........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 243

சின்னச் சின்ன கவிதைகள்

ஓவியம்

உன்னழகாலே
தூரிகை செய்தாய்,
என் வெள்ளை மனதை
காதலெனும் சாயத்தில்
நனைத்தாய்...

ஒவிய‌மாய் மாறிப்போனேனே
உன் நினைவுகளைச்
சும‌ந்த‌ப‌டி.....

மின்விசிறி

அனுதின‌மும் சுற்றுகிறாயே,
காற்று இன்னும்
காத‌லிக்க‌வில்லையா உன்னை...

குழ‌ப்ப‌ம்

உன‌க்கென்ன‌,
பெய‌ர் கேட்ட‌தும்
மெள‌ன‌ப் புன்ன‌கை வீசி
ம‌றைந்துவிட்டாய்...

எத‌ற்கென்று நான்
குழ‌ம்புவேன்!!

உன் பெய‌ருக்கா? அல்ல‌து,
உன் புன்ன‌கைக்கா?

கோடை மழை

கோடை வெய்யிலில்
வானம் கூட
வியர்த்து விட்டதோ!!...

க‌விதை

உன் செல்ல‌ப்பெய‌ரை
என‌க்கு ம‌ட்டும்
சொல்லிவிடேன்,

ஒரே வார்த்தையில்
இன்னுமொரு க‌விதை
வேண்டுமாம்...

-ராம்ப்ரசாத்.
 

 

 

 

 

 

m

 

ராம்ப்ரசாத் அவர்களது மற்ற படைப்புகள்

  முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.