........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 228

பாரதிதாசனே உன்னை வணங்கி...

 

புத்தம் புதுபிரவாகமாய்
புதுவையில் வெடித்தவனே - என்
புரட்சிப் பாவலனே
பாரதிதாசா வணங்குகிறேன் நின்னை

எந்தையின் வழிநின்று
என் அன்னையின் மொழி கண்டு
என்னகம் மகிழ்கையில்
எழுச்சிகொள் நின் கவிதைகளில்
எழுந்த என் உணர்வுகளில்
என்றுமே நிலையானாய்
என்னுள் நீ தீயானாய்

தமிழை நீ அமுதென்றாய்
அமுதை நான் சுவைக்காமல்
அதன் சுவை எனக்களித்தாய்
மாகவியின் கவிதைகளில்
மனதை நீ பறிகொடுத்தே
மாற்றினாய் உனை நீயே
பாரதிதாசனாய்

சமுதாய அடக்குமுறைகள்
சாதி, சமய வேற்றுமைகள்
அனைத்தையும் எதிர்த்து நீ
ஆயிரம் கவிதை தந்தாய்

மனிதனாய் பிறந்தது
மட்டுமே புவியினில் சிறப்பு அல்ல
மனிதராய் வாழ்வதன் அவசியம்
மனங்களில் புகுத்தி நின்றாய்

புதுவெள்ளம் பாய்ந்து
பயிர்கள் புத்துயிர் பெறுவது போல்
புரட்சிப் பாவலன் உன் கவிதைகளால்
பிறந்தது தமிழர்க்கு புதுவேகம்

அயல் நாட்டு மக்கள் இன்று
ஆறாத கண்ணீரில்
அவர்களின் துயர் அகல
அய்யா உன் நினைவுகளில்
அடிபணிந்து வணங்கி உன்னை
அன்னை மண்ணின் சொந்தங்கள்
அமைதி காண வேண்டி நின்றேன்.

-சக்தி சக்திதாசன், லண்டன்.
 

 

 

 

 

 

m

 

சக்தி சக்திதாசன் அவர்களது இதர படைப்புகள

  முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.