........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 262

பிள்ளையார்பட்டி விநாயகனே...!

பொற்பதம் பணிந்தால் பேரருள் வழங்கும்
கற்பக மூர்த்தியே போற்றி - என்றும்
அற்புதம் நிகழ்த்தி னந்தம் சேர்க்கும்
ஆனைமுகப் பெருமானே போற்றி!

குடவறைக் கோயிலின் குன்றினில் அமர்ந்து
குறைகளைக் களைபவனே போற்றி - என்றும்
திரைகடல் ஓடித் திரவியம் சேர்ப்போரைக்
கரைவிளக்காய் காப்பவனே போற்றி!

திருவீசர் வலப்புறத்தில், திகழ்கின்ற கரிமுகனாய்,
அருள்வீசும் அத்திமுகனே போற்றி - என்றும்
வருமெந்தத் துயரெதையும் வாட்டியபின் இன்பத்தை
உருவாக்கும் நிரந்தரமே போற்றி.

கருவின் உயிருக்கும், கல்லறையின் விளிம்பிற்கும்
அருமருந்தான மணியே போற்றி - என்றும்
ஒருவிகல்பம் அறியா மனங்களை உயர்
கருவறையாக்கும் காரணமே போற்றி.

- சித. அருணாசலம், சிங்கப்பூர்.

 

 

 

 

 

 

m

 

சித.அருணாசலம் அவர்களது மற்ற படைப்புகள

        முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.