........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:174

இணையத்தால் வந்த அறிமுகம்!


இணையத்தில் அறிமுகம் 
அறியாத புது முகம்!!!
நேரிலே கண்டதில்லை 
நினைவிலும் வந்ததில்லை 
அறிமுகம் புதிய அறிமுகம்!!! 

இணையத்தில் வார்த்தையாடி 
இதயத்தில் உறவாடிக் 
கொண்டுமிருக்கிறோம் 
இணையத்தில் அறிமுகம் 
ஆனாலும் புது முகம்! தமிழுக்கு அல்ல!! 

யாம் உமக்கும் நீர் எமக்கும் தான்
புது முகம் 
தமிழ்தானே விலாசம்!
அறிமுகப் படுத்தியது தமிழ் 
அதுதான் சுகம்!!
உமக்கும் எமக்கும் 
தமிழ்தானே அகம்!!!

அதனால் நேரிலே பார்க்க வேண்டாம்
உம் தமிழ் காட்டும் நீர் யாரென்று
செந்தமிழ் நீட்டும் உம் புகைப் படம்!!!
முத்துக்கமலம் தானே 
தமிழின் பிறப்பிடம்!!!
தமிழ்தானே நம் புகலிடம்!!!

தமிழில் பேசுவோம் 
தமிழில் பார்ப்போம்
தமிழில் உறவாடுவோம்!!!
உறவு என்றாலே 
கலவியல்ல..... அது கவி
தமிழ்க் கவி!!!

உள்ளங்கள் உரசட்டும் 
உணர்வுகள் பெருகட்டும்
கவிஞர்களும் தாய் தானே
கவிதையும் தாய்மை தானே
பெற்றெடுப்போம் கவிதைகளை 
பிறப்பெடுப்போம் பிள்ளைகளாய்...
தமிழ்க் கிள்ளைகளாய்...!!! 

- தமிழ்த்தேனீ, சென்னை.

 
m

 

  முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.