........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:180

தைமகள் வந்தாள்!!!

மங்கலமாய் பொங்குகின்ற
பொங்கலிது! - மானிடரை
மகிழ்ச்சியாக வாழவைக்கும்
திங்களிது!!

மாவிலையும் மஞ்சள்கொத்தும்
அலங்கரிக்க! - மங்கையர்
வாசலிலே வண்ண வண்ணக்
கோலமிட!!

காளைமாடு குளத்தினிலே
குளிப்பாட்ட! - அதன்
கன்னம் மூக்குத் தோள்களிலே
வண்ணம் தீட்ட!!

காவி அரைத்துக்
கரிபூச - சுண்ணாம்பு
கலந்து தேய்த்த
சுவர் நிற்க!!

பச்சரிசிப் பானையிலே
வெல்லத்தோடு! - முந்திரி
பக்குவமாய்ச் சேர்த்து வைத்த
பொங்கலிது!!

பொங்கலோ பொங்கலென்று
கோசமிட! - கூட்டம்
இங்குமங்கும் மாவிலையில்
திருஷ்டி கழிக்க!!

ஜல்லிக்கட்டுக் காளைகள்
துள்ளிடவே! - வீரன்
அடக்கப் போறான்
துணிவினிலே!!

சடுகுடு ஆடுகின்ற
காளையர்கள்! - நெஞ்சு
படபடக்க ஓடுவாளே
நங்கையர்கள்!!

கருப்பன்சாமி அழைப்பிற்கு
சாம்பிராணி! - சாத்தான்
வெறுத்துச் சுடுகாடு போக
வேட்டு இனி!!

அத்தனையும் அரங்கேறுமென்
கிராமத்திலே! - இதை
இத்தனை நாள் காணவில்லை
நகரத்திலே!!
-கலை, கலிபோர்னியா.

 
m

 

கலை அவர்களது மற்ற படைப்புகள்

  முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.