........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 277

அம்மா வழியே நம் வழி!

 

தாயே! தமிழுருவே!
ததும்பும் அன்பொளியே!

இயற்கை நெறி தழுவி
என்னுள் அதை விதைத்து
வாழ்க்கை வழிகாட்டியாய்
வாழ்ந்து வழிகடந்தாய்.

உழைப்புவழி உயர்வே-வாழ்வில்
ஓங்குபுகழ் சேர்க்கும் என்பாய்
உத்தமன் புகழ்எடுக்க-மனித
உறவில் உனை உணரு என்பாய்.

பந்தபாசம் வற்றிவிடின்-வாழ்வு
பாலைவனம் ஆகும் என்பாய்
பகுத்தறிவால் இடர்தவிர்த்து-உறவை
பலப்படுத்த முயலு என்பாய்.

சிக்கனமாய் இருந்து-வாழ்வை
செம்மைப்பட நடத்து என்பாய்
சிறுதனமாய் எண்ணாமல்-எதிலும்
சிறப்புக்கான பயிலு என்பாய்.

பட்டறிவு வழிநின்று-பால்
பண்புடனே வாழ் என்பாய்
கெட்டுவிட நேரம் வரா-இது உறுதி
கேண்மையே உன்சொத்து என்பாய்.

தத்துவமே உன்வாழ்க்கை-அம்மா
தனித்துவமே உன்செய்கை
அத்தனையும் நான் ஏற்பேன்-அம்மா
அமைதிவழி நான் நடப்பேன்.

-பொன்பரப்பியான்
 

 

 

 

 

 

m

 

பொன்பரப்பியான் அவர்களது மற்ற படைப்புகள்

       முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.