........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

 கவிதை:6

தீவீரவாதம்

வெற்றியெல்லாம் செயல்பாட்டின் காரணத்தால்
விதைகளெல்லாம் விருட்சங்கள் ஆகும்போது-
முற்றுமது தீவீரத்தால் விளைந்ததன்றோ?
முதுகொடிய வயல்காட்டில் பாடுபட்டோர்
முற்றியகதிர் காண்பார்; ஆமாம்! அந்த
மூச்சு தீவிரவாதம்தான்! நினைத்ததைநாம்
பெற்றதையே தீவீரச்சாகுபடி என்றும்,
பேராற்றல் பெறுவதற்கே பிறப்பெடுத்தோம்!

தேசத்தைக் காக்கத் தீவிரவாதத்தைச்
செயல்படுத்து! அதைநாசப் படுத்துகின்ற
மோசத்தை விளையாட்டுக்குக்கூட நீ
பேசிடாதே! தீவிரவாதத்தை நாளும்
மாசில்லாப் படிப்பில்வை!-அது உன்னையும்
மண்ணையும் உயாத்துகின்ற கருவியாகும்!
நேசமிகு நீதியில் தீவிரவாதத்தை
நிலைநிறுத்து! அநீதியிலே நிறுத்திடாதே!

சிவன் விஷ்ணு ஏசு அல்லா-எல்லார் மீதும்
தீவிரப்பற் றிருக்கட்டும் குற்றமில்லை!
எவற்றையும் அழிப்பதில்தீ விரவாதத்தை
ஏற்காதே! யாருக்கும் அவமானத்தை
தவறியும் செய்யாதிருக்கும் அறிவு வேண்டும்-
தெளிந்ததா? இனி தீவிரவாதத்தை நாம்
தவறாக அந்த வார்த்தைக்குக் களங்கம்
தளைக்காமல் பார்த்திருப்போம்! பற்றிக்கொள்வோம்!!

 -கவிஞர்.வி.எஸ்.வெற்றிவேல்

 

m

 

வி.எஸ்.வெற்றிவேல் அவர்களின் இதர படைப்புகள

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.