........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:140

நான் நானாக இல்லை...!

நான் நானாக இருந்தபோது
நலமாகவும் இருந்தேன்

என்வீட்டு மாங்காயை
எவனையோ பறிக்கவிட்டு
அடுத்தவீட்டு மாங்காயை - நான்
பறித்து அடிவாங்கி...

அப்போதும்...

இன்னும்பிற வெளியில்
வெட்கக் கேடுகள்
சொல்ல முடியாது
நடந்த போதும்...

நான் நானாக இருந்தேன்
நலமாகவும் இருந்தேன்

பிறகெப்போது

என்வீட்டுக் கண்ணாடி- எப்போது
என்னை அழகாகக்
காட்டியதோ அப்போது

நான் நானாகவும் இல்லை...!
நலமாகவும் இல்லை...!!      

- கண்டனூர் சசிக்குமார், சிங்கப்பூர்.

 
m
 

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.