........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 237

மாவீரனே அழமாட்டோம்!

 

மாவீரனே
எமது நெஞ்சிலே
நீ விதையானாய்...

நாங்கள் அழமாட்டோம்...

உனது நினைவுகளை
நெஞ்சிலேத் தாங்கி
வீறுக் கொண்டெழுவோம்...

எழுதலும் விழுதலும்
பழுதன்று...
அழுதலும் துவளுதலும்
எங்களிடத்தில் இல்லை...

நாங்கள் அழமாட்டோம்...

மரணங்களை
நாங்கள் பழக்கிக் கொண்டோம்...

துன்பங்களும் துயரங்களும்
எங்கள் தொட்டில்கள்...

தாய்மண்ணில் கண்ணுறங்கு...
ஒருநாள்
ஈழத்தின் விடுதலை கீதம்
உன் செவிகளைத்
தாலாட்டாய்...வருடும்...!

-ஆர்.கனகராஜ்.

(மாவீரன் இறப்பு செய்தி கேட்டு எழுதப்பட்ட கவிதை இது. மாவீரன் இறப்பு பொய்யாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் நினைப்பு.)

 

 

 

 

 

m

 

ஆர்.கனகராஜ் அவர்களது மற்ற படைப்புகள்

  முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.