........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
தொடர் கட்டுரை-1. பகுதி-27 நல்ல பெயர் வாங்கலாம். -தேனி.எம்.சுப்பிரமணி.
27. நடைமுறைக்கு ஒத்து வராத செயல்கள் செய்யலாமா?
கவிஞர்கள், கதை எழுதுபவர்கள் போன்றோர் தங்கள் கற்பனைக்குத் தோன்றும் நடைமுறைக்குச் சாத்தியமில்லாத பல விஷயங்களை அழகிய நயத்துடன் எழுதுவதில் வல்லமை பெற்றிருப்பார்கள். இது நடைமுறைக்கு சாத்தியமில்லை என்றாலும் அவை படிப்பதற்கு சுவையாக இருக்கும். ஆனால் வாழ்க்கையில் கூட சிலர் நடைமுறைக்கு சாத்தியமில்லாத விஷயங்களைச் சாதித்து விட முடியும் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள். ஒன்றைக் கூட நடைமுறைப்படுத்த முடியாத இவர்கள் பல விஷயங்களை தங்களால் மட்டுமே இதைச் செய்யமுடியும் என்று பீற்றிக் கொள்ளவும் செய்வார்கள். இவர்களின் செயல்பாட்டின் முடிவு பூஜ்யம் என்றாலும் அந்த விஷயத்தில் தாங்கள் சாதித்து விட்டது போல் சொல்லிக் கொள்வார்கள். இவர்கள் தங்கள் செயல்பாடுகளை முடியும் என்கிற ஒரே எண்ணத்தில் செயல்படுத்தப் பார்க்கிறார்களே தவிர அந்த செயல்பாட்டிற்கான நடைமுறை குறித்து முன்பே திட்டமிடுவது கிடையாது. எந்தவித திட்டமுமில்லாமல் செயலாற்றிவிட முடியும் என்பதுடன் செயல்படுத்த வேண்டும் என்கிற திடமான முடிவுடன் மட்டும் இருக்கிறார்கள். நடைமுறைக்குச் சாத்தியமில்லை என்று தெரிந்தாலும் எதையாவது சொல்லிக் கொண்டு செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களைப் போல் இருப்பவர்களிடம் ஏமாற்றுப் பேர்வழிகள் பலரும் ஒட்டிக் கொள்கிறார்கள். உண்மையான பலரும் ஒதுங்கிப் போய் விடுகிறார்கள்.
சாமியார் ஒருவரிடம் மூன்று சீடர்கள்
இருந்தார்கள். மூன்று பேரிலும் தனக்கு நம்பிக்கையான சீடர் யார்? என்பதைக்
கண்டறிய விரும்பினார். நடைமுறைக்கு சாத்தியமில்லாத விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டு திரிவதால் இவர்களுக்கு நல்ல பெயர் கிடைக்காமல் போவது மட்டுமில்லை. முட்டாள், கிறுக்கன் என்பது போன்ற ஏளனமான பெயர்களும் வந்து அவதிப்படவும் நேரிடும். எதையும் திட்டமிட்டுச் செய்ய வேண்டும். அப்போதுதான் நாம் எந்த ஒரு காரியத்தையும் செயல்படுத்த முடிவதுடன் வெற்றியையும் அடைய முடியும். (வழிமுறைகள் வளரும்.)
![]() |
முகப்பு |