பிலவ வருடம் - ஆடி மாதப் பலன்கள்
முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை
கிரக பாதசாரங்கள்
சூரியன் 3 - 16 ல் பூசம் - கடகம். 17 - 30 ல் ஆயில்யம் – கடகம், 31 முதல் மகம் – சிம்மம்.
சந்திரன் - சித்திரை - அனுடம்.
செவ்- 2 – 4 - 24 வரை மகம், 25 பூரம் – சிம்மம்.
புதன் - 3 - 4 ல் திருவா, மிதுனம். 5 – 10 – புனர் மிது, 10 – புனர் - கடகம். 11 – 17 பூசம் , 18 – 23 ஆயில்யம் – கடகம். 24 – 30 மகம் – சிம்மம். 31 பூரம் – சிம்மம்.
குரு - அவிட்டம் 4 ல் கும்பம்.
சுக்கிரன் 1 – 12 மகம் - சிம்மம். 13 – 23 பூரம் சிம்மம். 24 – 26 உத் - சிம்மம். 27 – கன்னி.
சனி - 9 ல் திருவோணம் 2 ல் மகரம். (வக்ரம்)
ராகு - 19 ல் ரோகிணி 1 ல் ரிடபம்.
கேது - 19 ல் அனுடம் 3 ல் விருச்சிகம்.
மேஷம் லக்னம்
(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
திருமணம், கல்வி வளர்ச்சி நிலை கை கூடுதல், சிலருக்கு இரண்டாம் திருமணம் அமைதல், தொழில் நிலையில் முடக்கம், குடும்பத்தில் வீட்டில் கடும் வாக்குவாதங்கள், பூர்வ புண்ணிய வழி நன்மைகள், இலாபங்கள், நியாயமான தனலாபம், முறையற்ற தீய செயல்களில் இருந்து விடுபடல், இறைநிலையை விரும்புதல், ஆடை, ஆபரணம் முதலானவை ஆன்மீக நிலையில் அணிதல், புத்திரர்கள், வாழ்க்கைத்துணை வழி அவமானம், அனுபவம் பெறுதல், வெளி ஊர் ஆன்மீகப் பயணம் மேற்கொள்ளுதல், செலவினங்கள், கரும காரியங்கள் நிகழ்தல், நரம்பு பலகீனங்கள், வயிற்று வலி, இரத்த அழுத்த மாறுபாடு ஆகியவை நிகழும்.
ரிஷபம் லக்னம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தங்களின் கல்வி, வளர்ச்சி நிலை தொடர்ந்த பயணங்கள், செலவினங்கள் ஏற்படும். சிறந்த தைரியம், தேவைக்கேற்ற பணம், ஆடை ஆபரணப்பொருட்களில் மகிழ்வு, சோம்பல்தனம், சரியான உறக்கமின்மை, பல்வேறு எண்ணங்கள், சிந்தனைகள், வீட்டில் வாகன வசதிப் பொருட்கள், வெளியூர் ஆன்மீக ஆலயப்பயணங்கள், செலவினங்கள், வயதானவர்களின் கரும காரிய நிகழ்வுகள், தொழிலின் மீது அதிக பற்று, பெயர், மதிப்பு ஏற்படுதல், கௌரவ மேன்மை, இலாபம் பெறுதல், கௌரவிக்கப் பெறுதல், தந்தையாருடன், மூத்த சகோதிரத்துடன் கருத்து மாறுபாடு, பிணக்கு ஏற்படுதல் ஆகியவை நிகழும்.
மிதுனம் லக்னம்
(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
உறக்கமின்மை, அலைச்சல், வெளியூர்ப் பயணங்கள், ஆன்மீக சுவாமிகளின் தரிசனம், சாதகர், தந்தை இருவருக்கும் உடல் சுகமின்மை, மருத்துவம் மேற்கொள்ளுதல், கரும காரியம் நிகழ்தல், வளர்ச்சி, திருமணம், கல்வி நிலை, இளைய திருமணம், மூத்த சகோதிரம், தொழில் நிலை வழி இலாபம் அமைதல், கடன் வழியில் ஆடை ஆபரணம் முதலியன வாங்குதல், இளைய சகோதிரம், குடும்பத்தாருடன் கருத்து மாறுபாடு, இரண்டாம் திருமணம், இரண்டாம் தர வாகனம் வாங்குதல் ஆகியவை அமையும்.
கடகம் லக்னம்
(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
நேர்மை, அதிக கோபம், தைரியம்,பல தடைகள், இளைய சகோதிரத்தால் கருத்து மாறுபாடு, செலவினங்கள், மூத்த சகோதிரம், இளைய தாரம், தாயார் வழி தனலாபம், நன்மைகள், குடும்பத்தில் கடும் வாக்குவாதம் தொல்லைகள் இருப்பினும் மகிழ்ச்சி நிலவும். சிறந்த ஞானம், அறிவு நிலை பட்டறிவு அனுபவம் பெறுவீர். சுப செலவினங்கள், ஆன்மீகப் பயணங்கள், நல்ல தனவரவு, வீட்டு வாகன வசதிப் பொருட்கள் அமைதல், வாழ்க்கையில் பற்றற்ற நிலை ஆகியவை அமையும்.
சிம்மம் லக்னம்
(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
எதிரிகள், வாழ்க்கைத் துணை, நம்பி ஏமாற்றிய நண்பர்கள், கடன், வம்பு, வழக்கினால் தொல்லைகள், அவமானம் அடைதல், தாயார் உடல் சுகமின்மை, தொழில், தனவகையில் மாற்றம், நிதானமுடன் செயல்படுதல் நன்மை தரும். கரும காரியம் நிகழும். ஏன் எனில் கருமத்தானம் என்பதால் திடீர் சிறைவாசம் மேற்கொள்ள நேரும். நேர்மையைக் கடைபிடித்தல் நன்மை தரும். தொழிலில் குறுக்கு வழியில் செல்லாது நேர்மையான எண்ணம் செலுத்தினால் உங்களது புதிய முயற்சியினால் மிகுந்த நன்மை அமையும். வெகுமதி, பாராட்டு, புகழ் ஆகியவற்றால் கௌரவிக்கப் பெறுவீர்கள். கவனம் தேவை. இருப்பினும் பெற்றோர், இளைய சகோதிரம், தொழில் வழி பெருமை முன்னேற்றங்கள் நன்மை, குடும்பத்தாருடன் வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள், இலாபங்கள் அமையும்.
கன்னி லக்னம்
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தொழில் நிலையில் முன்னேற்றம், குடும்பம், இளைய சகோதிரம், தந்தை, இவர்களுடன் சுப வெளியூர்ப்பயணம், செலவினங்கள், சிறந்த தொழில், முயற்சியின் வழி தனவரவு ஆகியவை அமையும். தந்தையின் உடல்நலனில் கவனம் தேவை. தாயார், கல்வி வளர்ச்சி நிலை, திருமணம் முதலியவற்றில் தடைகள் நிலவும். புத்திரர், அறிவுநிலை, கடன், வம்பு, வழக்கு வழி பல சிரமங்கள் காணப்படும்.
துலாம் லக்னம்
(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சிறந்த நற்பெயர், அரசாங்கத்தால் வெகுமதி, தந்தை வழி, இளைய சகோதிரம், ஆடை ஆபரணச்சேர்க்கை, அதிக நன்மை, இலாபம், சிலருக்கு இரண்டாம் தர காதல் திருமணம், முயற்சியில் மேன்மை, விட கண்டங்கள், வாழ்க்கையில் பற்றற்ற நிலை, பத்திய உணவு மேற்கொள்ளுதல், தாயார், குடும்பத்தார், புத்திரர்களுடன் கருத்து மாறுபாடு ஆகியவை நிலவும். மூத்த சகோதிரம், இளைய தாரம், தந்தை ஆகியோர்களுடன் தொழில் நிலை தடங்கல்கள், சிரமங்கள், அவர்கள் வழி கரும காரிய நிகழ்வுகள் ஆகியவை அமையும்.
விருச்சிகம் லக்னம்
(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தைரியத்தில் அதிக கோபம், அதனால் கவனம் சிதறுதல், எண்ணங்களில், முயற்சிகளில் சில தடைகள், குடும்பம், புத்திரர்களுடன் வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள், இளைய சகோதிரம், தாயாருடன் கருத்து மாறுபாடு, தொழில், மூத்த சகோதிரம், இளைய தாரம் இவர்கள் வழி நன்மை, சில அவமானங்கள் அமையும். தொழிலில் வாழ்க்கைத்துணை, கல்வி நிலை, தாய்மாமன், வம்பு, கடன், வழக்கு வழி பயணம், செலவினம் அமையும். வாகனத்தில் திடீர் விபத்து, கரும காரிய மரணங்கள் நிகழும்.
தனுசு லக்னம்
(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
திருமணம், சிலருக்கு இரண்டாம் திருமணம், வளர்ச்சி, கல்வி நிலையில் மாற்றங்கள், புத்திரர், இளைய தாரம், மூத்த சகோதிரம் வழி நன்மை, வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள் மகிழ்வாய் அமைதல், வர வேண்டிய தனவரவில் சில தடைகள், இளைய சகோதிரத்துடன் கருத்து மாறுபாடு, தாயார், ஆடை, ஆபரணங்களில் சில மாற்றங்கள், தொழில், தந்தையார், திருமணம், வளர்ச்சி மேல் நிலை வழி பெருத்த அவமானங்கள் ஏற்படும். விட கண்டங்கள், வாழ்க்கையில் பற்றற்ற நிலை, ஆன்மீகப்பயணங்கள், மகான்களின் தரிசனம் ஆகியவை அமையும்.
மகரம் லக்னம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
எடுக்கும் முயற்சிகளில் தடைகள், மந்த நிலை நிலவும். தனவரவில், முயற்சியில் சில உடல் சுகமின்மை, தடைகள் நிலவும். இளைய சகோதிரத்தால் சில நன்மைகள், வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள் அமையும். சிறந்த ஆடை, ஆபரணம், பொருள் வரவு, மனதிற்கு மகிழ்வாய் அமையும். குடும்பம், தாயார், புத்திரர், தொழில், மூத்த சகோதிரர், இளைய தாரம் வழி இலாபம், நன்மை கிடைக்கும். அதே சமயத்தில் அவற்றால் சில அவமானங்களும் அமைந்து இருப்பினும், அவர்களாலும் நன்மை கிடைக்கும். தாய்மாமன், கடன், வம்பு, வழக்கு, தந்தையார் வழியில் சில சங்கடங்கள் இருப்பினும் உடல் நரம்புப்பாதிப்பு, குறைந்த இரத்த அழுத்தம், உடல் பலகீனம் ஆகியவை காணப்படும். உடல் நலனில் கவனம் தேவை. அதிக கடினங்கள் இருப்பினும் பூர்வ புண்ணிய நற்பலன் வெகு சிறப்பாய் திடீரென அமையும். தொழில் நிலையில் மேன்மையான பதவி கூடிய மாற்றங்கள் இருக்கும். கருமகாரியம் நிகழும்.
கும்பம் லக்னம்
(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
புத்திரப்பேறு, திருமணம், இரண்டாம் திருமணம் ஆகியவை கை கூடி வரும். குடும்பத்தார், மூத்த சகோதிரம், இளைய தாரம் ஆகியோர்களால் கௌரவம், நன்மை, அதிக இலாபம் அமையும். கரும காரியம் நிகழும். எடுக்கும் முயற்சிகளில் தடைகள், மந்த நிலை நிலவும். தாயார் உடல் சுகமின்மை, புத்திரர், கல்வி வளர்ச்சி நிலை, வாழ்க்கைத்துணை வழி சில சோதனைகள் அமையும். மகான்களின் தரிசனம், கரும காரியத்தடைகள், சிலருக்கு ஆன்மீகம் தொடர்ந்த தொழில்நிலை ஆகியவை அமையும். ஆடை ஆபரணச்சேர்க்கை, தொழில், பெற்றோர் ஆகியவற்றினால் பூர்வ புண்ணிய நற்பலன் அமையப்பெறுவீர். உடலில் நரம்பு பலகீனம் காணப்பெறும். சிலருக்கு மனைவி, புத்திரர் வழி திருமண முறிவு, விவாகரத்து அவமானத்துடன் பஞ்சாயத்துடன், அமையும். காதல் திருமணம் திரும்ப அமையும்.
மீனம் லக்னம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தொழில், எடுக்கும் முயற்சிகளில் சில தடைகள், வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள் ஆகியன அமையும். மூத்த சகோதரி, இளைய தாரம் வழி சங்கடங்கள் நிலவும். இளைய சகோதிரத்துடன் கருத்து மாறுபாடு காணப்பெறும். தாயார், களத்திரம், வளர்ச்சி மேல் நிலை, வம்பு, கடன், வழக்கு, தாய்மாமன் வழி சில அவமானங்கள் இருக்கும். இருப்பினும் பெரிதாய் பாதிக்காது. வீட்டு வாகன வசதிப்பொருட்கள் அமையும். தாயார் உடல் மருத்துவ சிகிச்சையினால் நன்மை பெறும்.
* * * * *

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.