விளம்பி வருடம் - ஆடி மாதப் பலன்கள்
முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை
கிரக பாதசாரங்கள்
சூரியன் - 1 -3 புனர் 4, 4 - 17 பூசம், 18 ஆயில்யம். கடகம்.
சந்திரன் - பூரம் - சித்திரை வரை.
செவ்- 10 வரை திருஓணம் - மகரம். 11 - உத்திராடம்; வக்ரம்.
புதன் - 10 ல் வக்ரம் ஆயில்யம் 4 ல் கடகம். 10 ல் வக்ரம்.
குரு - 16 வரை சுவாதி 4, 17 விசாகம்; 1 துலாம்.
சுக்கிரன் - 12 வரை பூரம் - சிம்மம், 13 - 25 உத்ரம், சிம்மம், 16 ல் கன்னி, 26 - அஸ்தம் கன்னி.
சனி - மூலம் 2 தனுசு. வக்ரம்.
ராகு - பூசம் 3 கடகம்.
கேது - திருவோணம் 1 மகரம்.
மேஷம் லக்னம்
(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
இளைய சகோதிர வகை சிரமம், கடன், நோய், வம்பு, வழக்கு, எதிரிகளின் தொல்லை, அவமானங்கள் மிகவும் மோசமான நிலையில் வலுத்துக் காணப்பெறும். முன்னேற்றத்தில், பணியில், பதவியில் அளவு கடந்த சிக்கல் காணப்பெறும். வெளியில் செல்லும் போது கவனம் தேவை. வயிறு, வெப்பம் தொடர்ந்த தொல்லைகள் உயர், குறைந்த இரத்த அழுத்த மாறுபாடு, இருதயக் கோளாறுகள் ஆகியன ஏற்படும். இரு மாதங்கட்குப் பிறகு முன்னேற்றம் ஏற்படும்.
ரிஷபம் லக்னம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
குடும்பத்தில் சங்கடங்கள் ஏற்படும். முன நிம்மதியற்ற நிலை ஏற்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை முதலியன ஏற்படும். கல்வி வளர்ச்சி, மனைவி, கணவர் தொடர்நத செலவினங்கள் ஏற்படும். விருப்பட்டதை சிலர் வாங்குவர். வயிறு, நரம்பு தொடர்ந்த தொல்லைகள் ஏற்படும். சுமாரான பலன்கள் ஏற்படும்.
மிதுனம் லக்னம்
(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
கடன், வம்பு வழக்குகள், அவமானங்கள் வலுத்துக் காணப்பெறும். பெயர், புகழ், முன்னேற்றங்கள் ஆகியன ஏற்படும். குடும்பத்தில் பிணக்குகள் நிலவுவதால் அமைதியின்மை காணப்பெறும். சிலருக்கு பற்கள் தொடர்ந்த தொல்லை, இளைய சகோதிர வகை தொல்லை, நரம்பு பாதிப்பு ஆகியன ஏற்படும். தந்தை வகை ஆதாயத்தில் பிரச்சினை ஆகியன ஏற்படும்.
கடகம் லக்னம்
(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
வீட்டில் சுப நிகழ்வுகள் கடின முயற்சியின் பேரில் அதிகச் செலவினங்களுடன் மிகச் சிறப்பாய் அமையும். குழந்தைகள் வகையில், இளைய சகோதிரம், குடும்பம் தொடர்ந்த நிலையில் சங்கடங்கள் நிலவும். கூடுதல் பொறுப்புகள் பணியில் கடினம் நிலவும். உடல் நரம்புகள் தொடர்ந்த தொல்லை, கால், பாதம், வயிறு தொடர்ந்த வலிகள், வழக்கில் வில்லங்கம் ஆகியன ஏற்படும்.
சிம்மம் லக்னம்
(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பதவி, பணி, குடும்பம், உடல் கடுமையான பாதிப்பு, இலாபம் கருதிய வீண் செலவினங்கள், குழந்தைகள் வகையில் இடையூறு, இலாபத்தடைகள் ஆகியன ஏற்படும். பணியில் அவமானங்கள், சங்கடங்கள் பலமாய் ஏற்படும். தலைச்சுற்றல், மயக்கம், விலங்குகளினால் ஆபத்து, சிலருக்கு அறுவை சிகிச்சைகள், அதிகாரிகள் தொல்லை, பெற்றோர் வகையில் கடுமையான எதிர்பாராத செலவு, மனசங்கடங்கள், வாக்குவாதங்கள், வில்லங்கப்பிரச்சினைகள், துணைவி அல்லது கணவருடன் சண்டை ஆகியன ஏற்படும்.
கன்னி லக்னம்
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பணியில் அதிகச் சிரமம், வாக்கு வாதப்பிரச்சினைகள், வீண் கலகங்கள், குழந்தைகள், இளைய சகோதிரம், எதிர்பாராத வகையில் செலவினங்கள் ஏற்படும். முறையற்ற வகையில் இலாபம் ஏற்படுவதால் அதிகக் கவனம் தேவை. இல்லை எனில் சிறைச்சாலை, சிலருக்கு அவமானம் ஏற்பட்டு வழக்கு தொடர்ந்த நிலையில் வீண் தண்டணை, ஒறுத்தல் கட்டணம் முதலியன அமைந்து விடும். உடல், மன நிலையில் கவனம் தேவை. வெளியூர் பயணங்கள் அமையும். தாயார் வகையில் செலவினங்கள், நன்மை ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி, அமைதி நிலவும். இம்மாதம் 20 தேதிக்கு மேல் நன்மை விளையும்.
துலாம் லக்னம்
(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பெற்றோர், குழந்தைகள் வகையில், உடல் நிலையில், மூத்த, இளைய சகோதிரத்தினால் சிரமங்கள், குடும்பத்தில் குழப்பங்கள், அமைதியற்ற நிலை, வெளியில் சொல்ல முடியாத வேதனைகள், பணியில் புதிய பொறுப்புகள், அதனால் தொல்லைகள், வீண் கலகங்கள, வாகனத்தடைகள், குழந்தைகள் வகையில் சிரமங்கள் ஆகியன ஏற்படும். சுமாரான பலன்கள் விளையும். 10 தேதிக்கு மேல் நன்மை விளையும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
விருச்சிகம் லக்னம்
(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
இளைய சகோதிரம், காது மந்தம், கோளாறுகள், உணவு உட்கொள்ள முடியாமை, உடல் திடீரெனப் பாதித்தல், குடும்பத்தில் தொல்லைகள், அவமானங்கள், தந்தை வகையில் பிணக்குகள், பூர்வீகச் சொத்து வில்லங்கம், வீண் செலவினங்கள், சிலருக்கு விந்து பாதிப்பு, கர்ப்பப்பைக் கோளாறு காரணமாக அறுவை சிகிச்சையில் நீக்குதல், துணைவியார் அல்லது கணவர் வகை முன்னேற்றம், இலாபம், வழிபாட்டினால் நன்மை கிடைக்கும்.
தனுசு லக்னம்
(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
இளைய சகோதிர வகை பலத்த அவமானங்கள், சங்கடங்கள், குழந்தைகள் வகையில் வீண் செலவினங்கள், உடல் பாதிப்பு, பணியில் சில கூடுதல் பொறுப்புகள், சில ஆயுள் கண்டங்கள், நரம்பு, இரத்த அழுத்தம் தொடர்ந்த நிலையில் உடலில் பாதிப்பு ஏற்படுதல், வீண் செலவினங்கள் ஆகியன ஏற்படும். சிலருக்கு அதிகச் செலவுடன் திருமணம் கூடி வரும்.
மகரம் லக்னம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
முறையான வர வேண்டிய வருமானங்கள், நிலுவைத் தொகைகள், குடும்பத்திற்குத் தேவையானவைகள், ஆபரணச்சேர்க்கைகள், மகிழ்ச்சி முதலியன நிலவும். பயணச் சிரமங்கள், வழக்கின் வழி இலாபங்கள், நன்மைகள், வயிறு, பாதம், கால், நரம்புகள் தொடர்ந்த தொல்லைகள் குழந்தைகள் வகையில் சிறப்பு, சங்கடங்கள், சில அவமானங்கள், அல்லது மர்ம உறுப்புகள் தொல்லை, 16 தேதிக்கு மேல் ஆடை ஆபரணச்சேர்க்கை, கல்வி, பணி, குழந்தைகள் முதலிய நிலைகளில் மகிழ்ச்சி, குடும்பத்தில் அமைதி ஆகியன ஏற்படும்.
கும்பம் லக்னம்
(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
உடல் வகையில் அதிகச் செலவினங்கள், இலாபத் தடைகள், நரம்புகள், இரத்த அழுத்த மாறுபாடு, மர்ம உறுப்புகள் பாதித்தல் ஆகியன ஏற்படும். குழந்தைகள் வகையில் சிரமங்கள் ஏற்படும். வெளியூர் ஆன்மீக பயணங்கள், இளைய சகோதிர வகை, தொழில் வகை சிரமங்கள், மனைவி, வளர்ச்சி வகை வழியில் செலவினங்கள், நோய், கடன், வம்பு வகைத் தொல்லைகள் வலுத்துக் காணப்பெறும். சுமாரான பலன்கள் விளையும்.
மீனம் லக்னம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
குடும்பத்தில் மகிழ்வான நிலை, சுப செலவினம், தந்தை, குடும்பம், மூத்த சகோதிர வகையில் ஆதாயங்கள், பிணக்குகள், நன்மை முதலான இரண்டும் கலந்த பலன் ஏற்படும். குழந்தைகள் வகையில் சிரமங்கள், மர்ம உறுப்புகள் பாதித்தல், தன் சொல்லாலே தானே துன்பம் அடைதல், 16 ஆம் தேதிக்கு மேல் நற்பெயர், மகிழ்வான நிலை இளைய சகோதிர வகையில் ஏற்படும்.
* * * * *

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.