........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
தொடர் கட்டுரை-1. பகுதி-42 நல்ல பெயர் வாங்கலாம். -தேனி.எம்.சுப்பிரமணி.
42. உண்மையை உணர்த்த வேண்டும்!
இன்று பலரும் சின்னச்சின்ன செயல்களைப் பெரியதாகப் பார்க்கிறார்கள். பெரிய செயல்களை சாதாரணமாகப் பார்க்கிறார்கள். இதனால் பெரிய செயல்களைச் செய்தவர்கள் பெரிதாகப் பாராட்டப்படுவதுமில்லை. அவர்களால் நல்ல பெயர் வாங்க முடிவதுமில்லை. சிறிய செயலைச் செய்தவர்கள் பெரிதாகப் பாராட்டப்படுகிறார்கள். போற்றப்படுகிறார்கள். இதற்குக் காரண்மென்ன? உண்மை தெரியாமல் போய்விடுவதுதான். பலரின் பார்வை ஏதாவது ஒரு கண்ணோட்டத்தில் மட்டும் பார்க்கப்படுவதால் உண்மை பெரியதாக இருந்தாலும் அது தெரிவதில்லை. சிறியதான அவர்களின் கண்ணோட்டமே பெரியதாக இருக்கிறது. இதனால் உண்மையைப் பார்க்காமல் உள்ளதை மட்டும் பார்க்கும் அவல நிலையால் உண்மை பாதிக்கப்படுகிறது. உண்மை செயலிழந்து மற்றவை முன்னால் செல்கின்றன.
ஆசிரியர் ஒரு வெள்ளைத் தாளை எடுத்து அதில்
பேனாவால் கரும்புள்ளி ஒன்று வைத்தார். இப்படித்தான் பலரும் உண்மை கண்ணிற்கு முழுமையாகத் தெரிந்தாலும் அதை மறந்து குறுகிய எண்ணத்துக்குள் முடங்கிப் போகிறார்கள். இந்த முடக்கத்தால் உண்மையாய் செயல்பட்டவர்கள் மதிப்பிழக்கிறார்கள். நல்ல பெயரைப் பெற முடியாமல் தவிக்கிறார்கள். இதுபோன்ற சூழ்நிலைகளில் உண்மையை உணர வைக்க வேண்டும். குறிப்பிட்ட செயலைக் காட்டிலும் நம்முடைய செயல் எவ்வளவு பெரியது என்பதை எடுத்துக்காட்ட வேண்டும். அப்போதுதான் அவர்களிடம் நாம் நல்ல பெயர் வாங்க முடியும். (வழிமுறைகள் வளரும்.)
|
முகப்பு |