........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 288

புலிகள் புலம்புவதில்லை...

 

புலிகள் புலம்புவதில்லை...
பழையவை மாளலாம்
பெருந் தலைகளும் வீழலாம்!
ஆயினும் என்ன?
புலிகள் புலம்புவதில்லை!

புதிதாய்ப் புலிகள் தோன்றும்
பகை வெல்லப் பாயுமே மீண்டும்!
நகங்களைத் துறந்தாலும்
பற்களை இழந்தாலும்
புலிகள் புலம்புவதில்லை!

வல்லரச வல்லூறுகள்,
வஞ்சக ஓநாய்கள்,
கூடவே துணைக்குச் சில
கோடரிக் காம்புகள்,
குருதி குடித்துக்
கூத்தடித்தாலும்
காட்டிக் கொடுத்தாலும்
புலிகள் புலம்புவதில்லை!

மாட்சிகள் மறையலாம்...
போர்க் காட்சிகள் மாறலாம்...
புதுக் களங்களும் தோன்றலாம்...
போர் முறைகள் வேறாகலாம்...
ஆயினும் என்ன?
புலிகள் புலம்புவதில்லை!

அன்று ஆயுதத்தால் அரசியல்
இன்று அரசியலே ஆயுதம்!
பழைய பாதை ஊர் சேர்க்காவிடில்,
புதிய பாதையில்
பயணம் தொடரப்
புலிகள் புலம்புவதில்லை!

முள்வேலிக் கம்பிகளுக்குள்
முடங்கிக் கிடக்கும் சொந்தங்களை
மீட்பதில் தொடங்கி,
இலக்குகளை வென்று எடுக்கும் வரை,
இன விடுதலை கிடைக்கும் வரை,
இறுதிவரை உறுதியோடு
போராடப் புலிகள்
என்றும் புலம்புவதில்லை!

ஆம், புலிகள் என்றுமே
புலம்புவது இல்லை!!

-குறும்பலாப்பேரி பாண்டியன், சென்னை.

 

 

 

 

 

m

 

குறும்பலாப்பேரி பாண்டியன் அவர்களது மற்ற படைப்புகள

         முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.