........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

 கவிதை:4

அறிந்தும் அறியாமையும்...

பொருள்களெல்லாம் பூமித்தாய் பெற்றெடுத்த
புதுமைதான்! புரட்சியேதான்!! காற்று வான் நீர்
நெருப்பெல்லாம் இயற்கையின் தளகர்த்தர்கள்-
நெறிமாறாத் தூதர்கள்! இவர்களையே
கருப்பொருளாய், கடவுள் நினை! உம் பக்கம்
கவலைக்(கு) இடமில்லை உயிர்களையும்
முறைதவறி இயற்கையை நீ அழித்தால் -உன்னை
முழுவதுமாய் அழிக்காமல் விடா(து) உண்மை!

மலை, வனத்தைத் தீயிட்டுக் கொளுத்திவிட்டு
மழைவேண்டி நிற்கின்றாய்! உயிரையெல்லாம்
கொலைசெய்(து) இல்லையெனில் அவற்றைக் கொல்லும்
காரணத்திற் காளாகி விட்(டு) உன்னை
நிலைப்படுத்த சீவகாருண்ய மேடையேறி
நெஞ்சுருகப் பேசுகின்றாய்! மனதில் ஒன்றை
நிலைப்படுத்தி செயல்களெல்லாம் கொடுமை யென்றால்
நீயே உன்னை ஏமாற்றுவதாய் அர்த்தம்.

நிலையில்லா வாழ்க்கையென அறிந்திருந்தும்
நினைவை நீ! அதன்வசத்தில் கொடுத்துவிட்டு
அலைகின்றாய்! அதர்மத்தில் நனைந்து கொண்டு
ஆன்மீக தர்மத்தில் குளிர்காய் கின்ற
நிலையை நீ காலமெல்லாம் நிகழ்த்திடாதே!
நிஜமிதுதான்- தண்டனை தப்பானதுக்கு!
உலைவைத்து அதற்குள்ளே அறியாமையால்
உட்காரும் போக்கைவிடு நலமடைவாய்!

-கவிஞர்.வி.எஸ்.வெற்றிவேல்.

 

 

m

 

வி.எஸ்.வெற்றிவேல் அவர்களின் இதர படைப்புகள

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.