........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 295

நீ(ர்)தான்...!

 

எப்போதும்
எங்களோடு இருப்பது
நீயா? இறைவனா?

எப்போதும்
எங்களுக்குத் தேவை
நீயா? இறைவனா?

எங்களை வாழவைப்பது
நீயா? இறைவனா?

எங்களை இயக்குவதும்
எங்களுக்காக இயங்குவதும்
நீயா? இறைவனா?

உணவுக்கும் தொழிலுக்கும்
உறுதுணை
நீயா ? இறைவனா?

உலகு தொழவேண்டியது
உன்னையா? இறைவனையா?

நீயின்றித் தெய்வம்
உண்டா? தேவையா?

ஐயமில்லை

அய்யன் சொன்னதையே
நானும் சொல்கிறேன்...
“நீதான்....நீதான்!
நீர்தான்... நீர்தான்..!”

-பிச்சினிக்காடு இளங்கோ.

 

 

 

 

 

 

m

 

பிச்சினிக்காடு இளங்கோ அவர்களின் இதர படைப்புகள

         முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.