........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 267

ஏன் இந்த மூன்று முடிச்சு ?

அறம், பொருள், இன்பம்-இம்மூன்றும்
அமைதி வழியில் பெற எண்ணம்!
ஒத்துழைக்கத் துணை வேண்டும்!
உடனிருந்து மகிழ வேண்டும்! -அதனால்
மூன்றுக்கும் மும்முடிச்சு
முகம் மலரப் போடுகின்றேன்.

(மாற்று)

என் விருப்பம் மீறி
எள்ளளவும் போகாதே!
உள்ள வேட்கைதனை-நான்
உரைக்காமல் உணரவேணும்!
உரிமை உரிமை என்று
ஒருகாலும் உளராதே! -இம்
மூன்றுக்கும் மும்முடிச்சு-பெண்ணின்
முகம் பின்னே போடுகிறேன்.

-பொன்பரப்பியான்
 

 

 

 

 

 

m

 

பொன்பரப்பியான் அவர்களது மற்ற படைப்புகள்

      முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.