........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 266

கோலம் போட்ட அழகு!

மார்கழி மாதக்குளிரில்,
பனி பொழியும் ஓர்
அதிகாலை வேளையில்
தாமரைப் பூவைத்தாங்கும்
பச்சை நிற வட்ட
இலைகளை ஒத்த
மென்கரங்களால்
நீர் அள்ளித் தெளித்து
மண்வாசனையை
துயில் எழுப்பி-அவ்வாசம்
காற்றில் கரையும் முன்
புள்ளிமானாய்த் துள்ளிவந்து
வாழைக்குலை தாங்கும்
தண்டாய்ச் சாய்ந்து
புள்ளிகள் தெளித்தே
உயிரூட்டினாள்.
மண்ணில் எஞ்சி நிற்கும்
ஒப்பற்ற பேரழகி
வசிப்பது இங்குதான் எனப்
பறை சாற்றும் ஓர்
அழகான கோலத்திற்கு ...

-ராம்ப்ரசாத்.

 

 

 

 

 

 

m

 

ராம்ப்ரசாத் அவர்களது மற்ற படைப்புகள்

      முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.