........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:175

அரவணைக்க யார் வருவார்?


மழலைத் தமிழ் கேட்குமங்கே
மடிவதைப்பார் இலங்கையிலே
நிலைஇழந்த மக்கள்கூட்டம்
வனவாசம் வாழ்வதென்ன!

பறிபோன உன்னுரிமை
வெகுதூரம் போனதென்ன!
பசிகொண்ட உன்னுடலும்
பதுங்குகுழி சென்றதென்ன!

காக்கைகண்ட இலக்கணமும்
கற்றநாம் அறிவதில்லை
கண்மூடி வழிதேடும்
மடமையேன் மாறவில்லை

ஈழமென்ன இறைவனென்ன
எல்லோரும் ஒன்றுதான்!
ஈரமுள்ள நெஞ்சங்களால்
இறையாண்மை குடிகொள்ளும்

இதுவென்ன மானுடமோ
ஈரமில்லா விளைநிலமோ
அடிமை கொண்ட பூமியிதனை
அரவணைக்க யார் வருவார்? 

 -கலை, கலிபோர்னியா.

 
m

 

கலை அவர்களது மற்ற படைப்புகள்

  முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.