........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 268

நெஞ்சு பொறுக்குதில்லையே..!

கஞ்சிக்கு உப்பு
கடன்பட மறுத்து
உப்பில்லாக் கஞ்சியுண்ட
எம்மினம்..!
இன்று..
அரைவயிற்றுக் கஞ்சிக்கு
அடுத்தவனை எதிர்பார்க்கும் நிலையறிந்து
நெஞ்சு பொறுக்குதில்லையே! - என்
நெஞ்சு பொறுக்குதில்லையே

மண்கும்பான் மணல்
மகிமையில்லை என்று
பளபளக்கும் நல்ல
பாலியாற்று மணலெடுத்து - தம்
பரம்பரைக்கு வீடுசெய்த எம்மினம்..!
இன்று
தாளத வேதனையில் தார்ப்பால்
கொட்டிலிலே தன்னந்தனி மரமாய்
நெஞ்சுச் சுமையோடும் நோயோடும் போராடும்
நிலைமைதனை எண்ணுகையில்
நெஞ்சு பொறுக்குதில்லையே! - என்
நெஞ்சு பொறுக்குதில்லையே..!

கொடிய இரக்கமிலா சிங்களத்தின்
கொடுங்கோல் இரணியர் ஆடசியோ
தொண்டு சபைதனை சென்றிடத் தடுத்து
தொற்றிய நோய்க்கு மருந்தைத் தடுத்து
கொட்டி எரிக்கிறான்!
தமிழன் உயிர்களைப் பறிக்கிறான்!
நெஞ்சு பொறுக்குதில்லையே! - என்
நெஞ்சு பொறுக்குதில்லையே..!

இது மட்டுமா..?
ஓடும் குருதியில் நீச்சலடித்தபடி
தூண்டல் ஊசியாய் துவக்கைப் பிடித்தபடி
முகமூடித் தமிழன் சிலர்
செய்யும் கொடும்செயலை
எண்ணியெண்ணி
நெஞ்சு பொறுக்குதில்லையே! - என்
நெஞ்சு பொறுக்குதில்லையே..!

-வேலணையூர் பொன்னண்ணா, டென்மார்க்.
 

 

 

 

 

 

m

 

       முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.