை.
* ஆணுக்குக் கேடு செய்தாலும், பெண்ணுக்குப் பிழை செய்தல் ஆகாது.
* ஆணுக்குப் பெண் அஸ்தமிச்சுப் போச்சோ?
* ஆணை அடித்து வளர், பெண்ணைப் போற்றி வளர்.
கருநாக்கு
* குண்டுணி சொல்லுபவனுக்கு கருநாக்கு; கட்டு விரியனுக்கு இரு நாக்கு.
ஒருவர் சொல்வது பலித்துத் தீமையை ஏற்படுத்தி விடும் என்று நம்புவதால் தீமையை விளைவிக்கும் வாக்கு. அவனுக்குக் கருநாக்கு என்பது தெரிந்திருந்தும் அவனிடம் ஆலோசனை கேட்டு விட்டு இப்போது ஏன் சஞ்சலப் படுகிறாய்?
ஆண் பிள்ளை
* பிள்ளை பிறப்பதும், மழை பெய்வதும் மகாதேவரின் சித்தம்.
* சாண் பிள்ளை ஆனாலும் ஆண் பிள்ளை வேண்டும்.
பெண் குழந்தை
* பெண் குழந்தை இல்லாதவனுக்கு, அன்பைப் பற்றி அறிய முடியாது. (இத்தாலியப் பழமொழி)
* முதற்குழந்தை பெண் குழந்தையாக இருந்தால், அவருக்கு அதிர்ஷ்டமுண்டு. (போர்த்துகீசியப் பழமொழி)
திருமணம்
சாத்திரம் பார்த்துப் பெண்ணைக் கொள். கோத்திரம் பார்த்துப் பெண்ணைக் கொடு. (திருமணம்)
கொள்ளி
* தந்தைக்கு தலைப்பிள்ளை, தாய்க்குக் கடைப் பிள்ளை.
வேளை (காலம்)
* ஆகாத வேளையில் பிள்ளை பிறந்தால், அண்டை வீட்டுக்காரனை என்ன செய்யும்?
* ஆகாத வேளையில் பிள்ளைப் பிறந்தால் அப்பனையும், ஆத்தாளையும் கொல்லுமே தவிர, சொன்ன பார்ப்பானை என்ன செய்யும்?
* தொப்புள் அறுத்த கத்தி என்னிடம் இருக்கிறது. இடைப்பிறப்பும், கடைப்பிறப்பும் ஆகாது.
* அச்சில்லாத தேர் ஓடுமா? அகமுடையான் இல்லாதவள் பிள்ளை பெறவும் கூடுமா?
* அடி என்பதற்கு பெண்சாதியில்லை; அட்ட புத்திர வெகு பாக்ய நமஸ்து. அடி வயிற்றிலே இடி எழுந்தாற் போல.
பிறப்பு : கொடி, மாலை
கொடி
* கொடி சுற்றிப் பிறந்த பிள்ளை, குலத்திற்கு ஆகாது.
* கொடி சுற்றிப் பிறந்த பிள்ளை கோத்திரத்திற்கு ஆகாது.
மாலை
* மாலை சுற்றிப் பிறந்த விள்ளை மாமனுக்கு ஆகாது.
* மாலையுடன் பிறந்த பிள்ளை மாமனுக்கு ஆகாது.
பெண் தருதல்
* பாத்திரம் அறிந்து பிச்சை இடு. கோத்திரம் அறிந்து பெண்ணைக் கொடு.
மகப்பேறு
பொது
* அதிகப் பிள்ளை அதிகத் தொல்லை.
* எத்திலே பிள்ளை பெற்று இரவிலே தாலாட்டுவது.
* இராப் பிறந்த பிள்ளையும் ஆகாது; பகல் பிறந்த பிள்ளையும் ஆகாது. (பருவத்தே பயிர் செய்)
மூன்றாம் பேறு
* மூன்றாவது பெண் குழந்தை பிறந்தால் முற்றமெல்லாம் பொன்னாகும். இந்தியா.
* மூன்றாவது பெண் குழந்தை பிறந்தால் முற்றமெல்லாம் பொன் கிடைக்கும். (இந்தியப் பழமொழி)
நாலாம் பேறு - நாலாம்பேறு பெண்
* நாலாம் பேற்றுப் பெண் நாதாங்கியை விற்றுண்ணும்.
* நாலு பிள்ளை பெற்றவருக்கு நடுத்தெருவிலே சோறு.
* நாலாவது பெண் நாதாங்கி முளைக்கும் திக்கு இல்லை.
ஐந்தாம் பேறு - பெண்
* அஞ்சாவது பெண்ணைக் கெஞ்சினாலும் தர மாட்டான். (பிரம்ம புத்திரன், தன்னிகரில்லா தமிழகத்துப் பழமொழிகள்)
* அஞ்சாவது பெண்ணைக் கெஞ்சினாலும் தர மாட்டார்கள் அல்லது கிடைக்காது.
* அஞ்சாவது பெண் கெஞ்சினாலும் கொடுக்க மாட்டார்கள்.
* அஞ்சாவது பெண் பிறந்தால் அரசனும் ஆண்டியாவான்.
* ஐந்தாவது பெண் பிறந்தால் அரசனும் ஆண்டியாவான்.
* ஐந்து பெண்களுக்கு மேல் பிறந்தால் அரசனும் ஆண்டியாவான்.
* அஞ்சாறு பொண்ணு பெற்றால் அரசனும் ஆண்டியாவான். (இந்தியப் பழமொழி)
ஆறாம் பேறு - பெண்
* ஆறாம் குழந்தை பெண்ணாகப் பிறந்தால், ஆனான குடித்தனமும் நீறாய் விடும்.
* ஆறாம் குழந்தை பெண்ணாய் பிறந்தால் ஆனான குடித்தனம் நீராய் விடும்.
* ஆறு பிள்ளை பெற்றவளுக்குத் தலைச்சன் பிள்ளைக்காலி மருத்துவமாம்.
* ஆறாவது பெண் பிறந்தால் தரித்திரம்.
* ஆறாவது பிள்ளை யானை கட்டி வாழ்வான்.
எட்டாம் பேறு
* எட்டாவது பெண் எட்டிப் பார்த்த வீடு குட்டிச்சுவர்.
* எட்டாம் பேறு பெண் பிறந்தால் எதிர்த்த வீடு குட்டிச் சுவர். தமிழ்நாடு.
* எட்டாம் பேறு பெண் பெற்றால் எட்டிப் பார்த்த வீடு குட்டிச்சுவர்.
பத்தாம் பேறு
* பத்தாம் பேறு பாடையில் வைக்கும். (பிரம்மபுத்திரன், தன்னிகரில்லா தமிழகத்துப் பழமொழிகள்)
சாமுத்திரிகா இலட்சணம் - முகம், கழுத்து, புருவம், தலைமுடி
முகம்
* அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
* களையான முகம் ஒரு சிபாரிசுக் கடிதம்.
* காதுக்கு இட்டால் முகத்துக்கு அழகு.
கழுத்து
ஆரக்கழுத்தி - கழுத்தில் தீய ரேகை உள்ள பெண். ஆரக்கழுத்தி அரண்மனைக்காகாது. (யென்.பழ.தொ.2218.)
புருவம்
கூடும் புருவம் இவை குடியைக் கெடுக்கும்.
தலைமுடி
கோரை, சுருட்டை, பம்பை எனத் தலைமுடியினை மூவகைப்படுத்தி உள்ளனர்.
* கோரை குடி கெடுக்கும்.
* சுருட்டை சோறு போடும்.
* பம்பை பால் வார்க்கும்.
தலைமுறை
* நாலாம் தலைமுறைப் பார்த்தால் நாவிதனும் சிற்றப்பன் ஆவான்.
* நித்திய கண்டம் பூரண ஆயுசு.
அரசமரம் - மலடி
* அரச மரத்தைச் சுற்றி, அடி வறிற்றைத் தடவினது மாதிரி.
* அரச மரத்தைச் சுற்றி வந்து அடிவயிற்றை தொட்டுப் பார்த்தாளாம்.
* ஆலமரத்தைச் சுற்றி வந்து அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்தது போல.
* துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு.
உதறுகாலி
* உதறுகாலி வந்தாள் உள்ளதும் கெடுத்தாள். (மு.சரளா, பெ.ப.ப.மொ)
* உதறுகாலி முண்டை உதறிப் போட்டாள்.
துடைகாலி
* துடைகாலி முண்டை துடைத்துப் போட்டாள்.
* துடைகாலி வந்ததும் எல்லாம் தொலைந்து போயிற்று.
கணுக்கால்
* கணுக்கால் பெருத்தால் கணவனுக்கு ஆகாது.
* கணுக்கால் பெருத்தால் கணவனைத் தின்பாள்.
கர்ப்பிணி
* கர்ப்பிணியின் பேரில் துர்ப்பலம்.
* துர்ப்பலத்தில் கர்ப்பிணி ஆனால் எப்படி பிள்ளையை முக்கிப் பெறுவது?
பெண்ணின் இழிபண்புகள் அடங்காமை
* கைம்பெண்டாட்டி பெற்ற பிள்ளை ஆனாலும் செய்யும் சடங்கு சீராய்ச் செய்ய வேண்டும். (மு.சரளா, பெ.ப.ப.மொ, கைம்மை நிலையில்)
* சுக்கிர வௌ்ளி உதயத்தில் தாலி கட்டி சூரியனுக்குள் அறுத்தாள்.
* நூரணிப் பெண் ஊருணி தாண்டாது, வீட்டிற்குள் அடைதல். (டாக்டர். சரளா இராசகோபாலன், பெ.ப.ப.மொ, பெண்ணின் வளர்ச்சி கலைகள் குழந்தை)
சடங்கு
* உடற்குறை குறித்து ஒன்றும் அற்ற நாரிக்கு (அ) தங்கைக்கு ஒன்பது நாள் சடங்கு. அதுவும் அற்ற நாரிக்கு ஐந்து (அ) ஐம்பது நாள் சடங்கு.
தொகுப்பு:- முனைவர் ஸ்ரீவாலாம்பிகை
*****
 இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|