........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

 கவிதை:3

பாட்டுடைத் தலைவன்

 

 

 

பாட்டுடைத் தலைவன் நீ
    பைந்தமிழ்ப் புலவன் நீ
பாங்குலல் பாக்கள் தந்த
    பாவேந்தா ! பாரதிதாசா !

நேற்று நிறையுலகில் கண்ட
    நிகழ்வுகள் நின்னைத் தாக்க
நோக்குக பார்வை ஒரு புதுக்கோணம்
    நேரிய சிந்தை கொண்ட வீரியக் கவியே

சமத்துவம் பேசின நின் பாக்கள்
    சாதியெனுமோர் பேயோட்டினை
சங்கத்தமிழ் காத்த மொழியின் சிறப்பு
    சத்தமாய் உரைத்த உன் குரலே

ஏற்றி நின் புகழை யான் போற்றி
    ஏழை தமிழேழை யென் சிந்தை
ஏந்தலின் நினைவுதனை நெஞ்சில் பூட்டி
    என்றும் பணிவேன் உன் பாதங்களில்

 -சக்தி சக்திதாசன், லண்டன்.

 

 

 

m
 

சக்தி சக்திதாசன் அவர்களது இதர படைப்புகள

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.