........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

 கவிதை:12

துரத்தும் நாயின் ஒலி.

இருளைக்கிழித்துக் கொண்டு
நாயின் ஒலி
நாய்களின் இரைச்சல்
நேரமாக நேரமாக அதிகரித்தது
குலை நடுங்கும் வண்ணம்
குலைக்கும் ஓசை

தலைதெறிக்க
தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தேன்
பின் தொடர்ந்தன
பாதுகாப்பான தூரம் வரை
கனவிலும் துரத்தின

வாய் திறந்து
விழி வெறித்து
கோரைப்பற்கள் தெரிய
இருந்த இடத்தில்
இருந்த வண்ணம்
மிரட்டல் தொடர்ந்தது.

முற்றிலும் மறந்த
ஒரு விடியலில்
ஏதோ நினைவை ருசித்திருக்கையில்
வலது பக்கமாய் சிறு அதிர்வு

நாயின் குரைப்புதான்
நாய்களின் குரைப்பாக உயர்ந்தது

சற்றே திரும்பி
உற்றுப் பார்த்து
அதிராமல் தொடர்ந்த நடையில்
சகலமும் நிறுத்தி
சாந்தமாய் பார்த்தன

திரும்பாது தொடர்ந்து
திண்மையான அடியெடுத்து
நடக்க ஆரம்பித்தேன்.

-மதுமிதா, இராஜபாளையம்.      

 

 

m
 

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.