........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

 கவிதை:11

புதுக்கவிதைகள்

ஊரும் உறவும்

விதைக்கும் போது-உதவிட
யாரும் வரவில்லை- விதை
முளைக்கும் போது-உதவிட
யாரும் வரவில்லை- களை
எடுக்கும்போது-உதவிட
யாரும் வரவில்லை- அட
சமைக்கும் போது கூட
யாரும் வரவில்லை- சமைத்துச்
சாப்பிடும்வேளையில்-அடடே
ஊரும் வந்தது! உறவும் வந்தது...!

-தூத்துக்குடி பாலு.

நான் படிச்சு...

பள்ளிகூடம்
திறந்து கெடக்கு
அப்பா மனசு
நெறஞ்சு கெடக்கு
படிக்க வைக்க
பணம் வாங்கினாரு
பத்து வட்டிக்கு...
வட்டி கட்ட
பணம் வாங்கினாரு
பதினைந்து வட்டிக்கு...
அப்பா நெனப்பெல்லாம்
நான் படிச்சு ஒரு வட்டி
சோறு போடுவேன்னு...

-சுபாஷ் சரோன் ஜீவித்.

கழுதைக்குக் கூட திருமணம்

மழை வேண்டி
கழுதைக்குக் கூடத் திருமணம்
எதை வேண்டினால் - என்
பெண்ணுக்குத் திருமணம்

(வரதட்சனை தர முடியாமல் தவிக்கும் தந்தை)

-சுபாஷ் சரோன் ஜீவித்.

தெருவிலே கிடக்கும் குடிகாரன்

கல்லறையில் சிலர்
பிணங்களை புதைக்கிறார்கள்
சிலரோ அவர்களே,
பிணங்களாக குடும்பத்தில்
உள்ளவர்களின் வாழ்க்கையை
புதைக்கிறார்கள்...

-சுபாஷ் சரோன் ஜீவித்.

 
m
 

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.