........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:179

வேண்டிடு புது வருடத்தில்...!!

புத்தம் புதிதாய் ஒரு வருடம்
புலருது தோழா விழித்திடு !
புதிதாய் பல சாதனைகள்
படைத்திட வேண்டும் தோழா
புறப்படு விரைவாய்

கடந்த வருடத்தின் நிகழ்வுகள்
கலக்கத்தை தந்திருந்தாலும்
கைகளின் வலுவினைக் கொண்டு
காரியம் ஆற்றிடு நீயே
கனிந்திடும் புது வருடம்

மனிதர்கள் ஆசையின் விளிம்பில்
மோதிய சுவர்களின் வலிகள்
மீட்டிடும் அனுபவ ராகம்
மனதில் கோர்த்தே நீ
மாற்றிடு விதிகளை முனைப்புடன்

நேற்றைய கொள்கையின் வழியே
நாளையை தொலைத்திட விழையும்
நோக்கற்ற மனிதர்கள் தோற்றிட
நேரிய வழியில் இளைஞன் நீயே
நூற்றிடு வெற்றிக்கொடியே!

மனிதத்தின் வியாபாரத்தில்
மானிட வாழ்வினைக் குலைத்தே
மாபெரும் லாபங்கள் ஈட்டிடும்
மூர்க்கர்கள் செயல்கள் முடங்கிட
மீட்டிடு ஓர் ஜெயபேரிகை!

உருளும் உலகின் திசையில்
உருண்டு கொண்டே நீயும்
உருட்டிடு நீதியின் பகடைகளை
உருவாகட்டும் அமைதியின்
ஆலயமாய் ஒரு உலகம்

துவண்டது போதும் தோழா
துடித்தது நீயும் நானும்
தோள்களைச் சேர்த்தே இனி
தொடங்கிவோம் அமைதிப்பேரணி
அடங்கட்டும் அழிவு உலகில்

ஆம் என் புதுவருட வாழ்த்துக்கள்
அமைதிக்கான ஆரம்பமாய்
ஆலாபிக்கட்டும் உந்தன் நெஞ்சத்தை
வேண்டாம் போர் ! 
வேண்டாம் உயிரிழப்புக்கள்!!
வேண்டிடு உலகிடம் இப்புதுவருடத்தில்!!!

-சக்தி சக்திதாசன்.

 
m

 

சக்தி சக்திதாசன் அவர்களது இதர படைப்புகள

  முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.