........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

 கவிதை:5

       உழைப்பின்  தினம்

உழைத்து உழைத்து
உரமேறிய கரங்கள்
இளைத்து இளைத்து
இளகிய உடல்கள்

வாழ்க்கை முழுவதும்
வாட்டத்தில் வாழ்வர்
நாளை அவர்களின்
நீண்டதோர் கனவே

தொழில் எனும் வேதம்
வறுமை எனும் மதம்
பசி அவர்க்கு நிதம்
வாழ்வதில்லை சதம்

உண்மையாய் உழைப்போர்
உலகில் வாழும் நிலை
கண் திறந்தால் தெரியும்
கண்ணீர் வடிக்கும் ஏழ்மை

சர்வதேச  உழைப்பளிகள் தினம்
சம்பிரதாயத்திற்கு கொண்டாட்டமா?
விழிப்புணர்வைத் தூண்டாமல் இவ்
விடுமுறையினால் என்ன பயன் ?

மேதினம் என்பதின் அர்த்தம்
மேதினியில் யாரறிவார் ?
உழைத்தும் உயரா நிலை
உடையும் காலம் வரை

தம்முடலைத் தினமும் வருத்தி
உழைப்போர் வாழ்வைத் திருத்தி
கருணை நெஞ்சில் நிறுத்தி
காண்போம் உலகில் உயர்ச்சி.

 -சக்தி சக்திதாசன், லண்டன்.

 

m
 

சக்தி சக்திதாசன் அவர்களது இதர படைப்புகள

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.