........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:183

நெல்மணி தத்துவம்

விதைநெல் வீரியம் கொண்டு
மண்ணை முட்டி 
விண்ணைத் தொடலாம்
என்று இறுமாந்து
எழுந்து வரும் போது...
தலைக்கனம் அதிகமாகி
தொங்கிய தலையாய்
நிலையில் குனிவாய்
உழுதவன் அரிவாளுக்கு
உரிமையாகி - இங்கே ஒரு
உன்னதத் தத்துவத்தை
உணர்த்திடும் நெல்மணியே!

நிலை குனிந்த்தாலும்
மலையளவு உயிர்களை
நிலைத்து வாழச்செய்யும்
பொன்மணியே!
பொங்கலின் பரிசே!!
புதுப்பொலிவின் வாரிசே!!!

உன்னை உண்பதற்கு முன்பு
மண்தழுவிய வணக்கங்கள்!!!

-சித. அருணாசலம்,சிங்கப்பூர்.

 
m

 

சித.அருணாசலம் அவர்களது மற்ற படைப்புகள

  முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.