........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:166

எல்லைக் கதவு எதற்காக?

நினைத்த போதெல்லாம் கப்பல் ஏறி
வினையை விதைக்க வருவது,
இறையாண்மைக்கு விடப்பட்ட சவால்.
இந்தியாவின் ஒற்றுமையை
இரண்டாகத் துண்டாடும் வாள்.

தீவிரவாதத்தை வளர்ப்பதற்கா
திறந்து விடப்பட்டது எல்லைக் கதவு?
இந்நிலையால்,
மறந்து போய்விடும் 
மறுமலர்ச்சிக்கான கனவு.

பாலுக்கும் காவலாகிப்
பூனைக்கும் தோழனான துரோகத்தைத்
தெரிந்து கொள்ள முடியவில்லையா?
தெரிந்தும் தெரியாதது போல் இருக்கிறோமா?
தெரிந்து கொள்ள விரும்பவில்லையா?

கருணை மனு சமர்ப்பிப்பதும்,
கதிகலங்க வைத்தவர்களைக்
கைவிலங்கிலிருந்து தப்ப வைப்பதும்,
துரோகிகளைப் பிடித்ததும்
தூக்கில் போடாமல் 
நீதிமன்றத்தில் நிறுத்தி,
நிலுவையில் வழக்கை வைக்கும்,
பதினாறு நாள் காவல் என்கிற
புரையோடிப் போன
திருத்தப்படாத தீர்ப்பும்,
தீவிரவாதத்தைத் துணிந்து நடத்துவதற்குத்
தொகுத்துக் கொடுக்கப்பட்ட வார்ப்புகள்.

மதத்தை மாசுபடுத்துபவர்களின்
வெறிச்செயல்களுக்கு
வழிவகுக்கும் வாய்ப்புகள்.
மதிகெட்டுப் போன எண்ணங்களின்
மடத்தனமான வழிகள். 

-சிதம்பரம் அருணாசலம்.

 
m
 

சித.அருணாசலம் அவர்களது மற்ற படைப்புகள

   முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.