மேடம், ரிடபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகியன பன்னிரண்டு ராசிகள் ஆகும்.
ராசி இருக்கு தாசில் பண்ண அம்சம் இருக்கு கழுதை மேய்க்க.
வைத்தியன் கையைப் பிடிப்பான் ஜோதிடன் காலைப் பிடிப்பான்.
மேடம்
மேட ராகு மேன்மையைக் கொடுக்கும்.
மேஷ ராகு மேன்மையைக் கொடுக்கும்.
மிதுனம்
மிதுனத்தானொடு மிஞ்சாதே!
மிதுனத்தானை மிஞ்சாதே!
கடகம், விருச்சிகம்
மக்கள் ஜெயா டி.வி அரட்டை அரங்கம் (விசுவின்) 22.7.2012 ஞாயிறு காலை 11.50. கடக ராசிக்காரரும் விருச்சிக இராசிக்காரரும் தோற்கக் கூடாது.
கன்னி
கன்னி தன்னில் இந்து பிறக்கக் கொல்லும்.
கன்னிச்செவ்வாய் கடலும் வற்றும்.
கன்னியில் செவ்வாய் கடலும் வற்றும்.
கன்னிச் செவ்வாயில் கடலும் வற்றும். (பிரம்ம புத்திரன் த.த.ப.மொ, ப.83.)
கன்னி தன்னில் கடலும் வற்றும்.
காக்கைக்கு மூக்கு நீளும்; கன்னிப் பெண்ணுக்கு வாய் நீளும். (பிரம்ம புத்திரன், த.த.ப.மொ, ப.84.)
கன்னிச் சுக்கிரன், கன்னிச் சூரியன் மழை பொழியாது.
பெ.ப.ப.மொ, மு. சரளா, அழகு எனும் தலைப்பில் ‘மயில் போலும் கன்னி என்கின்றது. கன்னி பெண்ணா? கன்னி இராசி, இலக்கினத்தில் பிறந்த பெண்ணா? (பெ.ப.ப.மொ, மு. சரளா, ப.53.)
இரட்டை இலக்கினத்தில் பெண் பிறந்தால் அழகாய் இருப்பாள் என்பதனால் இவ்விதம் கூறப்பெற்றுள்ளது. மேலும் புதனின் வீடு ஆகையால் புத்திக்கூர்மையும் ஒரு சேர மிகுந்து காணப்படும்.
துலாம்
துலாத்தில் வௌ்ளி உலாத்தில் பெய்யும் மழை. (துர், த.நா.ப, ப.178.)
துலாத்தில் வௌ்ளி உலாத்தில் பெய்யும். (எஸ். லீலா, பு.பெ.உ.ப, எண்.40, ப.7.) தமிழ்நாடு எண்.598, ப.131.)
துலாம் (ஐப்பசி மாதம்) இருக்கிறது; பிடிடா ஏற்றத்தை (மழை இல்லை, அதனால் ஏற்றம்) இடியும், மின்னலும் (பு.நோ.ப, ப.74.)
துலா கேது தொல்லைத் தீர்க்கும்.
மகரம்
மகரம் அகரம் ஆளும்.
மகரத்திற்கு அகரம் கிடையாது.
கும்பம்
கும்பத்துச் சுக்கிரன் குடம் குடமாய்ச் சாய்க்கும்.
கும்பத்து வௌ்ளி குடம் கொண்டு சாய்க்கும்.
மீன மேடம் பார்
எந்த ஒன்றைச் செய்வதற்கும் நாள், நேரம் பார்த்தல் அதற்காக காலம் செலவிடாமல் காரியத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்னும் குறிப்பில் கூறப்படுவது. மாப்பிள்ளை வீட்டார் பெண்ணைப் பிடித்திருக்கிறது என்றும் ஜாதகம் வேண்டாம் என்றும் கூறும் போது நாம் ஏன் மீன மேடம் பார்க்க வேண்டும்! சின்ன சின்னக் காரியங்களுக்கும் மீன மேடம் பார்த்துக் கொண்டிருந்தால் ஒரு நாளில் முடியாது வேண்டியது ஒரு வாரமானாலும் முடியாது! (த.த.அ, ப.288.)