........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:139

இது பரம ரகசியம்!

மெல்லிய இதயம்தன்னை உள்ளே வைத்து
சற்றே சுவரெழுப்பி அரணாய்த் தந்து
பற்றுதலால் பாசநதி பிறக்க-அது
சுற்றிவரும் உடலை இறைவன் தந்தான்!!

முதல் நீயெனினும் மூலம் நீயில்லை!
நதி நீயெனினும் மழை நீயில்லை!
செடி நீயெனினும் விதை நீயில்லை!
உடல் உனதெனினும் உயிர் உனதில்லை!

உடலுக்குள் உயிர் கலக்க உதிரம் வேண்டுமென்றே
உறவுக்குள் ஒளிந்திருக்கும் மர்மம் செய்தான்
உலகத்தில் உலவுகின்ற மானிடரோ- இவ்
உலகமே தம் படைப்பு என்கிறாரே!

கருவுக்குள் சிசுதோன்றும் அதிசயத்தை
கலியுகம் வந்த பின்னும் அறிவாரில்லை!
கருவறை தொடங்கிடும் வாழ்வுதன்னை
கல்லறை வரையெழுதும் மானிடனே!

புரிவதற்கு எட்டாத புதிரைத் தேடி
புறப்படும் உன் பயணம் முடிந்துவிடும்!
அறிவுக்கு எட்டாத ஆண்டவனே
அகிலத்தை படைத்தமை விளங்கிவிடும்!!

வருகையை வரவேற்று கூட்டம் சேரும்
வயதினை எண்ணியே நாட்கள் போகும்
முதுமையை தவிர்க்கவே மனமும் நாடும்
முடிவிலே இயற்கையே வெற்றிபெறும்!!     

- காவிரி மைந்தன், துபாய்.

 
m
 

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.