........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 244

நிஜங்களின் சொரூபம்

வாழ்க்கை என்னும் சந்தை
வியாபரிகளின் மந்தை
இன்பத்தை வாங்கித்
துன்பத்தை விற்றிட
துடித்திடும் நெஞ்சங்கள்
தொலைவினில் இருந்தே கவனி

இல்லாதவைகளுக்காய் ஏங்கி
இருப்பதை தாமாய் நீங்கி
நிரந்தர மாயையில் தூங்கி
நூற்றிடும் வேதனை ஓங்கி
மாற்றிடும் வேசங்கள் தாங்கி

கற்றிடும் பாடங்கள் யாவும்
கறிக்குதவா ஏட்டுச் சுரைக்காய்
சுற்றிடும் பொழுதுகள் யாவும்
சுரந்திடும் தெளிவிலா ஞானம்
கலைந்திடும் நிரந்தர மோனம்
காத்திடும் வேளைகள் யாவும்

வற்றிடும் குளத்தின் மீதினில்
ஒட்டிடும் கொக்குகள் உண்டோ?
நித்திய வாழ்க்கையில் கண்ட
நிஜங்களின் உண்மைச் சொரூபம்
நினவினில் நிறுத்தும் யதார்த்தங்களை
நெஞ்சத்தில் மிஞ்சிடும் அமைதி.

-சக்தி சக்திதாசன், லண்டன்.
 

 

 

 

 

 

m

 

சக்தி சக்திதாசன் அவர்களது இதர படைப்புகள

  முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.