........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 301

தொப்புள் கொடி .....?

 

ஏதேன்சு நகரத்து
தீவந்து
வயிற்றுள்ளே ஒப்பாரி வைக்கிறது.

நைல் நதியோடு
போட்டி போடுகிறது
கண்ணீர் ஆறு.

நொருங்கி
விழுந்த இதயத்துண்டுகள்
சிதறி
கவிதைகளாகிக்
கிடக்கிறது.

இந்த இடத்திலும்
கவிதையா என நீ கேட்கலாம்.
வேறென் செய்ய
பீரங்கிகளுக்கு முன்னே நின்று
கல்லெறியும்
பாலஸ்தீனச் சிறுவன் நிலை

தொப்புள் கொடி
கூட
நஞ்சுக்கொடியாகிப் போயிற்று....

மைக்கல் ஜாக்சனுக்காக
கொட்டிய
ரகுமான் விழிகள்
எமக்காக
ஒரு துளி சொட்டவில்லை

விஞ்ஞானத்தமிழ் மகன்
கலாமுக்கோ
ஒரு வார்த்தை செலவிட
நேரமில்லை.

கதை தேடும்
இயக்குனர்கள் கூட
எங்கள் கண்ணீர்க் கதையினை
கடன் கேட்கிறார்கள்.

தமிழகத்து
அரசியல்வாதிகளோ
பேசும் பொருளுக்காக
எங்கள் பிணங்களை தோண்டி
எடுக்கிறார்கள்.

மூத்திரத்தைக்
கயிறென எண்ணியதன்
விளைவு.

ஒளிந்திருந்து கல்லெறியும்
தரகர்களல்
கூடிழந்து போயின
குருவிகள்.

சிறு துரும்பையேனும் பிடித்து
கரை சேர முயலும்
எறும்பின் நிலை
எமது .....!

-மட்டுவில் ஞானக்குமாரன், கொழும்பு.
 

 

 

 

 

 

m

 

மட்டுவில் ஞானக்குமாரன் அவர்களது மற்ற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.