........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 300

ஆகஸ்டு பதினைந்தாம் நாள்!

 

ஆகஸ்டு பதினைந்து-ஆம்!
ஆங்கிலேயர் அகன்ற நாள்
ஒழுங்கு கட்டுப்பாடின்றி-உலவ
உமை கிடைத்த நாள்.

உழைப்பவர் எண்ணிக்கை-தினமும்
ஒவ்வொன்றாகக் குறைய
உழையாதோர் செல்வாக்கு-நாட்டில்
உயர வித்திட்ட முதல்நாள்.

தனிமனிதன் புகழ்பாட-இங்கு
தழைக்கின்றது கட்சி
தன்னலப் புலிகள் கையில்-தினம்
தவிக்கின்றது மனசாட்சி

ஊழலின் உதவி கொண்டே-தானே
உயர்ந்து கொண்ட தலைவர்கள்
உண்மை கக்கும் மானிடனின்-தூய
உயிர் குடிக்கும் துப்பாக்கிகள்.

அடுக்கடுக்காய் மாளிகைகள்-இங்கு
ஆளுநனின் கேளிக்கைகள்
உழைப்பவனால் இவைகள் செய்ய-இங்கு
ஒருகாலும் முடியுமா?

உயர்ந்து நிற்கும் மாளிகைகள்-இங்கு
உயர்ந்த ரக ஊழலுக்கு உதாரணங்கள்
கண் மயக்கும் பல நிறங்கள்-தீயோனின்
காயத்தின் வகை தொகைகள்.

காசுக்காவே-இங்கே
கரையும் மனம் ஏராளம்
கண்ணியம் பேசிக் கொண்டே-உயிரை
கசக்கி எடுக்கும் தீப்படலம்

பூமாலை போலிக்கு-துதிக்கும்
புகழ்மாலை குரலொலிக்கு
பாமாலை தீச்செயலுக்கு-இங்கே
பணமாலை பதவி வெறியனுக்கு.

பிடித்த நாற்காலியை-சிறிதும்
பிரளாமல் காத்துக்கொள்ள
துடிப்புடனே மேடைதோறும்-தினமும்
தூக்கிக் காட்டும் சவுகர்யங்கள்

ஒழுங்கீனம் மறைத்துக் காட்ட-உழைப்போன்
உணர்ச்சிக்கு ஐஸ் வைக்க-ஆண்டுதோறும்
ஊழலர்கள் ஞாபகமூட்டும்-இந்தியாவின்
உழையாதோன் சுதந்திர நாள்

--பொன்பரப்பியான்.

 

 

 

 

 

 

m

 

பொன்பரப்பியான் அவர்களது மற்ற படைப்புகள்

           முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.