........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:173

நெருப்போ நீ குளிரோ...


ஏந்திழை அவள்
என்னருகில் இல்லையெனில்
என்தேகம் சுடுகிறதே...

நேரிழையவள்
என்னை நெருங்கி வந்தால்
என் தேகம் குளிர்கிறதே...

விலகினால் குளிர்வதும்
நெருங்கினால் சுடுவதும்
நெருப்பின் இயல்பாகும்...
ஆனால்

நெருங்கினால் குளிர் செய்யும்
நெருப்பினை
என்னவள் கொண்டிருக்கிறாள்

விந்தை செய்யும் நெருப்பினை
எங்கு பெற்றாளோ இவள்...?

-ஆர். கனகராஜ்.

 
m

 

ஆர்.கனகராஜ் அவர்களது மற்ற படைப்புகள்

  முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.