Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!

                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam

Content
உள்ளடக்கம்

சமையல்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஜோதிடம்
பொதுத் தகவல்கள்

நெல் விளைச்சலுக்கு ஜோதிடக் குறிப்புகள்

முனைவர் ஸ்ரீவாலாம்பிகை


நெல் இது ஓர் பயிர் வகை. இவற்றில் பல வகைகள் உள்ளன. செந்நெல் இது குறித்து தமிழ் சங்க இலக்கிய நுால்கள் பல செய்திகளைத் தெரிவித்துள்ளது. இந்நெல்லின் வளர்ச்சி மிக நீண்டு வளரக்கூடிய அமைப்பு உடையது. இந்நெல்லினைச் சுற்றி வேலி போல் வளரும் கரும்பினை யானை ஒடித்து உண்டாலும் தெரியாத அளவிற்கான மிக அதிக உயரம் வளரக்கூடியது என சீவக சிந்தாமணி பதிவிட்டுள்ளது.

மேலும் நாட்டுப்புற இலக்கியப் பாடல்;

“ மாடுகட்டிப் போரடித்தால்
மாளாது செந்நெல் என்று
ஆனை கட்டிப் போரடிக்கும்
அழகான தென்மதுரை ”

என்று மதுரையில் இந்நெல் விளைவினைப் பற்றியும், நெற்களத்தில் நெற்போரடித்தல் பற்றியும் தெரிவிக்கின்றது. இங்கு இதற்கான கோள்நிலைகளை ஆய்வு நோக்கினில் காண்போம்.

தை மாதப்பௌரணை அதிக மழை - நெல் அளவு கோல்

தை மாதம் பௌரணையன்று சாயந்திரம் ஒரு பலம் பஞ்செடுத்து வெளியில் வைத்து இருந்து மறுநாட்காலையில் அப்பஞ்சைப் பிழிந்து பார்க்கையில் நெல்லிடை சுத்தமாகிய பனி நீர் இருந்தால் அவ்வருடத்தில் உலகத்தில் அதிகமாக மழை பெய்யும்.

“ஆமே மகர மதிபவ்வத் தன்று சந்தி காலமதிற்
றாமே பஞ்சதொருபலத்தைத் தனியேவைத்து மறுநாளில்
நாமே பிழிய நெல்லிடைதா னல்ல சலம திருக்குமெனிற் பூமே லந்த வருடமதிற் பொழியு முதக மதிகமதே” (மழை, செ.எ.94, ப.32.)

என்றும் குறிப்பிடுகின்றது. ஆலம், ஆலி என்பன மழையைக் குறிக்கும்.


நெல் அதிக விளைவு

மழை நுால் ஆவணி மாதம் முதல் தேதியன்று மேகங் குமுறினும், மின்னினும், ஐப்பசி மாதம் கடைசி வரை அதிகமாக மழை பெய்யும். அன்றியும் இம்மாதம் முதல் தேதி முதல் ஐந்தாந் தேதி வரைக்கும் நித்தமும் குமுறல், மின்னல் உண்டாகில் மேற்குறிப்பிட்டபடி அதிகமாக மழை பெய்யும். அந்நாளில் நெல் பெருகும் என்று தெரிவிக்கின்றது.

“நெல்லும் பெருகுஞ்சிம்மமதி நிகழுமுதலாந்தினத்தன்று
புல்லு மேகக் கற்சிதமும் பொருந்து மின்னலுண்டாகில்
வல்லக் கோலின் மதிமட்டும் மழையும் பெய்யு மொன்றஞ்சு
செல்லும் வரைக்கு மின்னலிடி சேரின்மேற் சொற்பலனாமே” (மழை, செ.எ.82, ப.28.)

என்றும் குறிப்பிடுகின்றது.

பல்வேறு நெல்லினம் விளைவு - வியாழன் ஆட்சி - தனுசு

வியாழன் தனுசு ராசியில் இருக்கும் காலத்தின் போது ஆனி என்னும் ஆண்டு அவ்வாண்டில் மழை பெய்து வற்றிப் போன குளம், கிணறு கண்வாய் முதலானவைகளில் நீர் நிறைந்து அனைத்து விதத் தானியங்களும் விளைந்து, மக்கள் நீதி தப்பாமல் வாழ்வார்கள். ஆகினும் அரசர்களுக்குள் பகை மூண்டு போர்க்களத்தில் யுத்தம் புரிவார்கள். கரும்பு, நெல்லின் இனம் (பல வகை) முதலியன விளைந்து மக்கள் நல்ல நெறியுடன் வாழ்வர்.

“வில்லினிற் குருவு மேவ மிதுனவாண் டவ்வாண் டத்தில்
புல்லிடு முதகம் பெய்துப் பொய்கைநீர் நிறைந்து கன்னல்
நெல்லினம் விளைந்து மாந்தர் நெறிதவ றாமல் வாழ்வர்
சொல்லிடு மரச ருக்குட் சூழ்ந்திடும் பகையென் றோதே” (மழை, செ.எ.178, ப. 63.)

என்றும் குறிப்பிடுகின்றது. (பொய்கை - குளம். ஏரி, தடாகம், எனினும் ஒன்றே)


செந்நெல் விளைவு - சாம்பிராணிப்புகை ஈசானியத்திசை

சாம்பிராணிப்புகை வடமேற்குத் திசையிற் செல்லுமாகில் அவ்வருடத்தில் விட்டில், கிளி, கொசுக்களால் விளையும் பயிர்கள் சேதத்தையடையும். வடக்குத் திசையில் செல்லுமெனில் புவியில் நன்மை பொருந்தி வாழ்வார். ஈசானியத் திசையில் செல்லுமாகில் வண்டுகள் மொய்க்கும் மலர்கள் நிறைந்த கூந்தலையுடைய பெண்ணே! நல்ல மழை பெய்து செந்நெல் மிகச் செழிப்பாக விளையும்.

“உண்டாம் வாயு திக்கதனி லோங்கும் விட்டிற் கிளிகொசுவாற்
பண்டாம் பயிர்கள் சேதமுறும் பகரு மளகைப் பதிதிக்கிற்
கண்டாங் கெய்திற் சுபிட்சமுறுங் கருதி யீசா னியத் திசையில்
வண்டார் குழலே சென்றாக்கால் மழைபெய்தோங்குஞ் செந்நெல்லே” (மே, செ.எண்.81, ப.28.)

என்றும் மழைநூல் சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.

இவ்விதம் அக்காலத்தில் சோதிடர்கள் பலன்கள் பார்த்துக் குறிப்பிட்டதை இந்நுால் ஆதாரம் தெரிவிக்கின்றது. ஈசானியத்திசையே சிறப்பு.

சூரியனுக்கு முன்பாக பாவக்கிரகங்கள் செல்லல்

தினமணியாகிய சூரியனுக்கு முன்பாக பாவக்கிரகங்களாகிய செவ்வாய், சனி, இராகு, கேது, அமர பட்சச் சந்திரனும், இராகுவுடன் கூடிய குருவும், செல்வார்களாகில் உலகத்தில் மழையின்றி விளைவு குன்றி மானிடர்கள் பல விதத்திலும் வருத்தம் அடைவார்கள்.

சூரியனுக்கு முன்பாக சுபக்கிரகங்கள் செல்லல்

செந்நெல் உலகம் முழுவதும் செழித்து விளையும்

அவ்வாறின்றிச் சுபக்கிரகங்களாகிய பூரணச்சந்திரன், வியாழன், சுக்கிரன், சுபரோடு கூடிய புதன் இவர்கள் செல்வாராகில் தேயம் எங்கும் பூரணமான மழை பெய்து, சகல தானியங்களுஞ் செழிப்பாக விளைந்து, மனிதர்கள் சகல பாக்கியங்களையும் பெற்று வாழ்ந்திருப்பார்கள் என்றும் செந்நெல் உலகம் முழுவதும் செழித்து விளையும் என்பதனை,

“கண்டிடும் பாபக்கோட்கட் கதிர்க்குமுன் நிற்பா ராகி
லெண்டிசை விளைவ தின்றி யேக்கமுற் றிருப்பர் மாந்தர்
சண்டன்முன் சுபர்க ளேகிற் றான்மகிழ் வுறுவர் மாக்கள்
கொண்டற்பெய் தோங்கிச் செந்நெற் குவலயஞ் செழிக்குஞ்சொல்லே” (மழை, செ.எ.129, ப.44.)

பாடல் குறிப்பிடுகின்றது.


கரும்பு, நெல் சமமாக விளைவு உண்டாதல்

கார்த்திகை மாதப் பவரணையன்று அசுபதி, பரணி, கார்த்திகை ஆகிய இந்த நட்சத்திரங்கள் மூன்றும் சேர்ந்து வருமாகில், ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய இந்த நான்கு மாதங்களிலும் சமரசமாக மழை பெய்து பூமியில் புஞ்சை, நஞ்சைகளில் இட்டிருக்கும் தானியங்களும் கரும்பும் சமமாக விளைவு உண்டாகும்.

“என்னக் கீட மதிபவ்வத் திவுளிபா கெரியுஞ் சேரில்
மின்னிடைச் சிம்மந் தொட்டு விருட்சிக மதிவ ரைக்கும்
நன்னய நாட்டிற் புஞ்சை நஞ்சையி லிட்டி ருக்குங்
கன்னலுஞ் செந்நெற் பாதி கண்டிடும் விளைவென் றோதே” (ம, செ.எ.113, ப.39.)

என்றும் மழைநூல் தெரிவிக்கின்றது.

செந்நெல் குறைந்த விளைவு

வியாழன் நட்பு வீடுகளில் அத்தமனமாயின் பலன், பகை வீடுகளில் நீசத்தில் வக்கரித்து நின்ற பலன்

வியாழன் நட்பாகிய இடபம், மிதுனம், சிம்மம், கன்னி, துலாம், கும்பத்தில் இருந்து அத்தமனமாகில் தங்கம், முத்து, வஸ்திரம் முதலான பொருட்கள் குறைந்து போகும்.

வியாழன் பகையாகிய மேட, விருச்சிகத்திலும், நீசமாகிய மகரத்திலும் இருந்து வக்கரிக்கில் கரும்பு, செந்நெல் முதலிய தானியங்களும் விளைவு குறையும். அதனால் நாலாப்பக்கத்திலும் களவு போகும். இதனை,

“இன்னமும் வேந்த னட்பி லிசைந் துடன் மறைவானாகிற்
சொன்னமுந் தாள மாடை தோற்றமுங் குறைந்து காணும்
பொன்னவன் பகை நீசத்திற் புக்கிவக் கரமு மாகில்
கன்னலுஞ் செந்நெ லற்பங் களவுநாற் றிசையு மாமே” (மே, செ.எண்.146, ப.51.)

என்றும் குறிப்பிடுகின்றது.

சாலி நெல் விளைவு

செவ்வாய் நட்பு, வீடுகளில் நின்ற பலன் சுபம் (வக்ரம்)

செவ்வாய் நட்பாகிய இடபம், மிதுனம், கன்னி, துலாத்தில் இருக்கும் போது நன்றாக மழை பெய்து குன்றாமற் அனைத்து விதத் தானியங்களும் விளைந்து சுபமாக விளங்கும். செவ்வாய் மேற்படி ராசிகளில் வக்கரகதியானால் மனிதர்களுக்கு நன்மையும் பாற்பசு பாக்கிய வளர்ச்சியும் உண்டாகும்.

“என்றபின் செவ்வாய் நட்பி லியல்புட னிருப்பா னாகில்
நன்றுபின் சாலி யௌ்ளும் நாடெலாம் விளைந்து நல்கும்
நின்றுபின் வக்க ரித்தால் நீணில மனிதர்க் கெல்லாம்
கன்றுபின் கறவை சேருங் காசினி விளங்கும் மென்னே” (ம, செ.எண்.135, ப. 47.)

என்றும் குறிப்பிடுகின்றது. (சாலி என்பது நெல்லின் வகைகளில் ஒன்று)

சாலி மிக ஓங்கும் மீனச்சந்திரன்

மீனத்தில் சந்திரனிருக்க, இடபத்தில் சுக்கிரனிருக்க, மிதுனத்தில் புதனிருக்க மழை அதிகமாகப் பெய்து தீய்ந்து போகும் தருவாயிலிருந்த பயிர்களும் செழித்து விளையும், கருகுந் கதியிலிருந்த தருக்களாகிய மரங்கள் செழித்து வளர்ந்து அதன் பலனாகியக் கனிகளைத் தரும்.

“பெருகச் சேலிற்சசியிருக்கப் பிறங்கும் விடையிற் கவியிருக்க
வருகத் தண்டின் மதிமகனு மழையும் பெய்யு மதிக மதாய்
சருகொத் திருக்கும் பயிர்களெலாந் தழைக்குஞ் சாலிமிகவோங்கும்
கருகுந் தருக்கள் நீருண்டு காயுங் கனியுந் தந்திடுமே” (மழை, செ.எ.56, ப.20.)

என்றும் குறிப்பிடுகின்றது.

இவ்விதம் நெல்லின் விளைவு குறித்த கோள்நிலைகளை அறிந்து அதன் வழி பயன் பெறலாம்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/astrology/general/p95.html


  2020
  2019
  2018
  2017
சிறந்த நூலாசிரியர் பரிசு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...சிரிக்க சிரிக்க
எரிப்பதா? புதைப்பதா?
அறிவை வைக்க மறந்துட்டானே...!
செத்தும் செலவு வைப்பாள் காதலி!
வீரப்பலகாரம் தெரியுமா?
உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
இலையுதிர் காலம் வராது!
கண்ணதாசனின் நகைச்சுவைகள்
குறைச்சுத்தான் எடை போடறாரு...!
அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
இடத்தைக் காலி பண்ணுங்க...!
சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
மாபாவியோர் வாழும் மதுரை
இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
கவிஞரை விடக் கலைஞர்?
பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
கடைசியாகக் கிடைத்த தகவல்!
மூன்றாம் தர ஆட்சி
பெயர்தான் கெட்டுப் போகிறது!
தபால்காரர் வேலை!
எலிக்கு ஊசி போட்டாச்சா?
சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
சம அளவு என்றால்...?
குறள் யாருக்காக...?
எலி திருமணம் செய்து கொண்டால்?
யாருக்கு உங்க ஓட்டு?
வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
கடவுளுக்குப் புரியவில்லை...?
முதலாளி... மூளையிருக்கா...?
குட்டிக்கதைகள்
எல்லாம் நன்மைக்கே...!
மனிதர்களது தகுதி அறிய...
உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
அழுது புலம்பி என்ன பயன்?
புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
கடவுளைக் காண உதவும் கண்ணாடி
தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
சிங்கத்திற்கு வாழைப்பழம்!
வலை வீசிப் பிடித்த வேலை
சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
கல்லெறிந்தவனுக்கு பழமா?
சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
அக்காவை மணந்த ஏழை?
சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
இராமன் சாப்பாட்டு இராமனா?
சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
கழுதையின் புத்திசாலித்தனம்
விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
ஆணவத்தால் வந்த அழிவு!
சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
சொர்க்க வாசல் திறக்குமா...?
வழுக்கைத் தலைக்கு மருந்து
மனைவிக்குப் பயப்படாதவர்
சிங்கக்கறி வேண்டுமா...?
வேட்டைநாயின் வருத்தம்
ஆன்மிகம் - இந்து சமயம்
ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
தானம் செய்வதால் வரும் பலன்கள்
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
பிரதோஷம் எப்படி விஷேசமானது?
விநாயகர் சில சுவையான தகவல்கள்
சிவராத்திரி விஷேசமானது ஏன்?
முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
எப்படி வந்தது தீபாவளி?
தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
அனுமனுக்கு வடை மாலை ஏன்?
திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
முருகா என்றால் என்ன கிடைக்கும்?
குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
விபூதியின் தத்துவம்
கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
இறைவன் ஆடிய நடனங்கள்
யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License