........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

 கவிதை:7

இந்த பூமிப்பெண்...?

இந்த வெயில்...
இன்று வெயில்...
இப்படி தகிக்கிறதே
ஏன்...?

சுட்டெரிக்கும் சூரியனின்
கந்தகக் குளியலில்
சுகம் காண்கிறாளா...
இந்த பூமிப்பெண்...?

இல்லை...
மறைந்து போன
சந்திரக் கணவனுக்காய்
மயானத்தீ மூட்டி
உடன்கட்டை ஏறினாளா...
இந்த பூமிப்பெண்...?

இல்லை...
எவராவது
அக்கினி அஸ்திரப்
பிரயோகம் செய்து
காயம்பட்டுத் தவிக்கிறாளா...
இந்த பூமிப்பெண்...?

தாங்க முடியாத அவளின்
துயரத்திற்கு மருந்தாய்
மழை வந்தாலாவது
மனம் குளிர்வாளா...
இந்த பூமிப்பெண்...?

இந்த வெயில்...
இன்று வெயில்...
இப்படி தகிக்கிறதே...

கவிமணி மா.துரை.

 

m
 

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.