........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 287

மொழிக்காதல்.

 

தீதல், சாதலற்ற இளம்
கூதல் மொழியில் நீந்தி,
ஓதல், ஈதலில் இன்பமுடை
மொழிக் காதலென்னை அணைக்கிறது.

சீரான கருத்தை நிமிர்ந்து
தாராள மொழியில் கூறும்
நேரானமுறைக் காதலிது,
போராகவும் சமயத்தில் தோன்றும்.

கிள்ளாத மனச்சாட்சியின்றி
கள்ளமற்ற நெஞ்சு நிமிர்த்தி,
உள்ளதை உள்ளபடி மொழிதல்
முள்ளுகளற்ற தெளிவு வழி.

ஈனம், ஊனங்களை சமூகத்தில்
காணும் மனம், பேதமின்றிப்
பேணிடவும் கவிதை பொழிகிறது.
நாணமுறுவோர், நாகமாய்ச் சீறுவோர் பலர்.

வானம் பொழிகிறது, அது
தானம் செய்பவர் யார்,
மானம் உள்ளவர் யாரென
மீன மேசம் பார்ப்பதில்லையே!

உள்ளதை ஏற்க முடியாத
தெள்ளத் தெளிவு, நிதானமற்ற
உள்ளகக் கோணல் மனம் - தமிழ்
வெள்ளைக் காதலைப் புரியாது!!

-வேதா.இலங்காதிலகம்,
ஓகுஸ், டென்மார்க்.

 

 

 

 

 

m

 

வேதா.இலங்காதிலகம் அவர்களது மற்ற படைப்புகள்

         முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.