........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 302

கவிதையே மனைவியாவாயா?

 

மறக்கத்தான் நினைக்கிறேன்
முடியவில்லை
ஏன்னை மறந்துவிடுங்கள்
என்று மூச்சுவிடாமல்
சொல்லிவிட்டாய்
என் மூச்செல்லாம் நீதான்
எனத்தெரியாமல்...

பேசாதே என்றாய்
நான் பேசும் வார்த்தைகள்
எல்லாம் உன்னைப்பற்றித்தான்
எனதெரியாமல்
நினைக்காதே என்றும்
சொன்னாய் என்
நினைவுகளில் நீ மட்டுமே
எனத்தெரியாமல்...

கோபத்தில் நீ பேசும்
வார்த்தைகளும் கவிதையாய்
தெரியும் என் மனதுக்கு
ஏனென்றால்
கோபமும் தாகமும்
கலந்ததுதானே காதல்...

அடி பைத்தியமே
என் கவிதைகள் கூட
உன்னை மட்டும்தான்
சுவாசிக்கின்றது..!

அன்பே
மறந்து விடுகிறேன்
நீ சொன்ன மறந்துவிடுங்கள்
என்ற வார்த்தையை...

கவிதையாய் நுழைந்த
நீ மனைவியாய்
என் மடிதனில்
சாய்வது எப்போது..?

-த.சத்யா,இராஜபாளையம்.
 

 

 

 

 

 

m

 

த.சத்யா அவர்களின் இதர படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.