........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

 கவிதை:8  

உயரத்தில் உலா வந்த இதயம்

நினைவுகளை நூலாக்கி
இதயமெனும் பட்டம் தனை
உயரத்திலே நானும்
உலா விட்ட வேளையிலே

நெற்றியிலே வியர்வைத்துளி
நெஞ்சத்திலே நேர்மை வழி
கைகளிலே உறுதி மொழி
கொண்டவனைக் கண்டு வந்தேன்

சமத்துவத்தின் வாசலிலே
சமுதாயச் சோலையிலே
சத்தியத்தின் வழி நடந்தும்
சாதித்தது ஒன்றுமில்லை

ஏக்கத்தோடு விழிமூடி
எதிர்பார்ப்புக்களோடு
கண் மலர்ந்து நிதமும்
என் தோழன் தவிப்பு

நாளையென்று ஒரு நாள்
நாளை வரும் என்றே
நம்பிவயன் வாழ்ந்தின்று
நெஞ்சம் விம்முகிறான்

கழுத்து நிறைய மாலையும்
காகிதத்தில் திட்டங்களும்
அரசியல் வியாபாரம் இங்கே
அழகாக நடக்குதப்பா

இல்லாதவனின் குறைகளில்
இருக்கின்ற லாபத்தை
ஈட்டுகின்ற வழிமுறைதான்
இன்றைய அரசியல்

இயற்கைதந்த வளங்களையே
சொந்தமாக்கிக் கொண்டு
காயவெளியைக் கூட இவர்
அளந்து விற்கும் காலம் இப்போ

பிறக்கும் போதும் ஒன்றாம்
இறக்கும் போதும் ஒன்றாம்
இடையில் மட்டும் மூடருக்கு
இறுமாப்பு உண்டாம்

உயத்தில் இருந்து இதயம்
உலகத்தில் கண்ட காட்சி
உதிரத்தை உகுக்கும் வேளை
உண்மைகள் இங்கே ஊமை

இழைபோல இருந்த நினைவுகளை
நிஜமெனும் கத்தரி கொண்டு
நிகழ்வாலே கத்தரிக்க என்னிதயம்
நிர்க்கதியாய் விழுந்ததம்மா

-சக்தி சக்திதாசன், லண்டன்.

 

m
 

சக்தி சக்திதாசன் அவர்களது இதர படைப்புகள

முந்தைய கவிதைகள் காண
 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.