........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

 கவிதை:10

ஒளிந்திருக்கும் உண்மைகள் 

-எஸ்.எஸ்.பொன்முடி.

 

யதார்த்தம்

சன் டிவிக்கும்
ஜெயா டிவிக்கும்
நடுவில்
பொதிகையில்

அழகு

கண்ணாடிக்கும்
மனசுக்கும்
இடையில்

புரிதல்

சொல்லிக் கொடுத்த
ஆசிரியருக்கும்
விடைத்தாளுக்கும்
இடையில்

ரோஷம்

உணவுக்கும்
உணர்வுக்கும்
இடையே.

கனவு

உழைப்பிற்கும்
நிராசைகளுக்கும்
நடுவே.

இருட்டு

கண் இமைகளுக்கும்
வெளிச்சத்திற்கும்
மத்தியில்.

கடற்கரை

மணல் வெளியின்
மௌனத்திற்கும்
கடல் அலைகளின்
ஆர்ப்பாட்டத்திற்கும்
இடையே.

வாழ்க்கை

மனதில் பதிந்துவிட்ட
பிரிவிற்கும்
முதுமைக்கும்
இடையே.

இசை

டிஜிட்டல் டெக்னாலஜிக்கும்
இசைப்பவனுக்கும்
இடையே

பணத்தின் மதிப்பு

வங்கி காசாளருக்கும்
வாங்கியவருக்கும்
அப்பால்
ரிசர்வ் பேங்க் கவர்னரிடம்.

நண்பன்

சந்திப்பிற்கும்
ஞாபகங்களுக்கும்
நடுவே
மெல்லிய இடைவெளிகளில்

உறவுகள்

வீட்டு விஷேசங்களுக்கும்
பெண்களின் கழுத்துக்கும்
நடுவே.

 

அதிகாலை

வேலையற்ற இளைஞனின்
விழிப்பிற்கும்
விவசாயியின் விழிப்பிற்கும்
இடையே.

தூரம்

ஜன்னலோர சீட்டுக்கும்
முழங்கால் வலிக்கும்
இடையே.

ரசனை

அறிவுத்தேடலுக்கும்
பொருளாதார தேடலுக்கும்
நடுவே

தீர்ப்பு

நீதிபதிக்கும்
குற்றவாளிக்கும்
நடுவே
குற்றம் சாட்டியவனின்
மனதில்

டீயின் சுவை

தேயிலை தோட்டத்தின்
குளிருக்கும்
டீக்கடை ஸ்டவ்வின்
சூட்டுக்கும் நடுவே.

சினிமா கலெக்சன்

கீற்றுக் கொட்டகை
செகண்ட்ஷோ இடைவேளை
முறுக்கு விற்பனைக்கும்
கதாநாயகன் வீட்டு
இன்கம்டாக்ஸ் ரெய்டுக்கும்
நடுவே.

புதுக்கவிதைகள்

விடலைக் காதலுக்கும்
உழைப்பாளியின்
வியர்வைகளுக்கும்
இடையே

பொதுமக்கள்

அரசியல் கட்சி
தொண்டர்களுக்கும்
வாக்களிக்க
இதுவரை
செல்லாதவர்களுக்கும்
இடையே.

பொதுநலம்

தன் சுயநலத்திற்கும்
பக்கத்து வீட்டுக்காரனின்
சுயநலத்திற்கும்
நடுவே

இளமை

மேக்கப் சாமான்களுக்கும்
முதுமைக்கும்
நடுவே

m

 

எஸ்.எஸ்.பொன்முடி அவர்களின் இதர படைப்புகள

முந்தைய கவிதைகள் காண
 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.