........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

 கவிதை:2

சந்தோஷம்.

உடலுக்குத் துணை பூமி; குடும்பத்திற்(கு)!
      உற்றதுணை நிகரில்லாப் பொறுமை; மாயக்
கடலான அறிவுக்குத் துணை அன்பாகும்
      கனல்தியானப் பயிற்சிகளும் செய்வோ மானால்-
நடமாடும் ஆலயம்தான் நம் உடம்பு
      நல்லெண்ண அலைகளையே எழுப்புகின்ற
கடமைக்காகவே வாழும் குருமகான்தான்-
      கனிவான அருளுக்குத் துணையாகின்றனர்!

சஞ்சலத்தில் எப்பொழுதெல் லாம் உன் நெஞ்சம்
      தவிக்கிறதோ! அழுகிறதோ! அந்த நேரம்
அஞ்சாத நிலைக்குவர ஆன்மாவை நீ!
      அமைதிப்படுத்த வேண்டும்.இல்லையெனில்
துஞ்சுகின்ற நோயுமுனைத் தொட்டெழுப்பித்
      தொற்றுமுனை! நடக்கலாமா? தேவைதானா?
வஞ்சமில்லா செய்கைகளை வளர்ப்போமானால்
      வளமான வாழ்வுக்குத் தடையே இல்லை!

ஆடுகளும் மாடுகளும் மான்கள் யானை
     அனைத்தும் ஒன்றுசேர்ந்து கொண்டு மேய்ந்தபோதும்
காடுகளின் ராஜனான சிங்கம் அங்கே
     காட்சியானால் எல்லாமே மிரண்டு தாவி
ஓடுவது போல்மனதில்- குணம் நன்றாக
     ஒளிருமானால் ஆராய்ச்சி கூர்மைப் புத்தி
கூடிவரும். பிறகென்ன பகை, மடைமை
     காம, சினம் ஒழிந்துவிடும். சந்தோஷம்தான்!

-கவிஞர்.வி.எஸ்.வெற்றிவேல்.

 

 

 

m

 

வி.எஸ்.வெற்றிவேல் அவர்களின் இதர படைப்புகள

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.